இயக்குனர் முருகதாசை தொடர்ந்து நடிகர் ஸ்ரீகாந்த் மீது நடிகை ஸ்ரீரெட்டி பாலியல் குற்றச்சாட்டு

0
251

இயக்குனர் முருகதாசை தொடர்ந்து நடிகர் ஸ்ரீகாந்தும் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டதாக தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி குற்றஞ்சாட்டியுள்ளார்.

நேற்று தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்ட ஸ்ரீரெட்டி, முருதாஸ் ஜி எப்படி இருக்கீங்க என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும் கிரீன்பார்க் ஓட்டல் ஞாபகம் இருக்கறதா? என்றும் முருகதாசிடம் அவர் கேட்டிருந்தார்.

அத்துடன் வெளிகொண்டா சீனிவாஸ் மூலம் உங்களுக்கு அறிமுகமான என்னுடன் பலமுறை இருந்தாலும் கூறியபடி வாய்ப்பு வழஙகவில்லை என்று ஸ்ரீரெட்டி தெரிவித்திருந்தார்.

1531384911110

இந்த நிலையில் இன்று ஸ்ரீரெட்டி வெளியிட்டுள்ள பேஸ்புக் பதில், தமிழ் நடிகர் ஸ்ரீகாந்த் தன்னை ஐந்து வருடங்களுக்கு முன்னர் ஐதராபாத் பார்க் ஓட்டலில் வைத்து பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டதாக கூறியுள்ளார்.

நட்சத்திர கிரிக்கெட் போட்டிகளுக்காக ஐதராபாத் வந்த போது தன்னை பயன்படுத்திக் கொண்டு வாய்ப்பு தருவதாக அளித்த வாக்குறுதியை மறந்துவிட்டீர்களா என்றும் ஸ்ரீரெட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுநாள் வரை தெலுங்கு நடிகர்கள் மீது பாலியல் புகார்கள் கூறி வந்த ஸ்ரீரெட்டி தற்போது தமிழ் திரையுலகின் முக்கிய நபர்களை குறிவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.