காந்தி லலித்குமார் ஒரு சைக்கோ… உடல் முழுவதும் சூடு போட்டார்.. நிலானி கண்ணீர் பேட்டி!! (வீடியோ)

0
300

என் உடல் முழுவதும் காந்தி லலித்குமார் சூடுபோட்டுள்ளார், பல பெண்களை ஏமாற்றி காந்தி லலித்குமார் பணம் பறித்துள்ளார்.

உதவி இயக்குனர் காந்தி கடந்த 16ஆம் தேதி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். சீரியல் நடிகை நிலானி அவரை திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் காந்தி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நிலானியும் காந்தியும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நிலானி கமிஷனரிடம் புகார்
இதைத்தொடர்ந்து நடிகை நிலானி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் காந்தியின் தற்கொலைக்கு தான் காரணமல்ல எனக்கூறி மனு ஒன்றை அளித்தார். அதில் தன்னை குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

பழகியது உண்மை
இதைத்தொடர்ந்து நிலானி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, காந்தி 3 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு அறிமுகமானார். அவரை திருமணம் செய்ய முடிவு செய்ததும் அவருடன் பழகியதும் உண்மைதான்.

பல பெண்களுடன்..
ஆனால் காந்தி ஒரு பொம்பளை பொறுக்கி. பணத்திற்காக பல பெண்களுடன் பழகி ஏமாற்றியுள்ளார். இதனை தெரிந்துகொண்டு நான் அவரை விட்டு விலகிவிட்டேன்.

கொலை மிரட்டல்
காந்தி லலித்குமார் குறித்து 2016ஆம் ஆண்டே போலீசில் புகார் கொடுத்துள்ளேன். காந்தி எனக்கு பலமுறை கொலை மிரட்டல் விடுத்துள்ளார். கடந்த ஒருவாரமாக தற்கொலை செய்துகொள்ள போவதாக மிரட்டினார்.

உதவி செய்த காந்தி
எனக்கு 2 குழந்தைகள் உள்ளனர். என் கணவர் என்னை கைவிட்டு வேறு ஒரு பெண்ணுடன் சென்றுவிட்டார். இந்த நிலைமையில்தான் காந்தி என் குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து வருவது போன்ற உதவிகளை செய்தார்.

சூடு போட்டுள்ளார்
என்னை உடல்ரீதியாக துன்புறுத்தியுள்ளார். உடல் முழுவதும் சூடுபோட்டுள்ளார். அவற்றையெல்லாம் போலீஸில் காட்டுவேன். என் வீட்டு சமயல் அறையில் எனக்கு வலுக்கட்டாயமாக காந்தி தாலிக்கட்ட முயன்றார். இதற்கு என் குழந்தைகளே சாட்சி.

காந்தி ஒரு சைக்கோ
நான் எந்த தவறும் செய்யவில்லை, தலைமறைவாகவில்லை. கடந்த 2 மாதங்களாக நரக வேதனையில் உள்ளேன். காந்தி ஒரு சைக்கோ. அவரது அக்காள் கணவரை கத்தியை எடுத்து குத்த சென்றார். அவர்களின் முன்னால் என்னை அடித்து உதைத்தார்.

ஆம்பளையே இல்லை
காந்தி ஒரு ஆம்பளையே இல்லை. ஒரு புகாரில் போலீசார் அவருக்கு கரண்ட் ஷாக் கொடுத்ததில் அவருக்கு ஆண்மை தன்மை போய்விட்டது. பேருக்காக என்னை திருமணம் செய்ய முயன்றார் காந்தி.

கதறி அழுத நிலானி
இவ்வாறு கூறி கதறி அழுத நடிகை நிலானி, சில ஆவணங்களையும் காண்பித்தார். தனக்கும் காந்தி தற்கொலைக்கு நான் காரணம் இல்லை என்றும் நடிகை நிலானி கண்ணீர்மல்க கூறினார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.