கோத்தாவை தடுக்குமா அமெரிக்கா? -என்.க­ண்ணன் (கட்டுரை)

0
625

மஹிந்­தவைப் பொறுத்­த­வ­ரையில், கோத்­தா­பய ராஜபக் ஷவை ஏற்றுக் கொள்­வ­திலும், அவரை இல்­லை­யென்று வெட்டி விடு­வ­திலும் பிரச்­சி­னைகள் உள்­ளன.

அதா­வது, மஹிந்த தரப்பில் உள்­ள­வர்­களில் கோத்­தாவைப் பிடிக்­கா­த­வர்கள் இருப்­பது போலவே, மஹிந்­தவைப் பிடிக்­காத கோத்தா ஆத­ர­வா­ளர்­களும் இருக்­கி­றார்கள். அவ்வா­றா­ன­வர்­களின் எதிர்ப்­பையோ காழ்ப்­பையோ அவர் குறைத்து மதிப்­பி­ட­மாட்டார்.

கோத்­தா­பய ராஜபக் ஷவின் அர­சியல் பய­ணத்­துக்­கான பாதையை உருவாக்குவதற்காகதோற்­று­விக்­கப்­பட்ட அமைப்­பு­களை, வடக்­கிலும் நிறு­வு­வ­தற்­கான முயற்­சிகள் தீவி­ர­மாக நடந்து கொண்­டி­ருப்­ப­தாக செய்­திகள் வந்து கொண்­டி­ருக்­கின்­றன.

விரைவில் அவர் வடக்கு, கிழக்கில் இந்த அமைப்­பு­களின் செய­ல­கங்­களை நிறுவி, அதனூ­டாக பிர­சா­ரங்­களை முன்­னெ­டுக்கத் திட்­ட­மிட்­டி­ருப்­ப­தா­கவும், கூறப்­ப­டு­கி­றது.

மஹிந்த ராஜபக் ஷ தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்பின் கீழ் அடுத்த ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிடத் தகை­மை­யற்­றவர் என்­ப­தாலும், அவ­ருக்கு அடுத்த நிலையில் ராஜபக் ஷவி­னரில், அதிகம் செல்­வாக்குப் பெற்­றவர் என்­ப­தாலும், கோத்­தா­பய ராஜபக் ஷவைச் சுற்றி ஒரு விம்பம் உரு­வாக்­கப்­பட்டு வரு­கி­றது.

அவரே அடுத்த ஜனா­தி­பதி வேட்­பாளர் என்று வெளிப்­ப­டை­யாக கூறப்­ப­டாமல் – ஆனால் அதற்­கான முன்­த­யா­ரிப்­பு­களை மேற்­கொண்டு, உள­வியல் ரீதி­யாக அவரை ஏற்றுக்கொள்ள வைக்கும் ஒரு­வித உத்­தியை ராஜபக் ஷவினர் கையாளத் தொடங்கியுள்­ளனர்.

தெற்கில் அவரை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக ஏற்­றுக்­கொள்ளல் என்­பது கடி­ன­மான காரி­ய­மன்று.

போர் வெற்­றியில் அவர் வகித்த பங்கு தெற்­கி­லுள்ள சிங்­கள மக்­களில் கணி­ச­மானோர் அவரை கதா­நா­ய­க­னா­கவே போற்றும் நிலையைத் தோற்­று­வித்­தி­ருக்­கி­றது.

ஆனால், அது­மட்டும் ஒரு ஜனா­தி­பதி வேட்­பா­ள­ருக்குப் போது­மான தகை­மை­யாக இல்லை. சிங்­கள மக்­களின் வாக்­கு­களால் மாத்­திரம், ஜனா­தி­ப­தி­யாகி விட முடியும் என்ற எதிர்­பார்ப்­பு­ட­னேயே ராஜபக் ஷவினர் ஆரம்­பத்தில் காய்­களை நகர்த்­தினர்.

கோத்­தா­பய ராஜபக் ஷவும் கூட எலிய, வியத் மக போன்ற அமைப்­பு­களை உரு­வாக்கி ஒரு வரு­டத்­துக்கு மேலா­கியும், அவற்றை வடக்கு, கிழக்­கிற்கு கொண்டு செல்­வ­தற்கு முயற்­சிக்­க­வில்லை.

தனியே சிங்­கள வாக்­கா­ளர்­களை மாத்­திரம் நம்பி கள­மி­றங்­கலாம் என்ற, மனோநிலையை அதுவே தெளி­வாக காட்­டி­யி­ருந்­தது.

ஆனால், இந்த உத்தி பெரும்­பா­லான மாவட்­டங்­களில் பாரா­ளு­மன்றத் தேர்­தலில், அவர் போட்­டி­யி­டு­வ­தற்கு வேண்­டு­மானால் கைகொ­டுக்­கலாம்.

தனக்கு எல்லா இடங்­க­ளிலும் செல்­வாக்கு இருக்­கி­றது என்று நிரூ­பிக்க அம்­பாந்­தோட்­டையை விட்டு, குரு­நா­க­லுக்கு சென்று மஹிந்த ராஜபக் ஷ போட்­டி­யிட்­டது போல, வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய மாவட்­டங்­களில் தனிச் சிங்­கள வாக்­கா­ளர்­களை மையப்­ப­டுத்தி போட்­டி­யி­டு­வதில் கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கும் சிக்கல் இல்லை.

ஆனால், ஜனா­தி­பதித் தேர்தல் அவ்­வா­றா­ன­தொன்று அல்ல. ஜனா­தி­பதித் தேர்­தலில் சிங்­கள மக்­களின் வாக்­குகள் தீர்­மா­ன­க­ர­மா­ன­தாக இருந்­தாலும், அது­மாத்­தி­ரமே வெற்­றியைத் தந்து விடாது என்­பது ஏற்­க­னவே நிரூ­ப­ண­மா­கி­யி­ருக்­கி­றது.

சிங்­கள மக்கள் அடிப்­படைப் பலத்தைக் கொடுக்­கலாம். ஆனால், சிறு­பான்­மை­யி­ன­ரான தமி­ழர்­களும், முஸ்­லிம்­களும் தான், பெரும்­பாலும், இறுதி முடிவைத் தீர்­மா­னிக்­கின்ற வாக்­கு­களைக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

முன்­னரே இது தெரிந்த விடயம் தான் என்­றாலும், கடந்த சில மாதங்கள் வரை- சிறு­பான்­மை­யி­னரின் வாக்­குகள் இல்­லா­ம­லேயே- தனித்துச் சிங்­கள வாக்­கா­ளர்­களின் மூலமே வெற்­றியைப் பெற்று விடலாம் என்ற நம்­பிக்கை ராஜபக் ஷவி­ன­ரிடம் இருந்­தது என்­பதை மறுப்­ப­தற்­கில்லை.

அதனால் தான், அடுத்த ஜனா­தி­பதித் தேர்­தலில் வெற்­றியைப் பெறு­வ­தற்­கான தேர்­த­லுக்­கான ஏற்­பா­டு­களை அவர்கள் ஆரம்­பித்து சுமார் ஒன்­றரை ஆண்­டு­க­ளா­கியும், சிறு­பான்­மை­யினர் அவர்­களின் கண்­க­ளுக்குத் தெரி­யா­ம­லேயே இருந்து வந்­தனர்.

ஆனால், இப்­போது முஸ்­லிம்­களை நோக்­கியும், மலை­யகத் தமி­ழர்­களை நோக்­கியும் கோத்­தா­பய ராஜபக் ஷவி­னது கவனம் திரும்­பி­யி­ருக்­கி­றது. வடக்கு, கிழக்கை நோக்­கியும் அவ­ரது பிர­சார இயந்­திரம் திருப்பி விடப்­ப­ட­வுள்­ளது.

mahinda-400-seithy-300x227மஹிந்த ராஜபக் ஷ போருக்கு அர­சியல் ரீதி­யாகத் தலைமை தாங்­கி­யவர் என்ற போதும், அந்தப் போர் கொடூ­ர­மான முறையில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தற்­கான தலைமைத்­து­வத்தை வழங்­கி­யவர் தான் கோத்­தா­பய ராஜபக் ஷ.

சிறு­பான்­மை­யின மக்­க­ளான தமி­ழர்கள் மத்­தி­யிலும், முஸ்­லிம்கள் மத்­தி­யிலும் அவர் மீது வெவ்­வேறு வித­மான எதிர்ப்­புகள் உள்­ளன.

தமி­ழர்­களைப் பொறுத்­த­வ­ரையில் கோத்­தா­பய ராஜபக் ஷ மீது கொண்­டுள்ள வெறுப்­புக்கு, அவரால் முன்­னெ­டுக்­கப்­பட்ட போரும், அதன் முடிவும், அதில் நிகழ்ந்த நிகழ்த்­தப்­பட்ட கொடூ­ரங்­களும் தான் காரணம்.

முஸ்லிம் மக்­களைப் பொறுத்­த­வ­ரையில் அந்தக் காரணம் பொருத்­த­மன்று. ஏனென்றால், போரின்­போது அவர்­களும் கோத்­தா­பய ராஜபக் ஷவுடன் கைகோர்த்து நின்­ற­வர்கள். அதற்கு ஆத­ர­வாக போராட்­டங்­க­ளையும் நடத்­தி­ய­வர்கள்.

கோத்­தா­பய ராஜபக் ஷவின் பின்­புல ஆத­ர­வுடன் தான், பொது பல­சேனா போன்ற பௌத்த சிங்­கள அடிப்­ப­டை­வாத அமைப்­புகள், முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­களை கட்­ட­விழ்த்து விட்­டன என்று முஸ்­லிம்கள் வலு­வாக நம்­பு­கின்­றனர். அது தான் அவர்­க­ளுக்குப் பிரச்­சினை.

ஆனால், இப்­போது முஸ்­லிம்­களை சமா­தா­னப்­ப­டுத்த முயற்­சிக்­கிறார் கோத்­தா­பய ராஜபக் ஷ.

அதே­போன்று வடக்­கிலும் தனது செல்­வாக்கை உறு­திப்­ப­டுத்தக் கள­மி­றங்கப் போகிறார். வடக்கு மக்கள் மத்­தி­யிலும் தனக்கு ஆத­ரவு இருக்­கி­றது என்று காண்­பிக்க வேண்­டிய தேவை ஒன்றும், அவ­ருக்கு இருப்­ப­தாக தெரி­கி­றது.

கோத்­தா­பய ராஜபக் ஷ ஜனா­தி­பதித் தேர்­தலில் கள­மி­றக்­கப்­ப­டு­வதை அமெ­ரிக்கா விரும்­ப­வில்லை என்ற பேச்சு ஓரிரு மாதங்­க­ளா­கவே ஊட­கங்­களில் அடி­பட்டு வருகிறது.

அமெ­ரிக்கா அவரை விரும்­பா­த­மைக்கு, எல்லா இன மக்­க­ளாலும் ஏற்­றுக்­கொள்­ளப்­படக் கூடிய ஒரு தலை­வ­ராக அவர் இல்லை என்ற காரணம் அமெ­ரிக்கத் தரப்பில் சொல்­லப்­பட்­டி­ருந்­தாலும் ஆச்­ச­ரி­ய­மில்லை.

சிங்­கள மக்கள் அவரை ஏற்றுக் கொண்­டாலும், முஸ்­லிம்­களும் தமி­ழர்­களும் அவரை வெறுக்­கி­றார்கள், அவரை போட்­டியில் நிறுத்த வேண்டாம் என்று அமெ­ரிக்கா கூறியிருக்­கலாம்.

இதனை அவர்கள் நேர­டி­யாக அன்றி, நாசூக்­கா­கவோ இரா­ஜ­தந்­திர மொழி­க­ளிலோ இந்த தக­வலை பரி­மா­றி­யி­ருக்க வாய்ப்­புகள் உள்­ளன.

அத்­த­கைய கட்­டத்தில் இருந்தே, எல்லா இன மக்கள் மத்­தி­யிலும் கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு ஆத­ரவு உள்­ளது என்று காண்­பிக்க முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கலாம்.

அதை­விட ஜனா­தி­பதித் தேர்­தலில், சிறு­பான்­மை­யின மக்­களின் வாக்­கு­களும், வெற்றி தோல்­வியை தீர்­மா­னிக்கக் கூடி­யவை என்­பதை மறுப்­ப­தற்­கில்லை.

எது­எவ்­வா­றா­யினும், கோத்­தா­பய ராஜபக் ஷ இப்­போது வடக்கை நோக்கித் திரும்ப எத்த­னிக்கும் நிலையில், வடக்­கி­லுள்ள மக்கள் அவ­ருக்கு அர­சியல் ரீதி­யாக எவ்­வாறு எதிர்­வி­னை­யாற்றப் போகி­றார்கள் என்ற கேள்வி உள்­ளது.

அத்­த­கைய எதிர்­வி­னையை தேர்தல் ஒன்றின் மூலம் தான் தெளி­வாக மதிப்­பிட முடியும். அதற்கு இன்­னமும் காலம் இருக்­கி­றது.

அதற்கு முன்­ன­தாக, அவர் தான் வேட்­பாளர் என்­பது உறு­தி­யாக வேண்டும்.

மஹிந்த ராஜபக் ஷவைப் பொறுத்­த­வ­ரையில் இன்­னமும் அவர், எந்த முடி­வையும் அறி­விக்­க­வில்லை. அதற்­காக அவர் யாரை நிறுத்­து­வது என்று இன்னும் முடி­வெ­டுக்­காமல் இருக்­கிறார் என்று அர்த்­த­மில்லை.

மஹிந்­தவைப் பொறுத்­த­வ­ரையில், கோத்­தா­பய ராஜபக் ஷவை ஏற்றுக் கொள்­வ­திலும், அவரை இல்­லை­யென்று வெட்டி விடு­வ­திலும் பிரச்­சி­னைகள் உள்­ளன.

அதா­வது, மஹிந்த தரப்பில் உள்­ள­வர்­களில் கோத்­தாவைப் பிடிக்­கா­த­வர்கள் இருப்­பது போலவே, மஹிந்­தவைப் பிடிக்­காத கோத்தா ஆத­ர­வா­ளர்­களும் இருக்­கி­றார்கள். அவ்வா­றா­ன­வர்­களின் எதிர்ப்­பையோ காழ்ப்­பையோ அவர் குறைத்து மதிப்­பி­ட­மாட்டார்.

அதே­வேளை, கோத்­தா­பய ராஜபக் ஷ அர­சி­யலில் இறங்­கு­வதை குறிப்­பாக ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­டு­வதை அமெ­ரிக்கா விரும்­ப­வில்லை என்றும், அதனைத் தடுப்­ப­தற்கு அவ­ருக்கு எதி­ராக போர்க்­குற்ற ஆயு­தத்தை கையில் எடுக்கப் போவ­தா­கவும் ஒரு மாயை உரு­வாக்­கப்­பட்டு வரு­கி­றது.

சிங்­கள ஊட­கங்கள், இப்­போது. கோத்­தா­பய ராஜபக் ஷவை ‘ஹீரோ’ நிலையில் வைத்தி­ருக்­கின்­றன.

கோத்­தா­பய ராஜபக் ஷ ஒரு அமெ­ரிக்க குடி­மகன் என்ற வகையில், அந்த நாடு சில விருப்பு வெறுப்­பு­களை கொண்­டி­ருக்­கலாம்.

கோத்­தா­பய ராஜபக் ஷ இலங்­கையில் ஆட்சிக்கு வரும் சூழல் ஏற்­பட்டால், தமது நலன்­க­ளுக்குப் பாதிப்பை ஏற்­ப­டுத்தக் கூடும் என்றும் அமெ­ரிக்கா சிந்­திக்­கலாம்.

அதற்­காக, அமெ­ரிக்கா அவ­ருக்கு எதி­ராக போர்க்­குற்­றச்­சாட்­டு­களை தீவி­ரப்­ப­டுத்தும் என்று எதிர்­பார்ப்­பது மிகை­யா­ன­தொன்­றா­கவே தென்­ப­டு­கி­றது.

போர் முடிந்து ஒன்­பது ஆண்­டு­க­ளா­கியும், கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு எதி­ரான போர்க்குற்­றச்­சாட்டு பற்றி அமெ­ரிக்கா எந்த நட­வ­டிக்­கை­யிலும் இறங்­கி­ய­தில்லை.

அவர் அமெ­ரிக்கா சென்ற போது சில சம்­ப­வங்கள் தொடர்­பாக, விசா­ர­ணையை முன்­னெ­டுத்­ததை தவிர, வேறெந்த நட­வ­டிக்­கை­யிலும் ஈடு­பட்­ட­தில்லை. அவர் மீது குற்­றச்­சாட்­டையும் முன்­வைத்­த­தில்லை.

திடீ­ரென அவ­ருக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டு­களைப் பற்­றிய அமெ­ரிக்கா தகவல் திரட்ட ஆரம்­பித்­துள்­ள­தா­கவும், அதற்கு காணாமல் போனோர் குறித்து ஆராய்ந்த ஆணைக்­கு­ழுவின் தலைவர் மக்ஸ்வெல் பர­ண­க­ம­விடம் தக­வல்­களை அமெ­ரிக்க திரட்­டி­ய­தா­கவும் தக­வல்கள் வெளி­யா­கின்­றன.

இலங்­கையில் நடந்த போர்க்­குற்­றங்கள் தொடர்­பான அதி­க­ளவு தக­வல்­களைக் கொண்­டி­ருக்கும் நாடு அமெ­ரிக்­கா­வா­கவே இருக்கும். அத­னிடம் போர்க்­குற்­றங்கள் தொடர்­பான ஏரா­ள­மான ஆதா­ரங்­களும் சாட்­சி­யங்­களும் உள்­ளன.

140606120236_lanka_disappeareneces_640x360_bbcஅதை­விட, கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு எதி­ராக சாட்­சி­யங்­களைத் திரட்ட மக்ஸ்வெல் பர­ண­கம ஒரு­போதும் உத­வ­மாட்டார். அவர் ஒரு முன்னாள் நீதி­பதி. உள்­நாட்டு சட்­ட­வ­ரம்­பு­களை அறிந்­தவர். வெளி­நாட்டு நீதித் தலை­யீ­டு­களை எதிர்ப்­பவர்.

அவ­ரிடம் போய், கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு எதி­ராக அமெ­ரிக்கா ஆதாரம் கேட்­டது என்­பது மிகை­யான கற்­ப­னை­யா­கவே தோன்­று­கி­றது.

கோத்­தா­பய ராஜபக் ஷவின் அர­சியல் பிர­வே­சத்தை தடுக்க அமெ­ரிக்கா முடிவு செய்தால் அதனை கொழும்பில் இருந்து ஆரம்­பிப்­பதை விட வொஷிங்­டனில் இருந்து தொடங்­கு­வது இல­கு­வா­னது.

அவ்­வா­றான ஒரு கதவைத் திறக்­காத அமெ­ரிக்கா, கொழும்பில் அதற்­கான நகர்­வு­களை முன்­னெ­டுக்­கி­றது என்­பது வேடிக்­கை­யா­ன­தா­கவே தெரி­கி­றது.

எவ்­வா­றா­யினும், வடக்கின் மீது கவனம் செலுத்த ஆரம்­பிக்கும் கோத்­தா­வுக்கு, அது தெற்கில் ஏற்­ப­டுத்தக் கூடிய தாக்­கங்­களைச் சம­நி­லைப்­ப­டுத்த வேண்­டிய தேவையும் உள்­ளது.

அதற்கு அமெரிக்காவையும், போர்க்குற்றங்களையும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதா என்றே சந்தேகிக்க வேண்டியுள்ளது.

-என்.க­ண்ணன்-

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.