காதல்தான் முக்கியம், கல்யாணம் அல்ல – டாப்சி

0
180

தமிழில் ஆடுகளம் படத்திலும், இந்தியில் முன்னணி நடிகையாகவும் வலம் வரும் டாப்சி காதல்தான் முக்கியம், கல்யாணம் அல்ல என்று கூறியிருக்கிறார்.

ஆடுகளம் மூலம் தமிழில் அறிமுகமான டாப்சி தொடர்ந்து தமிழில் நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை.

ஒரு கட்டத்தில் ராசியில்லாத நடிகை என்று வாய்ப்புகள் குறைந்ததால் தெலுங்கு, இந்தி பக்கம் சென்றார். இப்போது இந்தியில் முன்னணி நடிகையாகி விட்டார்.

அவர் நடித்த மன்மர்சியான் படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

சில ஆண்டுகளாகவே டாப்சி டென்மார்க் நாட்டை சேர்ந்த டென்னிஸ் வீரர் மத்தியாசை காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன.

இதுவரை இதனை மறுத்து வந்த டாப்சி முதன்முறையாக தான் காதலிப்பதை ஒப்புக் கொண்டுள்ளார்.

‘காதல்தான் முக்கியம்; கல்யாணம் அல்ல. நான் எப்போது குழந்தைகள் பெற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேனோ,

அப்போது தான் திருமணம் செய்து கொள்வேன். அதுவரை, மத்தியா சோடு ஒன்றாக வாழ்வேன்’ என்று கூறியிருக்கிறார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.