சந்திரகுமார் இல்லாவிட்டால் கிளிநொச்சி துயிலுமில்லம் பறிபோயிருக்கும்: அரசஅதிபர் மீது அனந்தி சரமாரி குற்றச்சாட்டு! (வீடியோ)

0
273

கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லத்தை பாரஊர்திகள் தரித்து செல்லும் இடமாக மாற்ற அப்போதைய அரசாங்க அதிபர் முயன்றார்.

ஆனால், அப்போதைய கிளிநொச்சி மாவட்ட எம்.பி சந்திரகுமார்தான் அதை தடுத்து நிறுத்தினார்“ – இவ்வாறு கூறியுள்ளார் வடக்கு அமைச்சர் அனந்தி சசிதரன்.

கிளிநொச்சியில் இன்று நடந்த மாற்று திறனாளிகள் சங்க கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார்.

வடக்கு முதலமைச்சர் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட இந்த நிகழ்வில், முன்னாள் கிளிநொச்சி அரசாங்க அதிபர் மீது அனந்தி சசிதரன் சரமாரியாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தினார்.

கிளிநொச்சியில் காணிகளை இராணுவத்திற்கு வழங்கினார், அது பற்றி யாருடைய ஆலோசனையும் கேட்கவில்லை என விமர்சித்தார்.

“மாவீரர் துயிலுமில்ல காணியை பாரஊர்திகள் தரிப்பிடமாக மாற்ற முயன்றார். திட்டமிடல் அதிகாரிகள் அதற்கு ஆட்செபணை தெரிவித்த போதும், அரசஅதிபர் அதை ஏற்கவில்லை.

பின்னர் அப்போதைய பாராளுமன்ற பிரதிக்குழு தலைவர் சந்திரகுமார் எம்.பி தொலைபேசியில் அரசஅதிபரை தொடர்பு கொண்டு, மாவீரர் துயிலுமில்ல காணியை வேறு பாவனைக்கு கொடுக்க வேண்டாமென கூறினார்.

அவர் தடுத்ததால் அரச அதிபரின் முகத்தை பார்க்க முடியாமல் இருந்தது“ என அனந்தி கூறினார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.