தி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் – வீடியோ

0
317

சென்னை : தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக கடந்த ஜூலை மாதம் அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நேரத்தில் கடந்த 8-ம் தேதி தி.மு.க தலைவர் கருணாநிதி வயது மூப்பு காரணமாக காலமானார்.

கருணாநிதியின் இறுதி அஞ்சலி நிகழ்சியில் நேரில் பங்கேற்க இயலாத விஜயகாந்த் அவரது மறைவிற்கு கண்ணீர் மல்க வீடியோ மூலம் இரங்கல் தெரிவித்தார்.

பார்ப்பவர்களை நெகிழச்செய்யும் விதமாக இருந்த அந்த வீடியோவில், ‘ நான் அமெரிக்காவில் இருந்தாலும் என் எண்ணங்களும், நினைவுகளும் தமிழகத்தில்தான் இருக்கிறது.

கலைஞர் இறந்துவிட்டார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. கருணாநிதியைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், திமுக தொண்டர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன்’ என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து இன்று சென்னை திரும்பிய விஜயகாந்த், மனைவி பிரேமலதா மற்றும் மைத்துனர் சுதிஷ் ஆகியோருடன் மெரினாவுக்கு சென்று கருணாநிதியின் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.