ஓசி பிரியாணிக்காக., கடை ஊழியரை தாக்கிய திமுகவினர்..!! வைரல் ஆகும் வீடியோ உள்ளே..!!

0
251

திமுக தலைவர் கருணாநிதி உடல் நலமின்றி காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். காவேரி மருத்துவமனை முன் குவிந்திருக்கும் தொண்டர்களுக்கு அக்கட்சியின் சார்பாக உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஆனால், திமுகவினர் கருணாநிதி உடல் நலமின்றி காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருவதை சாக்காக வைத்துக்கொண்டு, வணிகர்களிடம் கடையை அடை என தகராறு செய்தும், மிரட்டி காசு பிடிவுங்குவதுமாக உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

இந்நிலையில், இதை நிரூபிக்கும் விதமாக, விருகம்பாக்கம் சேலம் “R.R அன்பு பிரியாணி” கடையில் இலவசமாக பிரியாணி கேட்டு பாக்ஸிங் சண்டை போடும் விருகம்பாக்கம் திமுக தொண்டரணி பகுதி நிர்வாகி ‘பாக்ஸர் யுவராஜ்’ தலைமையில் 10 பேர், அந்த கடை ஊழியர்களை தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதனைத் தொடர்ந்து, இந்த தாக்குதலுக்கு காரணமான திமுகவை சேர்ந்த நிர்வாகி யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பிரியாணி கடையின் உரிமையாளர் விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.