கிகி டான்ஸ்.. ரெஜினாவுக்கு ‘வாவ்’ சொன்ன காஜல்.. போலீஸ் எச்சரிக்கை..!! (வீடியோ)

0
511

கிகி சாலன்ஞ் வீடியோ வெளியிட்ட நடிகை ரெஜினாவை, காஜல் அகர்வால் பாராட்டியுள்ளார். ஆனால், ஆபத்து விளைவிக்கும் இதுபோன்ற சவால்களை நடிகர், நடிகைகள் மேற்கொள்ள வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

பிரபல பாப் பாடகர் டிரேக்சின், ‘ஸ்கார்பியன்’ என்ற இசை ஆல்பத்தில் இடம் பெற்றுள்ள பாடல் ‘இன் மை பீலிங்ஸ்’, சமீபத்தில் ரிலீசாகி இணையத்தில் பெரும் வரவேற்பபை பெற்றது.

இந்த ஆல்பத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ‘இன் மை பீலிங்ஸ்’ சாலஞ்ச் அல்லது ‘கிகி சாலஞ்ச்’ என்ற பெயரில் சமூகவலைதளத்தில் சவாலாக வைரலானது.

உலக அளவில் பிரபலமாகி வரும், இந்த சவாலில் ஓடும் காரிலிருந்து இறங்கி, அதன் ஓட்டத்துடனேயே டான்ஸ் ஆடிக் கொண்டு வரவேண்டும்.

இதன் பின்னணியில் ‘கிகி நீ என்னை விரும்புகிறாயா’ என்ற பிரபலமான ராப் பாடலும் இசைக்கப்படும். கிகி சாலஞ்ச்: இந்த சவால் தற்போது இந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது.

பொதுமக்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்களும் இந்த சவாலை ஏற்றுக் கொண்டு தங்களது வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.


அவர்களது வீடியோக்களைப் பார்த்து ரசிகர்களும் இதே முயற்சியில் ஈடுபடுகின்றனர். எச்சரிக்கை:

ஆனால், இந்த சவால் பார்ப்பதற்கு எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கிறதோ, அதே அளவிற்கு ஆபத்தானது.

ஓடும் காரில் இருந்து இறங்கி நடனம் ஆடிய பலர், பலத்த காயங்களுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் போலீசார் இச்சவாலை செய்யக்கூடாது என பல்வேறு எச்சரிக்கைகளையும், ஆலோசனைகளையும் வெளியிட்டு வருகின்றனர்.

regina344545-1533137110இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழ் நடிகை ரெஜினா தனது சமூகவலைதளப் பக்கத்தில் கிகி சாலஞ்ச் வீடியோவை வெளியிட்டிருந்தார்.

பாவாடை தாவணி கட்டியபடி, ஓடும் காரில் இருந்து இறங்கி சாலையில் அவர் நடனமாடியிருந்தார்.

படப்பிடிப்பு ஒன்றின் இடைவேளையில் இந்த வீடியோ படமாக்கப்பட்டதாகத் தெரிகிறது. காஜல் பாராட்டு: ‘தென்னிந்தியப் பெண்களாலும் இந்த சவாலை மேற்கொள்ள முடியும்’ என இந்தப் பதிவில் அவர் கூறியிருந்தார்.

kajal-agarwal12-1533137182ரெஜினாவின் இந்த வீடியோவைப் பார்த்து நடிகை காஜல் அகர்வால் பாராட்டியுள்ளார். அபாயம்:

ஆனால், நடிகர், நடிகைகள் இந்த சவாலை செய்ய வேண்டாம் என்றும், அவர்களைப் பார்த்து அவர்களது ரசிகர்களும் இந்த விபரீத சவாலை செய்து பார்க்கும் அபாயம் இருப்பதாகவும் போலீசார் எச்சரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.