பாலாஜி மீது குப்பையைக் கொட்டியது மனிதத்தன்மையற்ற குரூரமான செயல்: நித்யா கோபம்..!! (வீடியோ)

0
285

பிக் பாஸ் வீட்டில் பாலாஜி மீது குப்பையைக் கொட்டியது மனிதத்தன்மையற்ற குரூரமான செயல் என பாலாஜியின் மனைவியும், பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான நித்யா தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் சர்வாதிகாரி டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் வீட்டின் தலைவியான ஐஸ்வர்யா சர்வாதிகாரியாகவும், அவருக்கு பாதுகாவலராக டேனியும், ஆலோசகராக ஜனனியும் உள்ளனர்.

ஏற்கனவே, தனிப்பட்ட முறையில் பாலாஜி மீது கோபத்தில் இருந்த ஐஸ்வர்யா, இந்த டாஸ்கில் தனது வஞ்சத்தை தீர்த்துக் கொள்ளும் வகையில் அவர் மீது குப்பைகளைக் கொட்டினார்.

balaji99-1531727124biggboss-1533210642கண்டனம்:

ஐஸ்வர்யாவின் இந்த செயலுக்கு சமூகவலைதளத்தில் பலர் கண்டனம் தெரிவித்தனர். ஆனபோதும் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் இதே போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன. குறிப்பாக பாலாஜியைத் தொடர்ந்து டார்க்கெட் செய்து வருகிறார்.

பேஸ்புக் பதிவு:

இந்நிலையில் ஐஸ்வர்யாவின் இந்த செயலுக்கு பாலாஜியின் மனைவியும், பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவராக இருந்து கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அங்கிருந்து வெளியேறியவருமான நித்யா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மிகவும் தவறு: அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘என்னால் இதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

பாலாஜி மீது குப்பையைக் கொட்டியது மனிதத்தன்மையற்ற குரூரமான செயல். தரக்குறைவான செயல். ரித்விகா மீது ஐஸ்வர்யா பயன்படுத்திய இழிவான சொற்கள் மிகவும் தவறு.

bigboss2aishwarya34-1533210504நம்பிக்கை:

ஐஸ்வர்யா, அவரின் தவற்றை உணருவார் என்று நம்புகிறேன். பாலாஜி, ஐஸ்வர்யாவைத் திட்டியது தவறுதான். அவர் சார்பில் ஐஸ்வர்யா குடும்பத்தாரிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

தட்டிக் கேட்டிருக்கலாம்:

நான் ஒருவேளை பிக் பாஸ் வீட்டில் இருந்திருந்தால், ஐஸ்வர்யாவை கொஞ்சம் விவேகமாக நடந்துகொள்ளச் சொல்லியிருப்பேன்.

ஐஸ்வர்யா, பாலாஜிக்கு அந்தத் தண்டனை கொடுத்தபோது, பொன்னம்பலம் அண்ணா தட்டிக் கேட்டிருக்கலாம்.

nithya-1531812922bigboss-1533210540கேள்வி கேட்கலாம்:

மும்தாஜ் அழுவதற்குப் பதில் ஐஸ்வர்யாவை கேள்வி கேட்டிருக்கலாம். ரித்துவை ஐஸ்வர்யா திட்டியபோது எதிர்த்து நின்றிருக்கலாம்.

பாலாஜி தன் கோபத்தையும் பிறரைத் தகாத வார்த்தைகளால் திட்டுவதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும்’ என தனது ஆதங்கங்களை இப்படி கொட்டித் தீர்த்திருக்கிறார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.