புத்தரின் படம் பொறித்த சேலை அணிந்த யாழ் சட்டத்தரணியை கைதுசெய்ய முயற்சி.

0
283

புத்தரின் உருவப்படம் பொறித்த சேலை அணிந்திருந்த இளம்பெண் சட்டத்தரணியொருவர் யாழ்ப்பாண காவற்துறையினரால் கைது செய்ய முயற்சிக்கப்பட்டதில் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

யாழ் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குகளில் முன்னிலையாகுவதற்காக இளம்பெண் சட்டத்தரணியொருவர் இன்று காலை நீதிமன்ற வளாகத்திற்கு பிரசன்னமாகியிருந்தார். அவரது சேலையில் புத்தரின் உருவப்படம் பொறிக்கப்பட்டிருந்தது. அதனை அவதானித்த நீதிமன்ற காவற்துறையினர், யாழ் காவல் நிலைய தலைமையகத்திற்கு அறிவித்தனர்.

அதனை அடுத்து யாழ் காவல் நிலையத்தில் இருந்த வந்த காவற்துறை அணியொன்று அந்த இளம்பெண் சட்டத்தரணி நீதிமன்றை விட்டு வெளியேறிய போது கைது செய்ய முயற்சித்தது. இதனால் நீதிமன்ற வளாகத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

அதனை அடுத்து சம்பவ இடத்தில் ஏனைய சட்டத்தரணிகளும் கூடி கைது செய்ய முயற்சித்தமைக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

அதனை அடுத்து காவற்துறையினர் குறித்த சட்டத்தரணியை காவல் நிலையத்திற்கு சமூகமளித்து வாக்கு மூலம் வழங்குமாறு கோரி அழைத்து சென்றனர்

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.