விஸ்வரூபம்-2 திரைப்படத்தின் புதிய மேக்கிங் விடியோ வெளியீடு!!- (வீடியோ)

0
237

நடிகர் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2′ திரைப்படத்தின் புதிய மேக்கிங் விடியோ தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் கமல் நடித்து இயக்கியுள்ள ‘விஸ்வரூபம் 2′ படத்தில் பூஜா குமார், ஆண்டிரியா, சேகர் கபூர், ராகுல் போஸ், வஹீதா ரஹ்மான், நாசர் போன்றோர் நடித்துள்ளார்கள்.

தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் நேரடியாக உருவாக்கப்பட்டுள்ள விஸ்வரூபம் 2 படம், தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. ஆக, ஒரே நாளில் மூன்று மொழிகளிலும் வெளியாகவுள்ளது.

இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். பாடல்களை வைரமுத்து மற்றும் கமல் எழுதியுள்ளனர். இந்த திரைப்படம் வரும் 10ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் ‘விஸ்வரூபம்-2′ திரைப்படத்தின் புதிய மேக்கிங் விடியோ தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தம் ஒரு நிமிடத்திற்கும் குறைவாக ஓடக் கூடிய இந்த மேக்கிங் விடியோவில் படத்தின் சண்டைக்காட்சிகள் உருவாக்கம் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

விடியோ:

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.