கருணாநிதி உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி!! : குவியும் தொண்டர்கள் – வீடியோ

0
369

சென்னை: ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தினார்.

கருணாநிதி கடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல்நிலை நேற்று முன் தினம் மோசமடைந்தது.

இதையடுத்து கருணாநிதிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் தொடர்ந்து நேற்றும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏதும் இல்லை.

இதையடுத்து அவரது உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழந்தன. பின்னர் கருணாநிதியின் உயிர் மாலை 6.30 மணிக்கு பிரிந்தது. அவரது உடல் கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

கருணாநிதியின் உடலுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அஞ்சலி செலுத்தினார்.

இதையடுத்து திருமாவளவன், முத்தரசன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். ரஜினிகாந்தும் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

இந்நிலையில் இன்று காலை ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்ட கருணாநிதியின் உடலுக்கு ரஜினிகாந்த் தன் குடும்பத்தினருடன் அஞ்சலி செலுத்தினார்.

அவருடன் மனைவி லதா ரஜினிகாந்த், மகள் ஐஸ்வர்யா மற்றும் மருமகன் தனுஷ் உள்ளிட்டோர் வந்திருந்தனர். பின்னர் ஸ்டாலின் மற்றும் அழகிரிக்கு ரஜினி ஆறுதல் கூறினார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.