நான்கு வகை கர்மாக்கள்!!

0
246

நீங்கள் பறிக்காத பழுத்த ஆப்பிள் என்னவாகிறது? அது தரையில் விழுகிறது. தப்பிக்க வழியேதுமில்லை.

கர்மாவின் சட்டம் பற்றிய மேலும் சில கோட்பாடுகளைத் தெளிவாக நான் விளக்குகிறேன்.

இன்று நான் பல்வேறு வேத நூல்களில் இருந்து எடுக்கப்பட்ட கர்மாவின் நான்கு வகைகளைப் பற்றிக் கூறப் போகிறேன்.

எப்பொழுதும் போல் நான் வேதத்தின் வரையறைகளை வழங்கலாம், ஆனால் இந்த விளக்கம் எனது தனிப்பட்ட கருத்தாகும், இதுவரை அறியப்பட்ட கருத்துகளிலிருந்து மாறுபட்டதாக இருக்கலாம்.

கீழே உள்ளது நான்கு வகையான வகைப்பாடு ஆகும். இது அந்த முத்திரைகளைப் பற்றியதான உணர்தல் ஆகும். அவை பின்வருமாறு:

1. ப்ராரப்தா, முதிர்ச்சியடைந்த, கர்மா

ஒரு மரத்தில் ஒரு ஆப்பிள் பழம் இருப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். அது நன்கு முதிர்ந்து பழுத்து உள்ளது.

அதைச் சரியான நேரத்தில் பறிக்க வேண்டும் அல்லது அது மரத்திலிருந்து தன்னைத் துண்டித்துக் கொண்டு நிலத்தில் விழுகிறது.

அது எப்போதும் மரத்திலேயே இருக்க முடியாது. இதேபோல், ப்ராரப்தா என்பது பழுத்த கர்மா ஆகும். எப்போதோ நீங்கள் நட்ட மரத்திலிருந்து இன்று பழம் விழத் தயாராக உள்ளது. உங்களது விருப்பத்தை அல்லது உங்களது தேர்வைப் பொருட்படுத்தாமல், வில்லை விட்டுப் புறப்பட்ட அம்பைப் போல், அதற்குத் தேவையான பாதையை அது எடுத்துக் கொண்டுள்ளது.

எந்தக் கர்ம செயலை நீங்கள் செய்தாலும், அது பிரபஞ்சத்தில் பதிவு செய்யப்பட்டு, உரியக் காலத்தில் அதன் பலன் வந்து சேருகிறது. அதிலிருந்து தப்பிக்க முடியாது.

தற்போதைய வாழ்க்கையில் நீங்கள் என்ன அனுபவிக்கிறீர்களோ, தற்போது என்ற சொல்லைக் கவனிக்கவும், அதில் எதன் மீது நீங்கள் கட்டுப்பாடு செய்ய முடியாதோ அதுவே உங்களது ப்ராரப்த கர்மா ஆகும்.

அதற்கு, நீங்கள் உங்களது எதிர்காலத்தை மாற்ற முடியாது என்று அர்த்தம் இல்லை. எது முதிர்ச்சியடைந்து விட்டதோ அதுவே ப்ராரப்தா.

எதிர்காலத்தில் முதிர்ச்சி அடையும் எந்த கர்மாவும் ப்ராரப்தா அல்ல. அது இரண்டாவது வகையின் கீழ் வருகிறது:

2. சஞ்சிதா, சேமிக்கப்பட்ட, கர்மா

இது உங்களுடைய சேமித்து வைக்கப்பட்டுள்ள கர்மா ஆகும். மரத்தில் அனைத்துப் பழங்களும் ஒரே நாளில் முதிர்ச்சியடைவதில்லை, அவை அடுத்தடுத்த பருவத்தில் முதிர்ச்சியடைகின்றன.

இந்தக் காரணத்தால் தான் பெரும்பான்மையான மக்களின் வாழ்க்கை பெரிதும் சுழற்சியில் உள்ளது. ஏன்? நீங்கள் ஆப்பிள் மரங்கள் நட்டால் பருவம் வரும் போது உங்களுக்கு நிறைய ஆப்பிள் பழங்கள் கிடைக்கும்.

காட்டு பெர்ரிகளை நட்டால் பருவம் வரும் போது முட்களுடன் கூடிய காட்டு பெர்ரிக்களே செழித்து நிறைய வளரும்.

இந்தக் காரணத்தால் தான் சிக்கல்கள் தனித்தனியே வருவதில்லை மொத்தமாக வருகின்றன, அதுபோலவே நல்ல காலமும்.

சஞ்சித கர்மாவிற்கு ஒரு தனித்தன்மை உள்ளது, அதை மாற்ற முடியும்! நீங்கள் உங்களது ஆப்பிள் அல்லது பெர்ரியின் ஆதாரத்திற்குச் செல்ல முடியும் என்றால், அவற்றை வளர்க்கவோ அல்லது மொத்தமாக அழிக்கவோ நீங்கள் தேர்வு செய்யலாம். ஆதாரத்திற்குப் போவதே முக்கியமானதாகும்.

3. ஆகமி, இனி வரும், கர்மா

நீங்கள் ஆப்பிள் தோட்டத்தில் நுழைந்துள்ளது போல் கற்பனை செய்து கொள்ளுங்கள். நீங்கள் ஒரு கர்மாவை கட்டாயத்தினாலோ அல்லது தானாகவோ செய்து விட்டீர்கள்.

இந்த கர்மாவின் அடிப்படையில், ஆப்பிள் மரங்களைப் பார்ப்பது, வாசனையை அனுபவிப்பது போன்ற பிற கர்மாக்கள் பிணைக்கப்படுவதுடன், பழத்தோட்டத்தை விட்டு வெளியேறும் ஒரு உறுதியான கர்மாவும் முதிர்ச்சி அடையக் காத்திருக்கிறது. இந்தக் கர்மாவின் முக்கியத்துவத்தைக் குறைத்தோ அல்லது அதிகமாகவோ மதிப்பிடப்பட முடியாது.

இன்று நீங்கள் செய்யும் தேர்வு உங்களது எதிர்காலத்தை நேரடியாகத் தாக்குகிறது. தற்போதைய தருணத்தில் நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதுவே அடுத்து வெளிப்படுவதை நிர்ணயிக்கிறது.

ஆகமி கர்மா என்பது ஒரு சிறிய அளவு தேர்வே உள்ள கட்டாயக் கர்மா ஆகும். நீங்கள் பழத்தோட்டத்திற்குள் நுழைந்து விட்டால், வெளியேறும் செயலையும் இப்பொழுதோ அல்லது பின்னரோ செய்தாக வேண்டும்.

சேமித்து வைக்கப்பட்டுள்ள சஞ்சித கர்மாவை மாற்ற முடியுமானால் அல்லது தற்போது உள்ள கர்மாவை அக்கறையுடன் செய்ய முடியும் என்றால் இது தானாகவே மாறுகிறது. எப்படி ஒருவர் சஞ்சித கர்மாவை மாற்ற முடியும்? தொடர்ந்து படியுங்கள்.

4. வர்த்தமான, தற்போதைய, கர்மா

நடவடிக்கை எடுக்கத் தக்க, தற்போதைய கர்மா, நாம் இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறோமோ அது, க்ரியாமான என்றும் அறியப்படுகிறது.

இதைவிடச் சிறந்த மற்றொரு பெயரான புருஷார்த்தா, முயற்சி, கர்மா என்றும் இது அழைக்கப்படுகிறது.

உங்களுக்கு இனி ஆப்பிள்கள் வேண்டாம் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் அந்த மரங்களை வெட்ட முடியும் அல்லது அடியோடு பிடுங்கிவிட முடியும்.

நீங்கள் இன்னும் அந்த ஆப்பிளின் மரக்கட்டைகள், அதன் பசுமைக் கழிவுகள், அழுகிய ஆப்பிள்கள் மற்றும் மீதமுள்ளவற்றையும் அகற்றுவதற்கான ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும்.

ஆனால், இது ஒருமுறை செய்யும் கடின முயற்சியாகும். அதன் பின்னர், அடுத்தடுத்து வரும் ஆண்டுகளில் பழங்கள் நமக்காகக் காத்திருக்கப் போவதில்லை.

உங்கள் கர்மாவின் நிலத்தை ஒரு வழக்கமான அடிப்படையில் சுத்தம் செய்து கொண்டே, நீங்கள் சாதாரணமாக கோதுமையை விதைக்கத் தேர்வு செய்து சில மாதங்களுக்குப் பிறகு அறுவடை செய்யலாம்.

ஒரு ஏற்புடைய கேள்வி என்னவென்றால், நீங்கள் புதிய கர்மாவை உருவாக்குகிறீர்களா அல்லது உங்கள் கடந்த கால கர்மாவின் விளைவை அனுபவிக்கிறீர்களா என்பது எப்படித் தெரியும்? அதன் பதில் மிகவும் எளிதானதாகும்.

தேர்ந்தெடுத்து ஒரு வேலையைச் செய்ய வேண்டியிருந்தால் நீங்கள் புதிய கர்மாவை உருவாக்குகிறீர்கள்.

நல்லதோ அல்லது கெட்டதோ, அதன் விளைவுகள் உங்களையே வந்து சேரும். நீங்கள் கட்டாயத்தின் பேரில் ஒரு வேலையைச் செய்ய வேண்டியிருந்தால் உங்களது கர்மாவின் கடனைத் திருப்பிச் செலுத்துவதாகும்.

உங்களுடைய சேமிக்கப்பட்ட கர்மாவை(சஞ்சித கர்மா) நிர்வகிப்பதன் மூலம் இதைக் கையாளலாம்.

சாராம்சமாக, நான் உங்கள் வாழ்வில் மாற்றம் கொண்டு வர முடியும் என்று பரிந்துரைக்கிறேன்.

நீங்கள் பொறுமையாகவும், உறுதியாகவும் இருந்தால் நீங்கள் விரும்பிய மாற்றத்தைக் கொண்டு வர முடியும்.

எனவே, நீங்கள் அடுத்த பில் கேட்ஸ் அல்லது அடுத்த புத்தராக ஆக முடியுமா? நீங்கள் மாற்றத்தை, இலக்காகத் தவறுதலாகப் புரிந்து கொள்கிறீர்கள்.

உங்களால் காலத்தில் பின்னோக்கிச் செல்ல முடியுமானால், உங்களாலும் பில் கேட்ஸ் செய்தது போல் ஒரு இயக்க அமைப்பை உருவாக்க முடியுமானால், அவரைப் போல் சிந்தித்து, அவரைப் போல் நடந்து, அவர் எப்போது செய்தாரோ அதே போல் செய்தால் நீங்களும் மற்றொரு பில் கேட்ஸாக ஆக முடியும்.

புத்தர் செய்ததைப் போல் உங்களால் எல்லாம் துறக்க முடியுமானால், அவர் செய்ததைப் போல், அவருடைய முறையில், அவர் செய்த கால அளவிற்குத் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டால், நீங்களும் புத்தரைப் போல் ஆவீர்கள்.

பில் கேட்ஸ் ஒரு IBM அல்லது ஒரு ஆப்பிள் போல் ஆக வேண்டாம் என்பதைத் தேர்வு செய்து, தனது சொந்தப் பார்வை, தனது சொந்த வடிவமைப்புக்கு உண்மையாக இருந்ததால் பில் கேட்ஸ் ஆனார்.

புத்தர், வேறு சில போதகர் அல்லது முனிவர் போல் வரவேண்டும் என்று தேர்வு செய்யாமல், தனது சொந்தப் பாதையில் தொடர்ந்து, அவர் தன்னைக் கண்டறிதலைத் தேர்வு செய்து, தனது சொந்த உழைப்பால் புத்தர் ஆனார்.

உங்களது மனநிறைவு மற்றொரு பில் கேட்ஸ் அல்லது மற்றொரு புத்தர் போல் ஆவதால் வரப் போவதில்லை, உங்களது சொந்த வீட்டை உருவாக்குவதில் இருந்து தான் வரப் போகிறது.

மற்றொரு வீட்டில் எவ்வளவு தான் நீங்கள் வரவேற்கப்பட்டாலும், அந்த வீட்டினர் எவ்வளவு தான் நன்கு விருந்தோம்பல் செய்தாலும், சிறிது காலத்திற்குப் பின்னர் நீங்கள் உங்கள் சொந்த வீட்டில் இருப்பது போல் உணர மாட்டீர்கள்.

நீங்கள் உங்கள் வீட்டில் மட்டும் தான் சொந்த வீடு போல் உணர்வீர்கள். உங்களுக்கு முன்மாதிரியானவர்கள் அல்லது முன்மாதிரியான நல்ல எண்ணங்கள் இருக்கலாம், ஆனால் நீங்கள் நீங்களாகவே இருப்பது, உங்களைக் கண்டறிவது, உங்கள் சொந்த உண்மையைக் கண்டறிவது தான் முக்கியம்.

அறிந்தோ அறியாமலோ முன்பு நீங்கள் செய்த தேர்வுகள், உங்களுக்கு நீங்கள் இப்பொழுது உள்ள நிலையைக் கொடுத்திருக்கிறது.

மற்றும் நீங்கள் இன்று செய்யும் தேர்வுகள் உங்களது நாளையை நிர்ணயிக்கிறது. எனவே, உங்களது தற்போதைய செயல்களில், தற்போதைய எண்ணங்களில் கவனம் செலுத்த வேண்டியது மிக முக்கியம்.

எதிர்காலத்தில் கிடைக்க இருக்கும் தேர்வுகள், உங்களுடைய தற்போதைய நடவடிக்கைகளின் ஒரு நேரடி செயல்பாடாகும். ஒரு வழித்தோன்றல் ஆகும்.

உங்கள் எதிர்காலம், உண்மையில் உங்கள் வாழ்க்கை, தற்போதைய நடவடிக்கையைப் பொறுத்தே உள்ளது.

அமைதி.
சுவாமி

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.