அப்பா வயது நடிகருடன் நெருக்கம் காட்டும் இளம் கதாநாயகி

0
238

பாலிவுட் திரைப்பட இயக்குநர் மகேஷ் பட் பிறந்தநாளுக்கு அவருடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு நடிகை ரியா சக்ரவர்த்தி தெரிவித்த ஒரு வாழ்த்து நெட்டிசன்களை கொதிப்படையச் செய்துள்ளது.

இந்தி சினிமாவின் மூத்த இயக்குநர்களில் ஒருவர் மகேஷ் பட். இவர் பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் தந்தை. இவர் சமீபத்தில் தனது 70வது பிறந்தநாளை கொண்டாடினார்.

இதற்காக மகள் பூஜா பட், ஆலியா பட், ஷாஹீன் பட்டுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவர் வெளியிட்டார். அது சமூகவலைதளங்களில் பெரியளவில் வைரலானது.

பாலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையான ரியா சக்ரவர்த்தி, மகேஷ் பட்டின் பிறந்தநாளுக்கு அவருடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

70 வயதான மகேஷ் பட்டுடன், 26 வயதான ரியா நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் அதை சகட்டுமேணிக்கு கலாய்த்து கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

குறிப்பாக மகேஷ் பட் இயக்கும் படங்களில், கதாநாயகியாக வேண்டும் என்ற எண்ணத்துடன் ரியா இந்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.