12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (செப்டம்பர் 21 – செப்டம்பர் 27) பலன்கள்

0
814

 

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (செப்டம்பர் 21 – செப்டம்பர் 27) பலன்களை ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பயனடைவோம்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

கவலைகள் குறையத் தொடங்கும். உடல் ஆரோக்கியம் சீராகவே இருக்கும். நண்பர்கள் சாதகமாக நடந்து கொள்வார்கள். உடன்பிறந்தோர் வழிகளில் நிலவிய மனக்கசப்பு நீங்கும். பொருளாதாரத்தில் படிப்படியான முன்னேற்றம் ஏற்படும்.

உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கும். மேலதிகாரிகளை அனுசரித்து நடந்துகொண்டால் செல்வாக்கு அதிகரிக்கத் தொடங்கும்.

வியாபாரிகள் கடுமையாக உழைக்க வேண்டிய நேரமிது. காலதாமதம் ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றி வாயிற்கதவை தட்டும். விவசாயிகளின் உடல் உழைப்புக்கு இரு மடங்கு லாபம் கிடைக்கும். பழைய கடன்கள் தீரும்.

அரசியல்வாதிகள் சிரமமின்றி வெற்றிகளைப் பெறுவீர்கள். தொண்டர்களிடம் இணக்கமாக நடந்து கொள்வீர்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். வருமானம் பெருகும்.

பெண்மணிகள் கணவரை அனுசரித்து நடந்து கொள்ளவும். பணவரவுக்குக் குறைவு இருக்காது. மாணவமணிகள் கல்வியில் அதிக அக்கறை செலுத்துவீர்கள். பெரிய சாதனைகளுக்கு  அடித்தளம் போடுவீர்கள்.

பரிகாரம்: நவக்கிரகத்திலுள்ள சூரிய கடவுளுக்கு ஞாயிறு அன்று அர்ச்சனை செய்யவும்.

அனுகூலமான தினங்கள்: 21, 22.

சந்திராஷ்டமம்: இல்லை.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்படும். உங்கள் செயல்கள் தடைகளைத் தாண்டி வெற்றி பெறும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். மதிப்பு மரியாதைக்கு எந்த பங்கமும் வராது. உற்றார் உறவினர் வருகை மகிழ்ச்சி தரும்.

உத்தியோகஸ்தர்களுக்கு சிரமங்கள் குறையும். மேலதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல்களில் மந்த நிலையை காண்பீர்கள். கூட்டாளிகளிடமும் மனக்கசப்புகள் உண்டாகலாம். விவசாயிகள் உற்பத்தி பொருள்களை அதிக லாபம் எதிர்பார்க்காமல் விற்பனை செய்வீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் அந்தஸ்தான பதவிகள் கிடைக்கும். தொண்டர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

பணவரவும் அதிகரிக்கும். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமையில் சில பாதிப்புகள் ஏற்படும். எதையும் வெளிப்படையாகப் பேசுவதைத் தவிர்க்கவும். மாணவமணிகள் படிப்பில் அதிக கவனம் செலுத்தினால்தான் மதிப்பெண்கள் அதிகமாகும்.

பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வழிபடவும்.

அனுகூலமான தினங்கள்: 21, 23.

சந்திராஷ்டமம்: இல்லை.

 

மிதுனம் (மிருகசீரிஷம்3-ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

அளவுக்கு மீறின யோசனைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.  கடினமாக உழைத்து வெற்றி பெறுவீர்கள். வீட்டிற்குத் தேவையான உபகரணங்களை வாங்குவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும். ஆனாலும் திட்டமிட்ட வேலைகளை முடிக்க சிரமப்படுவீர்கள். மேலதிகாரிகளின் சொற்படி நடக்கவும்.  வியாபாரிகளுக்கு கூட்டாளிகள் உதவுவார்கள். சொத்து தகராறு ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். வரவும் செலவும் சரியாகவே இருப்பதால் புதிய முயற்சி வேண்டாம்.

அரசியல்வாதிகள் வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். கொடுத்த பொறுப்புகளை கவனத்துடன் முடிக்கவும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். பொறுமையுடன் செயல்பட்டால் பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.

பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சுமாராகவே காணப்படும். விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும். மாணவமணிகள் உள்ளரங்கு விளையாட்டுகளில் மட்டுமே ஈடுபடவும்.

பரிகாரம்: விநாயகரை அருகம்புல் மாலை சாற்றி வழிபடவும்.

அனுகூலமான தினங்கள்: 22, 23.

சந்திராஷ்டமம்: 21.

கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

உங்கள் எண்ணங்கள் செயல் வடிவம் பெறும். புதிய ரகசியங்களை அறிவீர்கள். சமுதாயத்தில் உங்கள் மரியாதை உயரும். குடும்பத்தினர் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள்.

உத்தியோகஸ்தர்கள் பணிகளை திட்டமிட்டு செய்து முடிப்பார்கள். பிறரிடம் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். வியாபாரிகளுக்கு சுமுகமான நிலைமை தென்படும். போக்குவரத்து தேவைகளைப் பழுது பார்ப்பீர்கள். விவசாயிகள் கவனத்துடன் செயல்பட வேண்டிய நேரமிது. கால்நடைகளால் லாபம் அடைவீர்கள்.

அரசியல்வாதிகள் சாதுர்யத்துடன் எதிரிகளுக்கு பதிலடி கொடுப்பீர்கள். மேலிடத்தின் பாராட்டுகளைப் பெற்று நன்மதிப்பையும் பெறுவீர்கள்.  கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் சுமாராகவே இருக்கும். கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி முன்னேறவும். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சீராக இருக்கும். சுற்றுலா தலங்களுக்கும் செல்ல வாய்ப்பு உண்டாகும். மாணவமணிகள் படிப்பில் கவனம் செலுத்தவும்.

பரிகாரம்: ஸ்ரீ ராமபிரானை வழிபட்டு வர நன்மைகள் தேடி வரும்.

அனுகூலமான தினங்கள்: 21, 25.

சந்திராஷ்டமம்: 22, 23, 24.

 

சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

எந்தச் செயலிலும் உங்கள் தனித்தன்மை வெளிப்படும். எதிர்களின் பலம் குறையும். சமூகத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை உயரும். வசீகரமான பேச்சினால் பிறரைக் கவர்வீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். சக ஊழியர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும். அலுவலகப் பணியை கவனமாகக் கையாளவும். வியாபாரிகள் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். சாதுர்யத்துடன் செயல்பட்டு வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். விவசாயிகள் புதுப்புது யுக்திகளைக் கையாண்டு விவசாயத்தைப் பெருக்கவும்.

அரசியல்வாதிகளின் பதவிகளுக்கு நெருங்கிய நண்பர்கள் மூலமாகவே சில இடையூறுகள் ஏற்படலாம். மாற்றுக் கட்சியினரிடம் மனம் திறந்து பேச வேண்டாம். கலைத்துறையினரைத் தேடி புதிய வாய்ப்புகள் வரும். வரவேண்டிய பணமும் கிடைக்கும்.

பெண்மணிகள் குடும்பத்தில் வெற்றிகளைக் காண்பீர்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு. மாணவமணிகள் கல்வியில் முன்கூட்டியே அக்கறை காட்டினால் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கும்.

பரிகாரம்: சிவபெருமானை “நமசிவாய’ என்று ஜபித்து வணங்கவும்.

அனுகூலமான தினங்கள்: 24, 27.

சந்திராஷ்டமம்: 25, 26.

 

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். முயற்சிகளை சரியாகத் திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள். வருமானத்திற்கு குறைவு இருக்காது. முக்கியத் தேவைகள் பூர்த்தியாகும். தர்ம காரியங்களில் முடிந்தவரை ஈடுபடவும்.

உத்தியோகஸ்தர்கள் அனைத்து வேலைகளையும் குறித்த காலத்திற்குள் முடிப்பீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். சக பணியாளர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும். வியாபாரிகள் புதிய சந்தைகளை நாடிச் சென்று வியாபாரத்தைப் பெருக்கவும். புதிய முதலீடுகள் வேண்டாம். விவசாயிகள் நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்ளவும். கால்நடைகளுக்கு பராமரிப்புச் செலவுகள் செய்ய நேரிடும்.

அரசியல்வாதிகள் முக்கியமான பதவிகளைப் பெறுவீர்கள். அரசு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கலைத்துறையினர் பாராட்டுகளைப் பெறுவீர்கள். புதிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளவும்.

பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். உடலும் மனமும் பலப்படும். மாணவமணிகள் ஓய்வை தவிர்த்து பாடங்களை மனப்பாடம் செய்யவும்.

பரிகாரம்: வியாழனன்று குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபடவும்.

அனுகூலமான தினங்கள்: 23, 24.

சந்திராஷ்டமம்: 27.

 

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் நெடுநாள்களாக வாட்டி வந்த நோய் நொடிகள் நீங்கும். மகிழ்ச்சி நிறையும். உடன்பிறந்தோரும் நண்பர்களும் ஆதரவு தருவார்கள். நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

உத்தியோகஸ்தர்களுக்கு பிரச்னைகள் குறையும். மேலதிகாரிகள் மனக்கசப்பு நீங்கி நட்புடன் நடந்து கொள்வார்கள். வியாபாரிகளுக்கு அரசாங்கத்தால் அனுகூலம் ஏற்படும். புதிய சந்தைகளை நாடிச் செல்வீர்கள். விவசாயிகளுக்கு பயிர்களில் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும். கால்நடைகளால் நல்ல லாபம் உண்டாகும்.

அரசியல்வாதிகள் எடுத்த காரியங்களில் தொய்வு நிலையை சந்திப்பீர்கள். மேலிடத்தின் ஆதரவும் தொண்டர்களின் ஆதரவும் குறையும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். ரசிகர் மன்றங்களுக்கு செலவு செய்து மகிழ்வீர்கள். பெண்மணிகளுக்கு இது மகிழ்ச்சிகரமான வாரம்.

குடும்பத்திலும் உறவினரிடத்திலும் கௌரவம், அந்தஸ்து உயரும். மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். உள்ளரங்கு விளையாட்டுகளிலும் ஈடுபடுவீர்கள்.

பரிகாரம்: மஹாலட்சுமியை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 24, 25.

சந்திராஷ்டமம்: இல்லை.

 

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

திட்டமிட்ட வேலைகளில் தாமதம் ஏற்பட்டாலும் முடிவு நீங்கள் எதிர்பார்த்தபடியே அமையும். எல்லா செயல்களையும் உங்களை சார்ந்தவர்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்வீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் தடைபட்டிருந்த காரியங்களில் வெற்றிவகை சூடுவீர்கள். பதவி உயர்வுக்கான வழிகள் பிறக்கும். வியாபாரிகளுக்கு  கொடுக்கல் வாங்கல் சுமுகமாகவே முடியும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். விவசாயிகளுக்கு தானிய விற்பனையும் பால் வியாபாரமும் நன்றாகவே நடக்கும்.

அரசியல்வாதிகள் முக்கியப் பொறுப்புகளையும் பதவிகளையும் பெறுவீர்கள். அரசு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கலைத்துறையினருக்கு அங்கீகாரம் கிடைக்கும். சக கலைஞர்கள் உதவுவார்கள்.
பெண்மணிகளுக்கு கணவரிடம் அன்பு அதிகரிக்கும். குடும்பத்தினரிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொள்ளவும். சுற்றுலா சென்று வருவீர்கள். மாணவமணிகள் பாடங்களை மனதில் ஏற்றிக் கொண்டு கவனமாக படித்தால்தான் நினைத்த மதிப்பெண்களைப் பெற முடியும்.

பரிகாரம்: அம்பாளை வழிபட்டால் சகல காரியங்களும் சித்தியாகும்.

அனுகூலமான தினங்கள்: 23, 26.

சந்திராஷ்டமம்: இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

வருமானம் சிறப்பாக இருக்கும். வாராக் கடன்கள் வசூலாகும். வீடுகட்டும் முயற்சியில் இறங்கினால் காரியம் கைகூடும் நேரமிது. நண்பர்களுடன் சமுகமான உறவை ஏற்படுத்திக் கொள்ளவும்.

உத்தியோகஸ்தர்கள் திட்டமிட்ட வேலைகளை முடிப்பீர்கள். உழைப்புக்குத் தகுந்த ஊதியம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். புதிய முதலீடுகளைச் செய்யலாம். புதிய வியாபார நுணுக்கத்துடன் தொழிலை விரிவு படுத்தலாம். விவசாயிகள் உற்பத்திப் பொருள்களின் விற்பனையில் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். புதிய முதலீடுக்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பு மரியாதை உயரும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். வருமானம் அதிகரிக்கும்.
பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சீராக இருக்கும். உடல்நலமும் மனநலமும் நன்றாக இருக்கும். மாணவமணிகள் கல்வியில் முன்னேற கடுமையாக உழைக்கவும்.  ஆசிரியர்களின் ஆதரவு நன்றாக இருக்கும்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபடவும்.

அனுகூலமான தினங்கள்: 22, 26.

சந்திராஷ்டமம்: இல்லை.

 

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

தைரியத்துடன் திட்டமிட்டு பணியாற்றுவீர்கள். பணவரவு சரளமாக இருக்கும். உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் உதவுவீர்கள். சிலருக்கு வழக்கு விவகாரங்கள் சாதகமாக முடியும். எதிரிகளின் போட்டிகளைச் சமாளிப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். அலுவலகம் தொடர்பாக சிறு பயணங்களை மேற்கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய யுக்திகளை கையாள்வீர்கள். விவசாயிகள் எதிலும் முன்னெச்சரிக்கையுடன் ஆராய்ந்து செயல்பட்டால் நஷ்டங்களைத் தவிர்க்கலாம்.

அரசியல்வாதிகள் எதிர்கட்சிக்காரர்களிடம் கவனமாக இருக்கவும். கட்சி மேலிடத்திடமும் எச்சரிக்கை தேவை. கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களினால் மன மகிழ்ச்சி உண்டாகும். திறமைகளை வெளிக்கொணரும்படியான சந்தர்ப்பங்கள் நிகழும். பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையை காண்பீர்கள்.

கணவரிடன் பாராட்டுகள் கிடைக்கும். மாணவமணிகள் கல்வியில் முன்னேற்றம் அடைவீர்கள். விளையாட்டுகளில் ஆர்வம் குறையும்.

பரிகாரம்: செவ்வாய்தோறும் வளசரவாக்கம் வேங்கட சுப்ரமணியரை வழிபடவும்.

அனுகூலமான தினங்கள்: 23, 27.

சந்திராஷ்டமம்: இல்லை.

 

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

வருமானம் ஓரளவுக்குச் சீராக இருந்தாலும் வீண் விரயங்களும் ஏற்படும். நண்பர்களின் அலட்சியத்தைப் பெரிது படுத்த வேண்டாம். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும்.

அலுவலக வேலைகள் திட்டமிட்டதுபோல் முடியும். வியாபாரிகளுக்கு சரளமான பணப்புழக்கம் இருக்கும். புதிய முதலீடுகள் ஏதும் செய்ய வேண்டாம். எவரையும் நம்பி கடன் கொடுப்பதோ கையெழுத்துப் போடுவதோ கூடாது. விவசாயிகள் உற்பத்திப் பொருள்களில் நல்ல லாபம் காண்பீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் பெயரும் புகழும் உயரும். திட்டங்களை தீவிரமாக நிறைவேற்றி கட்சித் தலைமையின் கவனத்தைக் கவரவும். கலைத்துறையினருக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும்.

உங்கள் திறமையை மற்றவர்கள் பாராட்டுவார்கள். பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும்.பேசும் நேரத்தில் நிதானம் தேவை. மாணவமணிகள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். படிப்பில் போதிய அக்கறையுடன் பாடங்களை பலமுறை படித்து மனதில் பதிய வைக்கவும்.

பரிகாரம்: சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 21, 27.

சந்திராஷ்டமம்: இல்லை.

 

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பணவரவுக்குக் குறைவு இருக்காது. வீடு மற்றும் தொழில் மாற்றத்திற்கு இது ஏற்ற காலமாகும். குடும்பத்தில் பிரச்னைகள் இருந்தாலும் அனைவரையும் அனுசரித்துச் செல்வது உத்தமம்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலைச்சலும் வேலைப்பளுவும் அதிகரிக்கும். சிலருக்கு விரும்பத்தகாத இடமாற்றங்கள் ஏற்படும். வியாபாரிகள் கடுமையாக உழைக்க நேரிடும். வியாபாரத்தை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நேரடியாக கவனிக்கவும். விவசாயிகளுக்கு மகசூல் பெருகும். கடுமையாக முயற்சித்து மேலும் முன்னேற நினைப்பீர்கள்.

அரசியல்வாதிகளின் பேச்சுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்றாலும் கட்சி மேலிடத்திடம் கவனம் தேவை. கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். புதிய நண்பர்களால் பலன் அடைவீர்கள். பெண்மணிகளுக்கு பணவரவு  சீராக இருக்கும்.

அனைவரையும் அனுசரித்து நடக்கவும். மாணவமணிகள் பெற்றோரின் ஆதரவுடன் வேலைகளைச் செய்து முடிப்பீர்கள். விளையாட்டுகளிலும் ஈடுபடுவது நல்லது.

பரிகாரம்: செவ்வாய் கிழமைகளில் துர்க்கையை வழிபடவும்.

அனுகூலமான தினங்கள்: 26, 27.

சந்திராஷ்டமம்: இல்லை.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.