கூட்டமைப்பின் முத­ல­மைச்சர் வேட்­பாளர் யார் ? விரைவில் அறி­விக்க ரெலோ, புளொட் கோரிக்கை!!

0
183

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் சார்பில் வட­மா­கா­ண­ச­பைக்­கான அடுத்த தேர்­தலில் கள­மி­றக்­கப்­ப­ட­வுள்ள முத­ல­மைச்சர் வேட்­பாளர் யார் என்­பது தொடர்பில் விரைந்து முடி­வெ­டுத்து பகி­ரங்­க­மாக அறி­விக்க வேண்­டு­மென கூட்­ட­மைப்பின் தலை­வரும், எதிர்க்கட்சித்தலை­வ­ரு­மான  பங்­கா­ளிக்­கட்­சி­க­ளான ரெலோ, புளொட் ஆகி­யன கூட்­டாக கோரிக்கை விடுத்­துள்­ளன.

தற்­போ­தைய முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் கூட்­ட­மைப்­பி­லி­ருந்து வெளி­யேறும் பட்­சத்தில் பாரிய பின்­ன­டை­வுகள் ஏற்­படும் என்பதையும் பங்­கா­ளிக்­கட்­சிகள் தலைவர் சம்­பந்­தனின் கவ­னத்­திற்கு கொண்டு வந்­தி­ருந்­தன.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஒருங்­கி­ணைப்புக் குழுக் கூட்­டத்­தி­லேயே மேற்­கண்ட விடயம் கவ­னத்தில் கொள்­ளப்­பட்­டுள்­ளது. கொழும்பில் நடை­பெற்­றி­ருந்த இக்­கூட்டம் தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

வட­மா­காண சபைக்கு அடுத்த தேர்­தலில் முத­ல­மைச்சர் வேட்­பாளர் யார் என்­பது தொடர்பில் பல்­வேறு கருத்­துக்கள் நிலவி வரு­கின்­றன.

கூட்­ட­மைப்பின் தலை­வ­ரான தாங்கள் அது தொடர்பில் தீர்க்­க­மான அறி­விப்­பொன்­றினைச் செய்ய வேண்டும் என்று ரெலோ, புளொட் தரப்­புக்கள் முதலில் கோரிக்கை விடுத்­தன.

அத­னை­ய­டுத்து தற்­போ­துள்ள முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் தொடர்­பிலும் கருத்­துக்கள் பரி­மா­றப்­பட்­டன.

குறிப்­பாக, விக்­கி­னேஸ்­வ­ர­னுக்கு கணி­ச­மான மக்கள் செல்­வாக்கு காணப்­ப­டு­கின்­றது.

ஆகவே அவர் கூட்­ட­மைப்­பி­லி­ருந்து வெளியேறினால் அது பெரும் பின்­ன­டை­வாக அமைந்து விடும். எனவே அந்த விடயம் சம்­பந்­த­மா­கவும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் பங்­கா­ளிக்­கட்­சிகள் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தன.

இவ்­வி­ட­யங்­களை அவ­தா­னித்­துக்­கொண்­டி­ருந்த கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன், மக்கள் செல்­வாக்கு சம்­பந்­த­மான விட­யத்­தினைக் கருத்­திற்­கொண்­டி­ருந்­த­தோடு வேறு தெரி­வுகள் எவையும் கூட்­ட­மைப்பில் இருக்­கின்­றதா என்ற தொனிப்­ப­டவும் சில கருத்­துக்­களை முன்­வைத்­தி­ருந்தார்.

எனினும் அவை எதுவும் தீர்க்­க­மா­ன­தாக குறிப்­பி­டப்­ப­ட­வில்லை என அறி­ய­மு­டி­கின்­றது.

இதே­வேளை இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­வ­ரான மாவை.சோ.சேனா­தி­ராஜா எம்.பி., முத­ல­மைச்சர் விட்­டி­ருக்­கின்ற தவ­றுகள் தொடர்­பிலும் கவ­னத்­தினைச் செலுத்த வேண்­டி­யது முக்­கி­ய­மா­கின்­றது என்றும் குறிப்­பிட்­டி­ருந்தார்.

அத­னை­ய­டுத்து இவ்­வி­டயம் சம்­பந்­த­மாக ஆராய்ந்து தீர்க்­க­மான முடி­வெ­டுப்­ப­தென்று தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

இந்­நி­லையில் வட­மா­கா­ணத்தில் நீடித்­துக்­கொண்­டி­ருக்கும் சர்ச்­சைக்­கு­ரிய அமைச்­ச­ரவை விடயம் சம்­பந்­த­மா­கவும் இதன்­போது கவ­னத்தில் கொள்­ளப்­பட்­டது.

முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் தற்­போது கூட்­ட­மைப்­பி­னையே பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­வ­தா­கவும், தாங்­களே(சம்­பந்­தனே) தலைவர் என்றும் கூறிவருகின்ற நிலையில் அவருக்கு எதிராக கூட்டமைப்பில் உள்ளவர்களே வழக்குகளை தாக்கல் செய்து வாதப்பிரதிவாதங்கள் செய்துகொண்டிருப்பது பொருத்தமற்றதொரு செயற்பாடாக இருக்கின்றது.

ஆகவே அந்த விடயத்திலும் உரிய முடிவொன்று எடுக்கப்பட வேண்டும் என்றும் பங்காளிக்கட்சிகள் சம்பந்தனிடத்தில் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.