பிரித்தானிய மருத்துவமனை ஒன்றில் புகுந்து இளைஞர் கத்திக்குத்து! சிதறி ஓடிய நோயளிகள்: அதிர்ச்சி வீடியோ வெளியீடு

0
268

பிரித்தானியாவில் லீசெஸ்டர் நகரில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில் புகுந்து இளைஞர் ஒருவர் கத்தியால் தாக்கி ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக வெளியான கண்காணிப்பு கெமரா காட்சிகள் பார்ப்பவரை பதற்றமடைய செய்துள்ளது.

4059528-6095493-Aka_first_stabbed_a_man_waiting_outside_A_E_and_then_went_inside-a-1_1535141668010(Aka first stabbed a man waiting outside A&E, and then went inside where he began ransacking the waiting room in an apparently motiveless attack)

லீசெஸ்டர் நகரில் அமைந்துள்ள Royal Infirmary மருத்துவமனையில் கடந்த ஜனவரி 16 ஆம் திகதி புகுந்த 22 வயது யூசுஃப் ஆகா என்பவர் திடீரென்று மறைத்து வைத்திருந்த கத்தியால் எதிரே வந்த நபரை கடுமையாக தாக்கியுள்ளார்.

தொடர்ந்து நோயாளிகள் காத்திருக்கும் அறையில் புகுந்த ஆகா, அங்கிருந்த பொருட்களை அள்ளி வீசியுள்ளார்.

இந்த களேபரங்களை கண்ட நர்ஸ் ஒருவர் துணிவுடன் குறித்த நபரை எதிர்கொண்டுள்ளார்.

சம்பவத்தன்று விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் சேர்ப்பித்த இருவரை தொடர்ந்து வந்த ஆகா, அதில் ஒருவரை துரத்தி துரத்தி தாக்கியுள்ளார்.

மட்டுமின்றி எதிர்பாராத நேரத்தில் கத்தியால் அவரது முதுகில் குத்தியுள்ளார். இதில் அந்த நபர் உயிர் தப்பும் பொருட்டு மருத்துவமனைக்கு வெளியே பாய்ந்துள்ளார்.

இருப்பினும் நீட்டிய கத்தியுடன், ஆகா அந்த நபரை துரத்தியுள்ளார். அதிகாலை 2 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தை அடுத்து மருத்துவமனையில் இருந்து பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

விரைந்து வந்த பொலிசார் இளைஞர் ஆகாவை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் பொதுமக்களை கத்தியால் தாக்கி அச்சுறுத்தியதாகவும், நோயாளி ஒருவரை கத்தியால் குத்தியதாகவும் கூறி 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து லீசெஸ்டர் கிரவுன் நீதிமன்றம் வெள்ளியன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

4F5E2DFB00000578-6095493-image-a-3_15351430782964F5E2E0600000578-6095493-CCTV_showed_Aka_22_calmly_walking_towards_two_men_stabbing_one_i-a-1_1535144788040

4F5E2DE600000578-6095493-image-a-5_15351430894564F5E2DDE00000578-6095493-One_wheelchair_bound_man_is_left_stranded_amid_the_room_s_chairs-a-2_15351447880964F5E2DCA00000578-6095493-image-a-10_15351434060324F5E2DBA00000578-6095493-image-a-8_1535143120685

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.