நடிகை புகார்: தீக்குளித்து இறந்த உதவி இயக்குனரின் கடைசி ஃபேஸ்புக் போஸ்ட் இது தான்

0
268

சென்னை: நடிகை நிலானி தற்கொலை செய்து கொண்ட தனது காதலன் காந்தி லலித்குமாருடன் இருந்த அந்தரங்க படுக்கையறை போட்டோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிவி சீரியல்களில் நடித்து வருபவர் நடிகை நிலானி. இவர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் தீவிரமடைந்த போது, போலீஸ் சீருடையில் தோன்றி, போலீஸ்க்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

nilani2-1537185953நிலானிக்கும், சின்னத்திரை உதவி இயக்குநர் காந்தி லலித்குமார் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளாக பழக்கம் இருந்தது. திருமணம் செய்து கொள்வது தொடர்பாக அவர்களுக்கு இடையே கருத்துவேறுபாடு இருந்து வந்தது.

காதலன் தகராறு

இந்த நிலையில் சீரியல் படப்பிடிப்பில் நிலானி பங்கேற்றிருந்த போது, அங்கு வந்த காந்தி லலித்குமார் நிலானியுடன் தகராறில் ஈடுபட்டார்.

nilani2323-1537185944காதலன் மீது புகார்

இதைத்தொடர்ந்து நடிகை நிலானி, மயிலாப்பூர் போலீஸ் நிலையம் சென்று, காந்தி லலித்குமார் தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி தகராறு செய்வதாக புகார் அளித்தார். அதன்பேரில் மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

nilani2323111-1537185936தீக்குளித்த காதலன்

இதையடுத்து போலீசார் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்நிலையில் காந்தி லலித்குமார், நேற்று சென்னை கே.கே.நகர் ராஜா மன்னார் சாலையில் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார்.

nilani-1537185962சிகிச்சை பலனின்றி பலி

இதனை கண்ட அப்பகுதியினர் அவரது உடலில் எரிந்த தீயை அணைத்து, அவரை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

nilaniw223232-1537185901அந்தரங்க போட்டோ

இந்நிலையில் நடிகை நிலானி காதலன் காந்தி லலிதாகுமாருடன் ஒன்றாக படுக்கையில் கிடக்கும் போட்டோக்கள் வெளியாகியுள்ளன. மேலும் இருவரும் ஒருவரை ஒருவர் கட்டியணைத்தப்படி இருக்கும் போட்டோக்களும் நிலானி தனது காதலன் காந்தி லலித்குமாரை மடியில் கிடத்தி கொஞ்சும் போட்டோவும் வெளியாகியுள்ளது.

nilani2223-1537185918கட்டிப்பிடிக்கும் நிலானி

நிலானி பின்னால் நின்றபடி தனது காதலனை அணைக்கும் போட்டோ படுக்கையில் தன்னுடன் இருக்கும் நடிகை நிலானியின் நெற்றியில் காந்தி முத்தம் கொடுப்பது போன்ற போட்டோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

nilani2232-1537185909என்ஜாய் செய்யும் நிலானி

மேலும் பல இடங்களில் இருவரும் ஒன்றாக சுற்றியிருப்பதும் அங்கு மிக நெருக்கமான ஒட்டி உரசியபடி செல்பி எடுத்த போட்டோக்களும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த போட்டோக்கள் அனைத்திலும் நிலானி சிரித்த முகத்துடன் சந்தோஷமாக இருப்பதும் தெளிவாகிறது.

விரக்தியடைந்த காதலன்

இதன்மூலம் நிலானி காந்தி லலித்குமாருடன் நெருங்கி பழகியிருப்பதும், அவரை திடீரென விலகிச் சென்றிருப்பதும் தெரியவந்துள்ளது. இதனால் ஏற்பட்ட விரக்தி மற்றும் ஏமாற்றத்தாலேயே காந்தி லலித்குமார் தீ குளித்து தற்கொலை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.