இந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற் தாக்குதலும் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 151)

0
1390

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிரதிநிகளாக கொழும்பு வந்தவர்களின் அன்ரன் பாலசிங்கம், அவர் மனைவி அடேல் பாலசிங்கம் தவிர்ந்த ஏனையோர் கொமாண்டோ சீருடைகளை அணிந்திருந்தனர்.

புலிகள் இயக்க அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம், அடேல் பாலசிங்கம், யோகரட்ணம் யோகி, மூர்த்தி, திலகர் ஆகியோர் கொழும்பு வந்திருந்தனர். அவர்களுக்கு பாதுகாப்பாக வந்த புலிகளின் கைகளில் ஏ.கே,47 துப்பாக்கிகள் தயார்நிலையில் இருந்தன. முதுகில் பை தொங்கியது.

அதற்கு முன்னரும் புலிகள் கொழும்பு வந்திருந்தனர். கொழும்பில் தாக்குதல்கள் மற்றும் குண்டுத்தாக்குதல் நடத்த வந்திருந்தனர்.

1பிரபாகரனும் கொழும்பு வந்திருக்கிறார். பொத்துவில் கனகரத்தினத்தைச் சுடுவதற்காகவே பிரபாகரன் கொழும்பு வந்திருந்தார்.

அரசுடன் நேரடியாகப் பேச்சு நடத்த புலிகள் கொழும்புக்கு வந்து இறங்கியது மே 3.1989ல் தான்.

எந்த அரசு புலிகளை பயங்கரவாதிகள் என்று கூறியதோ, அதே அரசு புலிகளை விடுதலைப் போராளிகள் என்று அங்கீகரித்து வரவேற்ற காட்சியை செய்தியாளர்களும், படப்பிடிப்பாளர்களும் பதிவு செய்து உலகுக்கு தெரியப்படுத்தினார்கள்.

கொழும்பில் வந்து இறங்கியவுடன் அன்ரன் பாலசிங்கத்திடம் பத்திரிகையாளர்கள் பேச்சுவார்த்தை பற்றிக் கேட்டனர். ஆதற்கு பாலசிங்கம் நட்புறவுடனும், புரிந்துணர்வுடனும் பேச்சு நடத்த வந்திருக்கிறோம் என்று கூறினார்.

பேச்சுக்கள் தொடர்ந்து நடக்கும் போது புலிகளின் பிரதித் தலைவர் மாத்தையாவும் கலந்து கொள்வது என்று முடிவு செய்யப்பட்டிருந்தது.

பேச்சுக்களுக்கு முன்பாக அரசுக்கும் புலிகளுக்கும் இடையே யுத்த நிறுத்தம் ஏற்பட்டது.

இந்தியப் படைகள் வடக்கு-கிழக்கில் புலிகளுடன் போரிட்டுக் கொண்டிருக்கின்றன இலங்கை அரசு புலிகளுடன் போர் நிறுத்தம் செய்கிறது.

இலங்கையில் அமைதியை நிலை நாட்ட இலங்கை அரசின் அழைப்பின் பேரில் அமைதிப்படையை அனுப்பியுள்ளோம் என்றுதான் இந்திய அரசு கூறிவந்தது.

இப்போது இலங்கை அரசும், புலிகளும் போர் நிறுத்தம் செய்த பின்னர் யாருக்கிடையே அமைதியைக் கொண்டுவர இந்தியப்படை போரிடுகிறது?

மிகவும் தர்மசங்கடமான இந்தக் கேள்விக்கு இந்தியப்படையால் மட்டுமல்ல, இந்திய அரசால்கூட பதில் சொல்ல இயலவில்லை.

இதற்கிடையே இந்தியாவின் பிரபல தினசரிகள், சஞ்சிகைகள் யாவும் படையை வாபஸ் பெறுவதுதான் சரியானது என்று ஆசிரியர் தலையங்கங்கள் தீட்டத் தொடங்கிவிட்டன.

இந்தியன் எக்ஸ்பிரஸ் தினமணி போன்ற பத்திரிகைகள், இந்தியப் படையை வாபஸ் பெற மறுப்பது மேலாதிக்கம் என்று கண்டனம் செய்தன.

indexஈரோஸ் கோரிக்கை

இந்தியப் படை வெளியேறவேண்டும் என்று ஜனாதிபதி பிரேமதாசா கோருவது வியப்பானதல்ல. அவர்கள் வெளியேறுவதுதான் நியாயம் என்று பேட்டியளித்தார் ஈரோஸ் தலைவர் பாலகுமார்.

இன்னொரு கருத்தையும் பாலகுமார் தெரிவிக்கத் தவறவில்லை.

எம்மைப் பொறுத்தவரையில் தமிழ் பேசும் மக்களின் அடிப்படை அபிலாசைகள் கூட தீர்க்கப்படாத நிலையில் போராட்டம் தொடர்வது என்பது தவிர்க்க முடியாதது. இதனை உருவகப்படுத்தும் சின்னமாகவே விடுதலைப் புலிகள் செயற்படுகிறார்கள் என்றே நாம் கருதுகிறோம் என்றார் பாலகுமார்.

கொழும்பில் முதல் சுற்றுப் பேச்சை முடித்துக் கொண்டு புலிகளின் பிரதிநிதிகள் வன்னிக்குச் சென்றனர்.

வன்னிக் காட்டில் உள்ள தங்கள் தலைவர் பிரபாகரனுடன் கலந்து பேசிவிட்டு அடுத்த சுற்றுப் பேச்சை தொடர கொழும்பு வருவதாக அவர்கள் கூறிச்சென்றனர்.

ஹொட்டல் செலவு

கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் வரை கொழும்பில் தங்கியிருந்தனர் புலிகளின் பிரதிநிதிகள். பாதுகாப்புக் காரணத்திற்காக அவர்கள் தங்கியிருக்கும் இடம் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.

கொழும்பில் பிரபலமான ஐந்து நட்டசத்திர விடுதியான ஹில்டனில்தான் அவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். வேண்டிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன.

வெளிநாடுகளில் உள்ள தங்கள் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் அனைவருடனும் ஹில்டன் ஹொட்டல் தொலைபேசியில் தாராளமாக உரையாடினார்கள்

தொலைபேசி பில் ஏறிக்கொண்டிருந்தது. பணம் கட்டப்போவது அரசுதானே. அதனால் பேசவேண்டியவர்கள் அனைவருடனும் பேசி சர்வதேச ரீதியாக உரையாடி முடித்துவிட்டார்கள்.

ஹோட்டலில் தங்கியிருந்தபோதும், சமையல் மட்டும் சொந்தச் சமையல்தான். உணவுப் பொருட்களை ஹொட்டலில் இருந்து பெற்று தாமே அவற்றை சமைத்துக் கொண்டனர்.

IPKF-premadasa-e1347794366280எதிர்க்கட்சியின் குத்தல்

புலிகளுக்கும் அரசுக்கும் இடையியே பேச்சுக்கள் ஆரம்பமானது. சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கு பிடித்தமான விடயமல்ல.

எனினும் பகிரங்கமாக பாரிய எதிர்ப்பு தெரிவிக்க முடியாதளவில் பிரேமதாசாவின் அரசியல் சாணக்கியம் அவர்களைக் கட்டிப்போட்டிருந்தது.

ஆனாலும் மறைமுகமான எதிர்ப்புக்கள் காட்டுவதிலும், நோகாமல் குத்தும் காரியங்களிலும் ஈடுபட்டே வந்தனர்.

புலிகளுடன் பேசி நிரந்தரமான தீர்வொன்றை பிரேமதாசா கண்டுவிட்டார் என்றால், இலங்கை அரசியலில் மேலும் குறைந்தது பத்து ஆண்டுகளுக்கு தங்களால் தலையெடுக்க முடியாது என்பது சிறீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கு தெரிந்ததுதான்.

அரசியல் தீர்வுக்கு ஐக்கிய தேசியக்கட்சி ஒத்துழைக்க வேண்டும் என்றும், புலிகளுடன் பேசுவதாயின் எதிர்க்கட்சி ஒத்துழைக்க வேண்டும் என்றும் தற்போது பொதுஜன முன்னணியினர் கூறி வருகின்றனர் அல்லவா. பொதுஜன முன்னணியில் பிரதானமாக இருப்பது சிறீலங்கா சுதந்திரக்கட்சி.

அன்று புலிகளுடன் நடைபெற்ற பேச்சுக்கள் பற்றி பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார் தர்மசிறி சேனநாயக்கா.

முதல் சுற்றுப் பேச்சை முடித்துக் கொண்டு புலிகளின் பிரதிநிதிகள் புறப்பட்டுச் சென்ற பின்னர்தான் அக் கேள்வி எழுப்பப்பட்டது.

கொழும்பில் புலிகள் தங்கியிருந்தபோது அவர்களைப் பராமரிக்க அரசுக்கு ஏற்பட்ட செலவு என்ன, புலிகளுடன் நடத்தப்பட்ட முதல் சுற்றுப் பேச்சில் ஆராயப்பட்ட விடயங்கள் என்ன? விபரங்கள் என்ன? என்று கேள்வி எழுப்பியிருந்தார் தர்மசிறிசேனநாயக்கா.

அரசுக்கு தர்மசங்கடம் ஒன்றை கொடுப்பதற்காவும், புலிகளுக்கு அரசு எத்தனை தூரம் சலுகை காட்டுகிறது என்பதை மக்கள் அறியச் செய்யவுமே அப்படியொரு கேள்வி எழுப்பட்டது.

ஹில்டன் ஹொட்டலில் புலிகள் தங்கி இருந்ததும், அங்கு தங்கி இருப்பது என்றால் ஏகப்பட்ட செலவு ஏற்பட்டிருக்கும் என்பதும் எதிர்கட்சிக்கு தெரியும். தூமாக அதனைக் கூறாமல் அரசாங்கத்தின் வாயில் இருந்து வெளிவரச் செய்ய முயன்றனர்.

கேள்விக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் விஜயரத்தின பாராளுமன்றத்தில் பதிலளித்தார்.

கொழும்புக்கு வந்து தங்கியிருந்த புலிகளின் பிரதிநிதிகளுக்கு தரப்பட்ட பாதுகாப்பு, போக்குவரத்து வசதி, தங்குமிடவசதி, உணவு போன்றவற்றுக்காக 17 இலட்சம் ரூபா செலவானது என்று ரஞ்சன் விஜயரத்ன கூறினார்.

புலிகளுடன் நடத்திய முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை பூர்வாங்கமானது. ஆதன் விபரங்களை தற்போது தெரிவிக்க முடியாது. அடுத்த பேச்சுவார்த்தை இரண்டு வாரங்களுக்குள் ஆரம்பமாகும் என்றும் தெரிவித்திருந்தார் ரஞ்சன்.

பேச்சுவார்த்தை தொடர்பான காரியங்கள் யாவும் மாத்தையாவின் பொறுப்பில்தான் நடந்தன. பிரபாகரன் பெரிதாக ஈடுபாடுகாட்டவில்லை.

இக் காலகட்டத்தில் இயக்கத்தில் மாத்தையாவின் செல்வாக்கு சற்றுக் கூடுதலாகவே இருந்தது. இயக்கத்தை காப்பாற்ற அரசுடன் பேச்சு நடத்த வேண்டும் என்ற மாத்தையாவின் கருத்தை மூத்த உறுப்பினர்கள் பலரும் ஆதரித்தனர்.

Kittu-anna-16மாத்தையாவுக்கும் கிட்டுவுக்கும் இடையே கசப்புக்கள் அப்போதும் இருந்தன. இலங்கை அரசுடன் பேச்சு நடத்துவது அவசியம் என்பதில் இருவரும் ஒத்த கருத்தைக் கொண்டிருந்தனர்.

பேச்சுவார்த்தைக்கான பிரதிநிகள் குழுவில் இருந்தவர்களில்கூட பலர் மாத்தையாவுக்கு நெருக்கமானவர்கள்தான். யோகி, மூர்த்தி ஆகியோர் மிக மிக நெருக்கம்.

மூர்த்தி புலிகள் இயக்க ஆரம்பகால உறுப்பினரல்ல. சீனச் சார்பு கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருந்தவர். கிளிநொச்சியைச் சேர்ந்தவர்.

ஈழப்போராட்ட ஆரம்பகாலத்தில் அதனை கேலி செய்வதில் முன்னின்றவர்களில் சீனச்சார்பு கம்யூனிஸ்ட்டுக்களும் அடங்குவர்.

பின்னர் இயக்கங்களின் வளர்ச்சி முன்பாக பணிந்தாகவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானார்கள். சீனச் சார்பு கம்யூனிஸ்ட்டுக்கள் பலரை மாத்தையா புலிகளின் அரசியல் பிரிவுக்குள் இழுத்துவிட்டார். அவர்களினல் ஒருவர்தான் மூர்த்தி.

இந்தியப் படையினர் வந்த புதிதில் மூர்த்தியும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார். பின்னர் விடுதலையானார்.

புலிகள் என்று சந்தேகப்பட்டு ஒருவரை கைதுசெய்துவிட்டு இந்தியப் படை விடுதலை செய்யுமானால், குறிப்பிட்ட நபர் ஒருமாதம் கூட உயிரோடு இருப்பது சந்தேகம்தான்.

ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தினரோ, அல்லது ஈ.என்.டி.எல்.எஃப். இயக்கத்தினரோ குறிப்பிட்ட நபரை பிடித்து மண்டைணில் போட்டுவிடுவார்கள்

இந்தியப் படை வரும்வரை மூர்த்தி புலிகளின் தீவிர ஆதரவாளர்தான் கைதாகி விடுதலையானபின்னர் தனழயாக இருந்தால் சாவது நிச்சயம் என்ற நிலையில் புலிகளோடு சேர்ந்து முழுநேர உறுப்பினராகிக் கொண்டார்.

மூர்த்தி போன்றோரை மாத்தையா பேச்சுக்கு அனுப்பியதில் பிரபாகரனுக்கு முழு உடன்பாடு இருக்கவில்லை. பிரபாகரனின் அணுகுமுறைக்கு நேர்மாறானது இது.

இயக்க நடவடிக்கைகளில் முன்னணியில் நின்றவர்கள், விசுவாசத்தை நடவடிக்கைகள் மூலம் நிரூபித்தவர்களுக்குத்தான் பொறுப்புக்கள் கொடுப்பது பிரபாகனின் அணுகுமுறை.

நன்றாக பேசக்கூடியவர், படித்தவர், பிரபலமானவர் என்ற கவனங்களுக்காக ஒருவரை பிடித்து வந்து இயக்கத்தின் தோளில் ஏற்றிவைக்கும் அணுகுமுறை ஏனைய இயக்கங்களின் தலைவர்களிடம் இருந்தது.

16-1471320561-ltte1மாத்தையாவும் அப்படியாக ஒரு அணுகுமுறையை கைக்கொள்ள ஆரம்பித்தார் அரசியல் பிரிவு என்பது, இயக்கத்திற்காக அர்ப்பண உணர்வுடன் உறுப்பினர்கள் செயற்பட்டுக்கொண்டிருக்க, அவர்கள் பெயரில் சில பிரமுகர்கள் பிரபலம் தேடும் பிரிவாக மாறிக்கொண்டிருந்தது.

புலிகள் இயக்கத்தில் அதற்கு முன்னரும் அதற்கு பின்னரும் காணாத மாற்றம் இது. அதேபோக்கில் போய் இருந்தால் இப்போது புலிகள் இயக்கமும் ஏனைய இயக்கங்கள் போல உட்பலம் இழந்திருக்கக்கூடும். பலம் இருந்திருக்காது. பிரபலங்கள் இருந்திருப்பார்கள்.

மாத்தையா பிரச்சனையின் பின்னர் அந்த பிரமுகர்களை எல்லாம் தூக்கி ஒரு ஓரத்தில் போட்டுவிட்டார் பிரபாகரன். அதில் ஒருவர் மூர்த்தி. (இவை பற்றி பின்னர் விபரிக்கப்படும்)

பேச்சுவார்த்தைகள் ஒரு கட்டத்தின் பின்னர் முறியப்போகிறன என்பது பிரபாகரனை அறிந்தவர்களுக்கு தெரிந்தே இருந்தது.

இதற்கிடையே புலிகள் இலங்கை அரசுடன் பேச்சு நடத்துவது பற்றி பல்வேறு கேள்விகள் எழத் தொடங்கின.

ஜென்ம விரோதி என்று கருதப்பட்ட இலங்கை அரசுடன் புலிகள் எப்படி பேச்சு நடத்தலாம்?

இந்தியப் படை சென்ற பின்னர் அரசபடைகள் போரை ஆரம்பித்தால் தமிழ் மக்கள் கதி என்ன?

பிரபாகரன் தமிழீழக் கோரிக்கையை கைவிட்டுவிட்டாரா? போன்ற கேள்விகள் பெரிதாக எழுந்தன.

புலிகள் அறிக்கை

இலங்கை அரசுடன் முதற்சுற்றுப் பேச்சு முடிந்ததும் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவினரால் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது.

இந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் என்று அந்த அறிக்கை மூலம் தெரிவித்தனர் புலிகள்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது இதுதான்: எமது விடுதலையை நாமே போராடிப் பெறவேண்டும். ந்நி இராணுவம் எமக்காகப் போராடக்கூடாது. இதனையே அன்றும் இன்றும் நாம் வலியுறுத்தி வருகிறோம்.

இதனால்தான் இந்திய அரசு எம்மை வெறுத்தது. இந்திய அரசு எம்குப் பாடம் புகட்ட நினைத்தது. பாடம் புகட்ட நினைத்தவர்கள் பாடம் படிக்கின்றார்கள்.

இந்திய அரசின் அக்கிரமத்தை உலகம் புரிந்து கொள்ள 500க்கு மேற்பட்ட புலிகளின் இரத்தம்; சிந்தப்பட்டது. அந்த இரத்தத்தில் இந்திய வல்லாதிக்கம் மூழ்கடிக்கப்பட்டது.

prime-minister-rajiv-gandhi-premadasa-ranasinghe-lanka_f3fe11ba-3d48-11e7-99bd-b9a47f5fadcaஇந்திய இராணுவம் அமைதிகாக்கும் படை அல்ல, ஆக்கிரமிப்புப் படை என்று நாம் பல முறை சொன்னோம் நாம் அமைதிப்படை. சிறீலங்கா அரசு கேட்டது, வந்தோம். போகச் சொன்னால் போவோம் என்றார்கள். இதைச் சொன்னது வேறு யாருமல்ல, பஞ்சசீல, மனித குல மாணிக்கத்தின் பேரன் ராஜீவ் காந்திதான்.

இன்று சிறிலங்கா அரசு போகச் சொல்கிறது. போக முடியாது என்று அடம்பிடிக்கிறார்கள். செத்துப்போன ஒப்பந்தத்திற்கு உயிர் கொடுக்கப் பார்க்கிறார்கள்.

நாம் முன்பு இந்திய அரசிடம்:

1) விடுதலைப் புலிகள்தான் தமிழ், முஸ்லிம் மக்களின் ஏகப் பிரதிநிதிகள்.

2) இந்தியப் படை தமிழீழத்பிலிருந்து வெளியேற வேண்டும்.

3) சர்வதேச அமைதிப்படை ஒன்று இங்கு வரவேண்டும்.

என்ற மூன்று கோரிக்கைகளை வைத்து சர்வசன வாக்கெடுப்பு நடத்தத்தயாரா என்று கேட்டிருந்தோம், அதனை அன்று ஏற்கத் திராணியற்றவர்கள்தான், இன்று தங்களை தமிழ், முஸ்லிம் மக்கள் போக வேண்டும் என்று கூறுவதாகச் சொல்கிறார்கள்.

தன்மானமுள்ள தமிழர்களோ, முஸ்லிம்களோ தமிழீழ மண்ணில் இந்தியப் படைளினர் இருக்க வேண்டும் என்று கூறமாட்டார்கள்.

இந்திய அரசின் அடிமைகள்தான் அவ்வாறு கூறுகின்றனர். இந்தியப் படை இங்கு இருக்க வேண்டும் என்று கூறுகிறவர்கள் இந்த மண்ணின் துரோகிகள் ஆவர்.

மேற்கண்டவாறு புலிகளின் அரசியல் பிரிவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

23a-ltteமுதல் சுற்றும் மோதலும்

இலங்கை அரசுடன் முதல் சுற்றுப்பேச்சை முடித்துவிட்டு வன்னிக்கு திரும்பினார்கள் புலிகளின் பிரதிநிகள்.

வவுனியாவில் உள்ள புளொட் இயக்க முகாம்களை தாக்க அணியொன்றை அனுப்பினார் பிரபாகரன்.

புளொட் முகாம் தாக்கப்படும் என்ற தகவல் முன்கூட்டியே இலங்கைப் படையினருக்கு ஜாடை மாடையாகத் தெரியும்.

மோதல் நடக்கும்போது தலையிட வேண்டாம் என்பது மேலிட உத்தரவு.

முள்ளிக்குளம் என்ற இடத்தில் இருந்த புளோட் இயக்க முகாம் புலிகளால் மே 20ம் திகதி சுற்றிவளைக்கப்பட்டு தாக்கப்பட்டதும் எதிர்தாக்குதல் நடத்தினார்கள்.

நீண்ட மோதல் இடம்பெற்றது. இறுதியில் புலிகளின் கை மேலோங்கியது.

புளோட் இயக்க மூத்த உறுப்பினரும், பொறுப்பாளர்களில் ஒருவருமான சங்கிலி என்றழைக்கப்படும் கந்தசாமியும் முகாம் தாக்குதலில் பலியானார்.

புளோட் இயக்கத்தில் நடைபெற்ற உட்கொலைகள் பலவற்றுக்கு காரணமானவர் என்றும், இயக்க உறுப்பினர்களை கொரூரமாக சித்திரவதை செய்து கொல்வதில் முன்னின்றவர் என்றும் குற்றம் சாட்டப்பட்டவர் சங்கிலி.

புளோட் தரப்பில் 42 பேர் பலியானதாகவும், தமது தரப்பில் 11 பேர் பலியானதாகவும், புளோட் முகாமிலிருந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டு, முகாம் அழிக்கப்பட்டதாகவும் புலிகள் உரிமை கோரியிருந்தனர்.

தொடர்ந்து வரும்

அரசியல் தொடர் அற்புதன் எழுதுவது
தொகுப்பு: கி.பாஸ்கரன்- சுவிஸ்

yxccc

LEAVE A REPLY

*