கோவை கல்லூரி மாணவி உயிரிழப்பு!! : இன்னொரு பொண்ணுக்கு அடிபட்டும் லோகேஸ்வரிய குதிக்க சொன்னார்” மாணவர்கள் குமுறல்!! – (வீடியோ)

0
403

”இன்னொரு பொண்ணுக்கு அடிபட்டும் லோகேஸ்வரிய குதிக்க சொன்னார்” மாணவர்கள் குமுறல்

கல்லூரி மாணவி லோகேஸ்வரியின் மரணம் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியிருக்கும் நிலையில், சம்பவத்தை பார்த்த மாணவர்கள் கூறும் தகவல்கள் நம்மை பதை பதைக்க வைக்கிறது.

பேரிடர் பாதுகாப்பு என்ற முறையில் பயிற்சி வழங்கப்பட்ட போது லோகேஸ்வரியோடு சேர்த்து இன்னும் 3 மாணவிகளும் இரண்டாவது மாடியில் இருந்து குதித்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

48372இது குறித்து மாணவர்களிடம் பேசிய போது ” பிற்பகல் 2.30 மணியளவில் தொடங்கியது , கயிறு கட்டி மேலே ஏறுவதும் , இறங்குவதும் மட்டுமே பயிற்சி என சொல்லப்பட்டது.

 லோகேஸ்வரி மட்டுமல்ல, அவரோடு சேர்ந்து மாணவர்களும் , மாணவிகளும் கூட அந்த பயிற்சியை மேற்கொண்டனர்.

எல்லோருமே மேலே ஏறிவிட்டு இறங்கினார் , ஆனால் லோகேஸ்வரியும் இன்னும் இரண்டு பேரும் இறங்கும் நேரம் வந்த போது மழை வரத் தொடங்கியதால், அவர்களை குதிக்க சொன்னார் பயிற்சியாளர்” என்றனர்

மற்றொரு மாணவர் கூறும் போது “மாடியில் இருந்து குதிக்கச் சொன்னார் ஆனால் எந்த பாதுகாப்பும் இல்லாமல் அதனை மாணவிகள் செய்தனர்.

லோகேஸ்வரிக்கு முன்னரே ஒரு மாணவி குதிக்கும் போது அவருக்கு சன் ஷேடில் மோதி லேசாக அடிபட்டது.

அதனை பார்த்த லோகேஸ்வரி பயந்தார், குதிக்க மறுத்தார். ஆனால் பயிற்சியாளர் அதெல்லாம் ஒன்ரும் ஆகாது என கூறி அந்தப் பெண் பயந்த நிலையில் இருக்கும் போதே கட்டாயப்படுத்தி குதிக்க வைத்து விட்டார்” என்றார்

லோகேஸ்வரியின் தோழியான ஒரு மாணவி பேசும் போது “ யாரெல்லாம் பயிற்சிக்கு ரெடி என கேட்ட போது முதல் ஆளாக லோகேஸ்வரி பெயர் கொடுத்தார்.

இது மட்டுமல்ல , கல்லூரியில் எந்த நிகழ்வு நடந்தாலும் ஆர்வத்தோடு பங்கேற்கும் மாணவி லோகேஸ்வரி.

இது ஒரு சாகமான நிகழ்வாக இருக்கும் என்று எங்களிடம் சொல்லிக் கொண்டுதான் அதை செய்யச் சென்றார், ஆனால் கயிற்றில் ஏறும் பயிற்சி என்று மட்டுமே சொல்லிவிட்டு திடீரென 2 வது மாடியில் இருந்து குதிக்கச் சொன்னதால அவள் பயந்து விட்டாள்” என்று தெரிவித்தார்.

மாணவியின் பயத்தை பொருட்படுத்தாமலும், மற்றொரு மாணவிக்கு அடிபட்ட போதும் பயிற்சியை கவனத்தோடு மேற்கொள்ளாததே காரணமாக பார்க்கப்படுகிறது.

ஆனால் லோகேஸ்வரி பயந்த போது யாரும் அதனை தடுக்கவில்லை, அனைவரும் வேடிக்கை மட்டுமே பார்த்ததால் இன்று ஒரு உயிர் பலி ஆகி இருக்கிறது.
a

கோவை கல்லூரி மாணவி உயிரிழப்பு: பயிற்சியாளர் ஆறுமுகம் கைது

48352கோவையில் கல்லூரி மாணவி மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பயிற்சியாளர் ஆறுமுகம் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை நரசிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில், மாணவ-மாணவிகள் பேரிடர் காலங்களில் எவ்வாறு துரிதமாக செயல்பட வேண்டும்  என்று நேற்று கல்லூரியில் பயிற்சி அளிக்கப்பட்டது.

அப்போது, 2-வது மாடியில் இருந்து பாதுகாப்பு கயிறு கட்டாமல், மாணவி லோகேஸ்வரியை பயிற்சியாளர் தள்ளியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மாணவியை பிடிப்பதற்காக மாணவர்கள் வலையுடன் கீழே நின்றனர்.  அப்போது கீழே நோக்கி விழுந்த மாணவி சன்ஷேடில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனிடையே பயிற்சியாளரின் அலட்சியமே மாணவியின் உயிரிழப்புக்கு காரணம் என கூறப்பட்டது.

இந்நிலையில் கல்லூரி மாணவி மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பயிற்சியாளர் ஆறுமுகம் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாணவி லோகேஸ்வரியின் தந்தை நல்லா கவுண்டர் ஆலந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சென்னையை சேர்ந்த பயிற்சியாளர் ஆறுமுகத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.