30 ஆயிரத்துக்கு அழைக்கிறார்கள்..! நடிகை புகாரில் இருவர் கைது

0
384

தொழில் அதிபர்கள் மற்றும், அரசியல் பிரமுகர்களுடன் டேட்டிங் செல்ல 30 ஆயிரம் ரூபாய் தருவதாக, டிவி சீரியல் நடிகை ஜெயலட்சுமிக்கு, வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பி தொல்லை கொடுத்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பிரிவோம் சந்திப்போம், ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் தொலைக்காட்சி சீரியல் நடிகை ஜெயலட்சுமி..!

நடிகை ஜெயலட்சுமி கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்திருந்தார்.

தனது வாட்ஸ் ஆப் எண்னுக்கு அறிமுகம் இல்லா சில நபர்கள் ஆபாச தகவல்களை அனுப்புவதாகவும், அதில் ஒரு தகவலில், அரசியல் பிரமுகர்கள் மற்றும் தொழில் அதிபர்களுடன் டேட்டிங் சென்றால் 30 ஆயிரம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும் என்று அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் அவர் வேதனையுடன் தெரிவித்திருந்தார்

அவரது புகார் குறித்து விசாரித்த விபசார தடுப்பு பிரிவு காவல்துறையினர் இந்த தகவலை அனுப்பிய விருகம்பாக்கத்தை சேர்ந்த துணை நடிகை ஏஜெண்டுகளான முருக பெருமாள் , கவியரசு ஆகிய இருவரை கைது செய்தனர்.

நடிகை ஜெயலட்சுமிக்கு அனுப்ப பட்டதை போலவே ஏராளமானவர்களின் செல்போனுக்கு பெண்களை தவறான வழிக்கு அழைப்பு விடுக்கும் வகையில் குறுந்தகவல்கள் அதிகமாக வருவதாகவும், பலர் புகார் அளிப்பதில்லை என்றும் இவர்களது வழிக்கு வரும் பெண்களை தவறான செய்கையில் ஈடுபடுத்துவதாகவும் குற்றஞ்சாட்டப்படுகின்றது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.