கண்ணெதிரே பூமிக்குள் மறைந்த கிணறு..பொதுமக்கள் அதிர்ச்சி!- வீடியோ

0
171

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது.கனமழை தீவிரமடைந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை அங்கு பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள கிணறொன்று, நேற்று திடீரென பூமிக்குள் மூழ்கிய சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியுறச்  செய்துள்ளது.

கிணற்றுக்குள் செல்லும் தண்ணீர் காரணமாக கிணறு பூமிக்குள் மூழ்கியுள்ளது என இதற்கான காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் இதுகுறித்து அச்சத்தில் உறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.