“கொள்ளுப்பிட்டியில் பிரபல மசாஜ் நிலையம் சுற்றிவளைப்பு : 14 தாய்லாந்து பெண்கள் கைது!!!

0
378

கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள பிரபல ஆயர்வேத மசாஜ் நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டதில் 14 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த 14 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 14 பெண்களும் தாய்லாந்து பிரஜைகளாவர்.

சுற்றுலா வீசாவின் மூலம் நாட்டிற்குள் வந்து சட்டவிரோதமாக தொழில் புரிந்த குற்றச்சாட்டின் பேரிலேயே குறித்த 14 தாய்லாந்து பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்த பெண்களை விசாரணை செய்ததில் குறித்த பெண்கள் மாத வருமானமாக தனித்தனியே இரண்டு இலட்சத்திற்கும் மேலாக சம்பளம் பெறுவது தெரிய வந்துள்ளது.

கொள்ளுப்பிட்டி சமுத்ரா மாவத்தையிலேயே இந்த பிரபல ஆயர்வேத மசாஜ் நிலையம் இயங்கி வந்துள்ளது.

குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளின் சுற்றிவளைப்பின் போது மசாஜ் நிலையத்தின் முகாமையாளரோ உரிமையாளரோ இருக்கவில்லை எனவும் குறித்த சம்பவம் தொடர்பாக வாக்கு மூலம் பெறுவதற்காக முகாமையாளரையும் உரிமையாளரையும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதான காரியாலயத்திற்கு வருமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் இச் சம்பவம் தொடர்பான மேலதிக  விசாரணைகளை குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.