யாழ் மண்ணில் நடந்த விசித்திரமான பூப்புனித நீராட்டு விழா………!! இன்ப அதிர்ச்சியில் விருந்தினர்கள்….!!

0
382

 

இப்போதெல்லாம் காலம் வேகமாகச் சுழன்றாலும், என்ன தான் விஞ்ஞானம் வளர்ந்து விட்டாலும், நமது பாரம்பரியங்களை விட்டுக்கொடுக்க எல்லோரும் தயாராக இல்லை.

நவீன உலகில் மனிதன் செவ்வாய்க் கிரகம் வரை சென்று விட்டாலும், எமது மண்ணையும், எமது கலாச்சாரம், பழக்கவழக்க சமயப் பண்பாடுகளையும் விட்டுக் கொடுக்க முடியாதல்லவா…?

மனிதர்களின் அன்றாட வாழ்க்கை முதல் திருமணம் முதலான சடங்குகள் வரை நவீனம் என்பது எல்லா இடங்களிலும் நுழைந்து விட்டது.

எனினும், நம்மவர்களில் சிலர் நமது கலாசாரங்களையும், மரபுகளையும், பின்பற்றி வருவது ஆறுதலளிக்கும் விடயமாகும்.

ஆம், அண்மையில் யாழ் சண்டிலிப்பாய் பிரதேசத்தில் இடம்பெற்ற பூப்புனித நீராட்டு விழாவில் குதிரை வண்டியிலும், பல்லக்கிலும் பூப்புனித நீராட்டு விழா நடந்த பெண் பிள்ளையை சுமந்து சென்று, மணவறையில் இருந்தி, தமிழர் மரபுப்படி ஆராத்தி எடுத்து அசத்தியுள்ளனர்.

அத்துடன் நின்று விடாமல், நிகழ்வில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் செவ்விளநீர் பானமாக வழங்கப்பட்டது.

இதனால், நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் இன்ப அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

மங்கள நிகழ்வுகளில் சோடா ஐஸ்கிறீம் முதலான மென்பானங்களை அருந்திய காலம் போய், ஆரோக்கியம் நிறைந்த செவ்விளநீர் முதலான இயற்கைப்பானங்களை இவ்வாறான நிகழ்வுகளில் அறிமுகம் செய்வது வரவேற்கத்தக்க முயற்சியாகும்….

இனிவரும் காலங்களில் இடம்பெறும் மங்கல நிகழ்வுகளில் நமது மண்ணில் விளையும் ஆரோக்கியம் நிறைந்த இயற்கைப் பானங்களை காணமுடியுமென எதிர்பார்க்கலாம்.

40452333_881808228675814_3319030905351176192_n40472879_866756660197496_462746888936882176_n40505610_460011597830579_8882876598815031296_n40522688_294946631091935_6944650964431273984_n40542981_433937287013793_8333867082739351552_n40946746_1956882174371594_8960868055244603392_n41056749_252593485393689_4117521993476079616_n

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.