இந்தியாவில் ஆபாசப் படத்துறையை அனுமதிக்க வேண்டுமா? – சன்னி லியோனி பேட்டி

0
648

சன்னி லியோனி பற்றிய இணையதள தொடரான ‘கரஞ்சித் கௌரில்’ வரும் ஒரு காட்சியில் பத்திரிகையாளர் ஒருவர், சன்னி லியோனிடம் “ஆபாசப்பட நடிகைக்கும், பாலியல் தொழிலாளிக்கும் என்ன வேறுபாடு?” என்று கேட்டார்.

“இரண்டுக்கும் தைரியம் என்ற ஒற்றுமை உள்ளது” என்று சன்னி லியோனி பதிலளித்திருந்தார்.

நான் சன்னி லியோனியை மும்பையிலுள்ள ஒரு ஓட்டலில் நேர்காணலுக்காக சந்தித்தபோது, அவரிடம் உள்ள அந்த ‘தைரியத்தை’ அவரது நடை, முகம், பதில்களின் மூலம் காண முடிந்தது.

அப்போது அந்த இணையதள தொடருக்கான நேர்க்காணலை படம்பிடிப்பது சவாலானதாக இருந்ததாக அவர் என்னிடம் கூறினார்.

“அந்த பத்திரிகையாளர் கேட்ட கேள்விகள் மிகவும் மோசமானதாக இருந்ததால், நான் மிகவும் சங்கடமாக உணர்ந்தேன். ஆனால், இதை மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் எதிர்பார்த்து காத்திருந்ததால்தான் அந்த கேள்விகளுக்கு நான் பதிலளித்தேன்” என்று சன்னி லியோனி கூறினார்.

தொடர்ந்து ஐந்தாவது வருடமாக இந்தியாவில் இணையதளத்தில் மிகவும் தேடப்பட்ட நபராக சன்னி உள்ளார்.

பெரும்பாலான மக்கள் சன்னி லியோனியை பார்ப்பதற்கும், அவரை பற்றி தெரிந்துகொள்வதற்கும் விரும்பினாலும், அவரைப் பற்றிய தங்களது எண்ணத்தை மக்கள் ஏற்கனவே மனதில் வரைந்துவிட்டார்கள்.

_103112434_6efd213d-1b10-41d0-8a02-22e5a9b7cdd9

மக்களிடையே இதுபோன்ற எண்ணம் உருவாவதற்கு தானே காரணம் என்று சன்னி நம்புகிறார்.

“என்னைப் பற்றியும், நான் என்ன நினைக்கிறேன் என்பது பற்றியும் நான் நேர்மையாக இருக்கிறேன்.

ஆனால், மக்கள் என்னுடைய கடந்த காலத்தை தொடர்புப்படுத்தி மட்டுமே என்னை பார்க்கிறார்கள்.

மக்களிடையே அது போன்ற எண்ணம் உருவாவதற்கு நான்தான் காரணம் என்று நம்புறேன். இருப்பினும் ஒவ்வொரு தனி நபரும் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் பரிணமிக்கிறார்கள், அதை மக்கள் உணருவார்கள் என்று நம்புகிறேன்.”

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.