ராணுவத்துக்கு அதிகாரத்தை தாருங்கள் யாழில் ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்குவோம்-யாழ்.மாவட்ட இராணுவ தளபதி

0
171

நாட்டில் தற்போது சட்டம் ஒழுங்கு என்பன காவல்துறையினரிடம் உள்ளன. அதனால் அவற்றில் நாம் தலையிடுவதில்லை.

யாழில் உள்ள ஆவா குழு போன்ற கோஸ்டிகளை அடக்குவது எமக்கு பெரிய சவால் இல்லை இரண்டு நாளுக்குள் அடக்கி விடுவோம்.

காவல்துறையினரினால் அவர்களை அடக்க முடியாது என இராணுவத்தின் உதவியை நாடினால் உதவ நாம் தயாராக உள்ளோம் என யாழ்.மாவட்ட இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

அதற்காக தொடர்ந்து இவ்வாறான வன்முறை சம்பவங்களை நாம் பொறுமையாக பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

ஜனாதிபதியிடம் யாழில் நடக் கும் வன்முறைகளை கட்டுக்குள் கொண்டுவர இராணுவத்தினருக்கு அனுமதியளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். அதற்கான அனுமதிக்காக காத்திருக்கிறோம்.

தற்போதைய சூழ்நிலையில் வன்முறையில் ஈடுபடும் இளைஞர்களை இராணுவத்தினர் கைது செய்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தால் , இராணுவம் தமிழ் இளைஞர்களை கைது செய்கிறார்கள் என இராணுவத்தின் மீது குற்றச்சாட்டுக்களை முன் வைப்பார்கள். அதனால் பொறுமையாக இருக்கின்றோம் என மேலும் தெரிவித்தார்

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.