12 ராசிக்காரகளுக்குமான இந்த வார (ஆகஸ்ட் 17 – ஆகஸ்ட் 23) பலன்கள்!! – ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர்

0
578

12 ராசிக்காரகளுக்குமான இந்த வார (ஆகஸ்ட் 17 – ஆகஸ்ட் 23) பலன்களைத் ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார்.

இந்த வாரம் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்?

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் படிப்படியாகக் குறையும். குடும்பத்தினரின் நல்லெண்ணங்களுக்குப் பாத்திரமாவீர்கள். குடும்பத்தில் பாகப்பிரிவினைகள் நடந்து சொத்துகள் உங்கள் கைவந்து சேரும். நண்பர்கள் உங்களை அலட்சியப் படுத்துவார்கள். கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும் என்றாலும் அவற்றை நேர்த்தியாக முடிக்கும் ஆற்றலும் உண்டாகும். வியாபாரிகளுக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய முதலீடுகளில் ஈடுபட்டு லாபம் அடைவீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் சுமாராக இருக்கும். காலநடைகளால் லாபம் உண்டாகும்.

அரசியல்வாதிகளுக்கு பெயரும் புகழும் அதிகரிக்கும்.  கட்சி மேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள். கலைத்துறையினருக்கு ஒப்பந்தங்களை முடித்துக் கொடுப்பதில் சில தடைகள் ஏற்படும்.

முழுத் திறமையையும் வெளிப்படுத்தி வெற்றி பெறுவீர்கள். பெண்மணிகளுக்கு இந்த வாரம் பொதுவானப் பலன்கள் கலந்து வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவமணிகள் தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்று முத்திரை பதிப்பீர்கள்.

பரிகாரம்: செவ்வாய், வெள்ளி ராகு கால நேரங்களில் துர்க்கையம்மனை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 17, 21.

சந்திராஷ்டமம்: 18,19,20.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

புதிய முதலீடுகள் செய்வது, செய்தொழிலில் சிறு மாற்றங்களைச் செய்வது ஆகியவை திட்டமிட்டபடி இனிதே நடக்கும். எதிர்ப்புகள் அகலும். தொழிலில் அவ்வப்போது தலைதூக்கும் பிரச்னைகளை சமாளிப்பீர்கள்.

பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் நட்புடன் பழகி உரிய காரியங்களை சாதித்துக் கொள்ளவும்.

வேலைப்பளு குறைவாக இருக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் சுமுகமான நிலைமை தென்படும்.

அதிக லாபத்தை எதிர்பார்த்து வீண் கடன் தொல்லைகளுக்கு ஆளாக வேண்டாம். விவசாயிகளுக்கு கொள்
முதல் லாபம் சிறப்பாக இருக்கும்.

அரசியல்வாதிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நேரமிது. கட்சி மேலிடத்தின் உத்தரவை நிறைவேற்ற முனைப்புடன் செயல்படுவீர்கள்.

கலைத்துறையினருக்கு இந்த நேரம் வரவேற்புகள் குறைவாக இருந்தாலும் திறமைகள் குறையாது. பெண்மணிகள் கணவரை அனுசரித்துச் செல்லவும். சில்லறை செலவுகள் கூடும். மாணவமணிகள் படிப்பில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

பரிகாரம்: “ஸ்ரீ ராம் ஜெய்ராம் ஜெய ஜெய ராம்’ என்று ஜபித்தபடியே அனுமனை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 18, 20.

சந்திராஷ்டமம்: 21, 22.

மிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

நண்பர்களுடன் சேர்ந்து புதிய முயற்சிகளில் ஈடுபடத் திட்டமிடுவீர்கள். உங்களின் அறிவாற்றல் அதிகரிக்கும். உற்சாகமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வீர்கள். நல்ல பல செயல்களை செய்து வெற்றியடைவீர்கள். உங்களின் நடையில் மிடுக்கு ஏற்படும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கெடுபிடியிலிருந்து விடுபட்டு பாராட்டைப் பெறுவீர்கள். பணவரவுடன் உயர் பதவிகள் தேடிவரும்.

வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சிறப்பாகவே முடியும். வருமானத்தைப் பெருக்கும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். விவசாயிகள் உழைப்பிற்கேற்ற பலன்களை அனுபவிப்பீர்கள். விவசாயப் பணிகளில் கவனத்துடன் ஈடுபடுவீர்கள்.

அரசியல்வாதிகள் மக்கள் நலப்பணிகளில் கவனத்துடன் ஈடுபடவும்.  இதனால் புகழும் செல்வாக்கும் அதிகரிக்கும். கலைத்துறையினர் தங்களின் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.

பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சுமாராகவே இருக்கும். மாணவமணிகளுக்கு படிப்பில் குளறுபடியான சூழ்நிலை நிலவும். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் அறிவுரைப்படி நடந்து கொள்ளவும்.

பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 17,18.

சந்திராஷ்டமம்: 23.

கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

வருமானம் தேவைக்கேற்ப இருக்கும். செயல்களில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் ஆதாயமே கிடைக்கும். தேவையான நேரத்தில் நண்பர்கள் தேடிவந்து உதவி செய்வார்கள். தாயின் வழியிலிருந்து சில நன்மைகள் அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறிது பாதிப்பு ஏற்படலாம்.

உத்தியோகஸ்தர்கள் தவறுகளைத் திருத்திக்கொண்டு அலுவலக வேலைகளில் கவனம் செலுத்துவீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சீராக இருந்தாலும் கூடுதல் அக்கறையோடு வியாபாரம் செய்யவும். விவசாயிகளின் அமோகமான விளைச்சலால் லாபத்தைக் காண்பீர்கள். நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்குவதில் கூடுதல் கவனம் செலுத்தவும்.

அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் அந்தஸ்து உயரும். அனைவரையும் அனுசரித்து நடந்துகொண்டால் சிக்கல்களைத் தவிர்க்கலாம். கலைத்துறையினருக்கு ஆற்றல் அதிகரிக்கும். ஒப்பந்தங்கள் கைகூடும். பெண்மணிகள் ஆடை அணிகலன்கள் வாங்குவர். குழந்தைகளால் பெருமை உண்டாகும். மாணவமணிகள் கல்வியில் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

பரிகாரம்: புதன்கிழமைகளில் மஹாவிஷ்ணுவை வணங்கி வரவும்.

அனுகூலமான தினங்கள்: 17,19.

சந்திராஷ்டமம்: இல்லை.


சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

உங்களின் பேச்சுக்கு மதிப்பு உண்டாகும்.  உங்களிடம் அனைவரும் அன்பாகவும் அனுசரணையாகவும் ஆதரவாகவும் நடந்து கொள்வார்கள். குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். தன்னம்பிக்கை பலப்படும்.

குடும்பத்தினரிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும். உத்தியோகஸ்தர்களுக்கு அனைத்து வேலைகளும் மகிழ்ச்சியாக முடியும்.

வருமானம் திருப்திகரமாக இருக்கும். வியாபாரிகள் நல்ல வருமானத்தைக் காண்பீர்கள். செலவு செய்யும் நேரத்தில் கவனமாக இருக்கவும்.

கூட்டாளிகளுடன் எச்சரிக்கையாக பழகவும். விவசாயிகள் கொள்முதலில் ஏற்றத்தைக் காண்பீர்கள். கால்நடைகளை வைத்திருப்போர் நல்ல லாபத்தைக் காண்பார்கள்.

அரசியல்வாதிகள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும். மேலிடத்தில் பாராட்டும் கிடைக்கும். கலைத்துறையினர் பணிகளை நேர்த்தியாக முடித்து அனைவரின் பாராட்டையும் பெறுவார்கள். பெண்மணிகள் இல்லத்தில் நிம்மதியைக் காண்பீர்கள். மாணவமணிகள் படிப்பில் அதிக மதிப்பெண்களைப் பெறுவீர்கள். ஆசிரியர்கள் உங்களைப் பாராட்டுவார்கள்.

பரிகாரம்: குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 18,19.

சந்திராஷ்டமம்: இல்லை.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

உங்கள் ஆசைகள் பூர்த்தியாகும். நம்பிக்கை பலப்படும். குறுகிய கண்ணோட்டத்தை விட்டுவிட்டு நிலைமைகளை புரிந்து கொண்டு செய்படுவீர்கள். பொருளாதார வளம் அமோகமாக இருக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்களை நடத்துவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் திட்டமிட்ட பணிகளில் முன்கூட்டியே செயல்பட்டால் பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.

அலுவலகப் பயணங்களைத் தள்ளிப்போடவும். வியாபாரிகள் முயற்சிகளில் பின் வாங்காமல் வெற்றி பெறுவீர்கள். விற்பனை பிரதிநிதிகள் மூலம் வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். மாற்றுப் பயிர்களைப் பயிரிட்டும் நலன் பெறலாம்.

அரசியல்வாதிகளுக்கு கட்சியில் வாக்குவாதங்கள் அதிகரிக்கும். இருப்பினும் மக்களுக்கான போராட்டங்களில் புதிய வேகத்துடன் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். கலைத்துறையினரைத் தேடி புதிய வாய்ப்புகள் வரும். பெண்மணிகள் கணவரை அனுசரித்து நடந்து கொள்ளவும். உடல்நலத்தில் கவனம் தேவை. மாணவமணிகளுக்கு பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். எண்ணங்கள் ஈடேறும்.

பரிகாரம்: துர்க்கை வழிபாடு, புதனன்று பெருமாள் வழிபாடு உகந்தது.

அனுகூலமான தினங்கள்: 19,20.

சந்திராஷ்டமம்: இல்லை.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

பேச்சுத் திறமையால் அனைவரையும் கவர்வீர்கள். இல்லத்திற்கு புதிய உபகரணங்களை வாங்குவீர்கள். வருமானம் நன்றாகவே இருக்கும். செய்தொழிலில் பழைய அனுபவங்கள் கைகொடுக்கும். புதிய உற்சாகத்துடன் காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் கடமை தவறாமல் உழைப்பீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சீராகவே முடியும்.

ஆகவே புதிய யுக்திகளைப் புகுத்தி வியாபாரத்தைப் பெருக்க முயற்சிக்கவும். விவசாயிகள் கொள்முதலில் நல்ல லாபத்தைக் காண்பார்கள். கையிருப்புப் பொருள்களுக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்கும்.

அரசியல்வாதிகளிடம் கட்சி மேலிடம் புதிய பொறுப்புகளை வழங்கும். அவற்றை நேர்த்தியாக முடித்துக்கொடுத்து பதவி உயர்வையும் பாராட்டையும் பெறுவீர்கள்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் சுமாராகவே இருக்கும். ஆகையால் திறமைகளை வளர்த்துக் கொள்ளவும். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை அதிகரிக்கும். மாணவமணிகள் அறிவியல் கல்வியில் அதிக மதிப்பெண்களை அள்ளுவீர்கள்.

பரிகாரம்: திங்கள்கிழமைகளில் விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 17, 21.

சந்திராஷ்டமம்: இல்லை.


விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

தேவைகள்பூர்த்தியாகும் நேரமிது. உங்கள் செயல்களை சரியாக செய்து முடிப்பீர்கள். சமயோசித பேச்சுத் திறமையால் உங்களுக்குக்கீழ் பணிபுரிபவர்களின் ஆற்றலை ஊக்குவிப்பீர்கள். வருமானம் எதிர்பார்த்தபடியே இருக்கும். மற்றவர்களுக்காக சிறு தியாகங்களையும் செய்வீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளில் கவனமாக இருக்கவும். பிறரிடம் உங்கள் பொறுப்புகளை ஒப்படைப்பதைத் தவிர்க்கவும். வியாபாரிகளுக்கு இது முன்னேற்றகரமான காலம்.

புதிய வருமானத்தைப் பெறுவதற்கான வழிமுறைகளைக் காண்பீர்கள். விவசாயிகள் கொள்முதலில் லாபத்தைக் காண்பீர்கள். கால்நடை, பூச்சிக்கொல்லி மருந்துகளுக்காக செலவு செய்வீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு கட்சியில் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். மக்களுக்காக நீங்கள் செய்யும் போராட்டங்களைக் கட்சி மேலிடம் சந்தேகக் கண்ணோடு பார்க்கும்.

கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பெண்மணிகளைத் தேடி இனிமையான செய்திகள் வரும். மாணவமணிகளுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிடுவீர்கள்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் மஹாலட்சுமி தேவிக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடவும்.

அனுகூலமான தினங்கள்: 18, 20.

சந்திராஷ்டமம்: இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

எதிர்பாராத நேரத்தில் இனிமையான செய்திகள் உங்களைத் தேடிவரும். குதூகலமான நேரமிது. செய்தொழிலில்  புதிய யுக்திகளை அறிந்து கொள்வீர்கள். உங்கள் கனவுகள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் தென்படும். எதிர்ப்புகள் மறையும்.

உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். திட்டமிட்ட வேலைகளை வெற்றிகரமாக முடித்து பாராட்டுகள் பெறுவீர்கள்.

வியாபாரிகள் பெரிய சந்தைகளை நாடிச்சென்று வியாபாரத்தை விரிவுபடுத்தவும். புதிய முதலீடுகளை செய்வதற்கு இது உகந்த வாரமல்ல. விவசாயிகளுக்கு குத்தகைகளால் ஏமாற்றமும் இழப்பும் உண்டாகும்.

அரசியல்வாதிகள் மக்கள் நலப்பணிகளில் கவனத்துடன் செயல்படுவீர்கள். உங்கள் புகழ், செல்வாக்கு அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு அதிக முயற்சிகளுக்குப்பிறகே புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் வீண் செலவுகளைத் தவிர்க்கவும். மாணவமணிகள் படிப்பில் முன்னேற்றம் அடைவீர்கள். விளையாட்டுகளிலும் வெற்றி அடைவீர்கள்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் செந்திலாண்டவரை தரிசிக்கவும்.

அனுகூலமான தினங்கள்: 20, 21.

சந்திராஷ்டமம்: இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

வெற்றிகள் சூழும். எந்த விஷயத்தையும் எதிர்கொள்ளும் ஆற்றலைப் பெறுவீர்கள். சிறிய விஷயத்தையும் நுணுக்கத்துடன் செய்ய முற்படுவீர்கள். செய்ய முடியாமல் தள்ளிப்போயிருந்த காரியமொன்று தற்போது செயல்படத் தொடங்கும். வெளிநாட்டிலிருந்து மகிழ்ச்சியளிக்கும் செய்தி வரும்.

உத்தியோகஸ்தர்கள் பதற்றப்படாமல் அமைதியாக அலுவலக வேலைகளைச் செய்வீர்கள். பொருளாதார வசதியில் எந்தக்குறைவும் ஏற்படாது.

வியாபாரிகளைத் தேடிப் பலவகையிலும் லாபம் வரும். வாடிக்கையாளர்களை சந்தோஷப் படுத்துவீர்கள். விவசாயிகள் தானிய விற்பனையை லாபகரமாகச் செய்து முடிப்பீர்கள். போட்டிக்குத் தகுந்தவாறு நடவடிக்கை எடுப்பீர்கள்.

அரசியல்வாதிகள் பெரும் சாதனைகள் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். ரகசியத் திட்டங்கள் அனைத்தும் வெற்றிப்பாதையை நோக்கிச் செல்லும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். பெண்மணிகள் உற்றார் உறவினர்களை சந்தித்து உற்சாகமடைவீர்கள். மாணவமணிகள் படிப்பில் அக்கறை காட்டவும்.

பரிகாரம்: சிவபெருமானையும் சூரியபகவானையும் வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 20, 22.

சந்திராஷ்டமம்: இல்லை.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

செய்தொழிலில் திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். உடல் உழைப்பிற்கு ஏற்ற வருமானம் வந்து கொண்டிருக்கும். உடலாரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். மருத்துவச் செலவுகள் குறையும்.

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிப்பதால் அதற்கேற்றவாறு உழைக்க நேரிடும். சக ஊழியர்கள் உதவி செய்வார்கள். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல்களில் கவனமாக இருக்கவும். வியாபாரத்தைப் பெருக்க எடுக்கும் முயற்சிகள் வெற்றியைத் தரும். விவசாயிகளுக்கு  விளைச்சல் நன்றாக இருக்கும்.  அதிக செலவழித்து எந்த செயலையும் செய்ய வேண்டாம்.

அரசியல்வாதிகளின் பொதுச்சேவையில் அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். உட்கட்சி விவகாரங்களில் தலையிட வேண்டாம்.  கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் முழுமையாகக் கிடைக்காது. சக கலைஞர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும். பெண்மணிகள் கணவரிடம் அன்போடு நடந்து கொள்வீர்கள். மாணவமணிகளுக்கு படிப்பில் ஏற்படும் இடையூறுகளை சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும்.

பரிகாரம்: ராகு காலத்தில் துர்க்கையை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 22, 23.

சந்திராஷ்டமம்: இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

சமுதாயத்தில் உயர்மட்டத்தில் உள்ளவர்களால் பாராட்டப்படுவீர்கள். உற்சாகத்துடன் பொது நலக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் அமைதி பூத்துக்குலுங்கும். நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளுடன் நெருங்கிப் பழகுவீர்கள். செய்தொழிலில் ஆதாயங்களைப் பெறுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் உழைப்பிற்கேற்ற பலனை அடைவீர்கள். விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். வியாபாரிகள் துணிந்து முதலீடுகளைச் செய்வீர்கள். இதனால் இரு மடங்கு லாபத்தைப் பெறுவீர்கள். விவசாயிகள் உற்பத்திப் பொருள்களில் லாபத்தைக் காண்பீர்கள். கால்நடைகளால் பலன் அடைவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு யோசித்து முடிவு எடுக்கும் முடிவுகள் அனைத்தும் சாதகமாகவே அமையும்.  இருப்பினும் யாரிடமும் வெளிப்படையாகப் பேசி பழக வேண்டாம். கலைத்துறையினருக்கு அதிக முயற்சிகளுக்குப் பிறகே ஒப்பந்தங்கள் கைகூடும். பெண்மணிகள் திட்டமிட்ட வேலைகளில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். மாணவமணிகள் பெற்றோரின் ஆதரவுடன் புதிய முயற்சிகளில்ஈடுபடுவீர்கள்.

பரிகாரம்: நந்தீஸ்வரரை பிரதோஷ காலங்களில் வணங்கி வரவும்.

அனுகூலமான தினங்கள்: 18, 23.

சந்திராஷ்டமம்: 16.17.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.