வெளியானது கருணாநிதியின் இறப்பு சான்றிதழ்: எந்த மனைவியின் பெயர் இடம்பெற்றுள்ளது தெரியுமா?

0
409

சென்னை பெருநகர மாநகராட்சியில் திமுக தலைவர் கருணாநிதியின் இறப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி கடந்த செவ்வாய் கிழமை மரணமடைந்தார்.

நேற்று அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் கருணாநிதியின் இறப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இறப்பு சான்றிதழில் கருணாநிதியின் வயது, இறந்த திகதி, இறந்த இடம், தாய், தந்தையின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

மனைவியின் பெயர் என்ற இடத்தில் கருணாநிதியின் இரண்டாவது மனைவி தயாளு பெயர் இடம்பெற்றுள்ளது.

தமிழகத்தின் முதுபெரும் தலைவரான திமுக தலைவர் கருணாநிதி செவ்வாய் கிழமை மாலை மரணம் அடைந்தார். தமிழகம் முழுக்க இதற்காக துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

நேற்று அவரது உடல் மெரினாவில் அண்ணா சமாதிக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது. அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்த அவரது உடல் ராஜாஜி ஹாலில் இருந்து மெரினா நோக்கி கொண்டு செல்லப்பட்டது.

இப்போதும் தொண்டர்கள், மக்கள் அவரது உடல் இருக்கும் சமாதியை நோக்கி சென்று வருகிறார்கள். இந்த நிலையில் கருணாநிதியின் இறப்பு பதிவு செய்யப்பட்டு, அந்த சான்றிதழ் தற்போது வெளியாகி உள்ளது.

அஞ்சுகம், முத்துவேல் மகன், எம் கருணாநிதி என்று இறப்பு பதிவு செய்யப்பட்டு உள்ளது. 94 வயதில் 7-8-2018 அன்று இறந்ததாகவும் அதில் விவரம் அளிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதி மருத்துவமனையில் சேர்ந்ததில் இருந்தே திமுக கட்சி மிகவும் வெளிப்படையாக செயல்பட்டது. அனைத்து விவரங்களையும் மக்களுக்கு தெரியப்படுத்திக் கொண்டே இருந்தது. இதோ இப்போது இறப்பு சான்றிதழையும் வெளியிட்டு இருக்கிறார்கள்.

625.0.560.350.160.300.053.800.668.160.90

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.