ஐஸ்வர்யாவைவிட யாஷிகாவை நாமதான் ரொம்ப மிஸ் பண்ணுவோம்… ஏன்னா?

0
257

பிக்பாஸ் போட்டியில் எந்தவொரு போட்டியாளர் வெளியேறினாலும் அத்தனை உணர்வுவயப்படாத என்னை முதன்முதலில் சலனப்படுத்தியது மும்தாஜின் வெளியேற்றம்தான்.

ஆனால் அதைவிடவும் அதிகமாக யாஷிகாவின் வெளியேற்றத்தினால் இன்று உணர்வுவயப்பட நேர்ந்தது. இந்த இளம் வயதில் அவரிடம் எத்தனை நிதானம், முதிர்ச்சி, பக்குவம்!

‘I admire you’ என்று கமலே நெகிழ்ந்து வியக்குமளவுக்கான நேர்மை அவரது பிரிவு உபச்சார பேச்சில் வெளிப்பட்டது. தனக்கேற்பட்ட ‘காதலை’ பொதுச்சபையில் அதுவும் பெற்றோர்களுக்கு முன்னால் சொல்வது முதற்கொண்டு `எனக்குள்ள ஒரு பொண்ணு இருக்குன்றதையே இங்க வந்துதான் தெரிஞ்சுக்கிட்டேன்’ என்பது வரை பல ஆதாரமான விஷயங்களை தனது எளிமையான பேச்சால் சொல்லிச் சென்றார். நம்மையும் அதிகமாக கவர வைத்து விட்டார்.

aaaaaaaமிகக் குறிப்பாக அவரிடமிருந்து வெளிப்பட்ட தாய்மையுணர்வு அற்புதம். “ஐஸ்வர்யா எனும் குழந்தை வளர்வதற்கு எனக்குள் இருந்த குழந்தைமையை விட்டுத்தந்தேன்’ என்ற வாக்கியம் அடிக்கோடிட்டு கவனிக்கும் அளவுக்கு அத்தனை அபாரமானது.

வெளியேறுவதற்கு முன்னால் ‘இவளைத் தனியா விடாதீங்க. சாப்பிட மாட்டா.. சரியா தூங்க மாட்டா’ என்று இதரப் போட்டியாளர்களிடம் வேண்டுகோள் வைத்தது நெகிழ வைத்த காட்சி. 28 வயது பெண்ணுக்கு 19 வயது இளம்பெண் தாயாக இருக்கும் அதிசயம் பிக்பாஸ் வீட்டில் நிகழ்ந்தது.

மேற்கத்திய நாடுகளில் அறிமுகமில்லாத நபர்களை கூட எதிரில் கண்டால் புன்னகையுடன் முகமன் சொல்லிக்கொள்ளும் கலாசாரம் இருக்கிறது. நம்மிடம் அப்படியில்லை.

பழகும் வரை, ஓர் அந்நியரை விலகலான மனநிலையில் இருந்துதான் நோக்குகிறோம். ரயிலில் எதிர்சீட் ஆசாமியை ஆக்கிரமிப்பு செய்ய வந்த எதிரியாகவே பார்க்கத் துவங்குகிறோம்.

ஆனால் பழகி விட்டால் சட்டென்று மறக்க மாட்டோம் என்பது வேறு விஷயம். இதைப் போலவே பிரபலங்களை நாம் ஒருபக்கம் விரும்பினாலும் இன்னொரு பக்கம் அவர்களைப் பற்றி மலினமாகவும் எள்ளலாகவும் பேசவும் எண்ணவும் தயங்குவதில்லை.

அதிலும் கவர்ச்சி நடிகைகளைப் பற்றி நம்மிடமுள்ள மனப்பதிவுகள் மிகவும் எள்ளலானவை. அவர்களின் தனிப்பட்ட பக்கங்களைப் பற்றி அறியும் வாய்ப்பு நமக்கு கிடைப்பதில்லை. அறியவும் நாம் முயற்சிப்பதில்லை.

news2_10032

யாஷிகாவும் அப்படியொரு ‘கவர்ச்சி நடிகை’ என்கிற பின்புலத்தில்தான் இந்த நிகழ்ச்சிக்குள் வந்தார். ‘இளம் தலைமுறை’ என்கிற காரணத்தினால், ‘ஐஸ்வர்யா, மஹத், டேனி, ஷாரிக்’ என்கிற தன்னிச்சையான கூட்டணி உருவாகியது.

அந்த வயதுக்கேயுரிய கலாட்டாக்களை இவர்கள் செய்து மூத்தவர்களின் அதிருப்தியைச் சம்பாதித்தார்கள். ‘மற்றவர்களை உபயோகப்படுத்திக் கொள்கிறார்’ எனகிற அவப்பெயரையும் யாஷிகா சம்பாதித்தார்.

அது இனக்கவர்ச்சியோ அல்லது காதலோ, மஹத்தோடு ஓர் உறவு உருவாகியது. அதை வெளிப்படுத்தும் நேர்மையும் இவரிடம் இருந்தது. ‘அக்கா.. ஆரவ்வைப் பார்த்தா ஒரு மாதிரியா ஆகுதுக்கா’ என்று முதலில் சொல்லி விட்டு பிறகு சில காரணங்களால் மறுத்த, கடந்த சீஸன் ஜூலியைப் போல யாஷிகா எதையும் மறைக்கவில்லை. சபையிலும் அதைப் பற்றி வெளிப்படையாக பேசினார்.

தங்களின் நண்பர்கள் ஒவ்வொருவராக வெளியேறும் போது அது சார்ந்த மாற்றங்கள் யாஷிகாவிடம் தெரிந்தன. அனைத்துச் சோகங்களையும் தனக்குள் புதைத்துக் கொள்ளும் கல்லுளி மங்கியாக இருந்தார்.

ஐஸ்வர்யாவின் தரப்பில் பிழைகள் இருந்தாலும் கூட அவரை விட்டுக் கொடுத்ததில்லை. ஆங்கிலத்தில் பேசி விட்டு பிறகு அழிச்சாட்டியம் செய்த ஐஸ்வர்யாவை ஒரேயொரு முறை பயங்கரமாக கண்டித்து விட்டு பிறகு அதற்காகவும் கண்கலங்கினார். ‘என் பிரெண்ட்ஸ் யாரையும் நான் விட்டுக்கொடுத்ததில்லை. ஆனா அவங்க செஞ்சிருக்காங்க’ என்று அவர் மேடையில் சொன்னது உண்மைதான்.

“நான் பிறந்தப்ப கூட அழலை –ன்னு சொல்லுவாங்க. அப்படியொரு ஜென்மம். Dumb piece’ என்று தன்னைப் பற்றி சொல்லிக் கொண்டாலும் எளிதில் உணர்ச்சிவயப்படாத சமநிலைத்தன்மை அவரிடம் இருந்தது.

பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளுக்கு மட்டுமல்ல, சமூகத்தில் இயங்குவதற்கு கூட இந்தக் குணாதிசயம் அவசியமானது. விளையாட்டுப் போட்டிகளில் மிக ஆர்வமாக பங்குகொண்டார். சில பல புகார்கள் இவர் மீது சொல்லப்பட்டாலும் ‘இறுதிப்போட்டியில் வெல்லக்கூடியவர்’ என்று மற்றவர்களை ஆத்மார்த்தமாக சொல்ல வைக்கும் அளவிற்கு இவரது பங்களிப்பு இருந்தது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.