மனைவி, மகள் முன்பு கொடூரமாக கொல்லப்பட்ட இளைஞர்: வெளியான அதிர்ச்சி வீடியோ!!

0
597

பிரேசில் நாட்டில் இளம் வழக்கறிஞர் ஒருவர் மனைவி மற்றும் குழந்தை முன்னிலையில் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்ட பதற வைக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது

பிரேசிலின் Permambuco மாகாணத்தில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.அப்பகுதியில் உள்ள பிரபல வழக்கறிஞரான André Ribeiro தமது மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் வெளியே சென்றுள்ளார்.

சாலை ஓரத்தில் வாகனத்தை நிறுத்திய அவர் தமது காரில் இருந்து இறங்கி மனைவி மற்றும் குழந்தை ஆகியோர் காரில் இருந்து இறங்க கதவை திறந்துள்ளார்.

பின்னர் குழந்தையை அவர் கைகளில் எடுத்து கொஞ்சுகிறார். அப்போது திடீரென்று துப்பாக்கியை நீட்டியபடி நபர் ஒருவர் அவர்களை மிரட்டுகிறார்

ஒரு நொடி தாமதித்த André Ribeiro அந்த துப்பாக்கி நீட்டிய நபருக்கு தமது புறமுதுகை காட்டிவிட்டு, தனது குழந்தையை மனைவியிடம் கைமாறுகிறார்.

அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பதை உறுதி செய்வதற்கு முன்னர் அந்த கொலைகாரன் André Ribeiro மீது துப்பாக்கியால் 5 முறை சுடுகிறான்.

மட்டுமின்றி சம்பவப்பகுதியில் இருந்து உடனடியாக அவன் மாயமாகிறான். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவரும் பொலிசார் இது திட்டமிட்ட கொலை என தெரிவித்துள்ளனர்

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.