விம்பிள்டன் டென்னிஸ் இறுதி – செரினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார் கெர்பர்

0
309

விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் செரினா வில்லியம்சை வீழ்த்தி ஜெர்மனியின் கெர்பர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இன்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டம் நடைபெற்றது.
இதில் 11-ம் நிலை வீரரான ஜெர்மனியின் கெர்பர் 25-ம் நிலை வீரரான அமெரிக்காவின் செரினா வில்லியம்சை எதிர்கொண்டார்.
தொடக்கம் முதலே கெர்பர் சிறப்பாக விளையாடினார். இதனால் அவர் முதல் செட்டை 6-3 என கைப்பற்றினார்.
201807142238095219_1_tennis-3._L_styvpf
இரண்டாவது செட்டிலும் கெர்பர் அதிரடியாக ஆடினார். செரினா வில்லியம்சால் அவரது ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. இதனல கெர்பர் இரண்டாவது செட்டையும் 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார்.
இறுதியில், 6-3, 6-3 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் செரினா வில்லியம்சை வீழ்த்தி ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

மகப்பேறுக்கு பின்னர் செரீனா வில்லியம்ஸ் கலந்து கொண்டுள்ள முதல் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இதுவாகும்.

ஜூன் மாதம் நடைபெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில், ஆடவர் ஒற்றையர் சம்பியன் பட்டத்தை நடால் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது,

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.