தாய்லாந்து குகை: சிகிச்சை பெற்றுவரும் சிறுவர்களின் புகைப்படங்கள், வீடியோ வெளியீடு!!

0
244

தாய்லாந்தில் சிக்கலான குகை அமைப்பில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதல் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

மருத்துவமனை உடையும், முகமூடியும் அணிந்திருக்கும் சிறுவர்களை அப்புகைப்படத்தில் பார்க்க முடிகிறது. அதில் ஒரு சிறுவர் வெற்றி சின்னத்தை காட்டுகிறார்.

சிறுவர்களைக் குகையில் இருந்து உயிருடன் அழைத்து வரும் அபாயகரமான நடவடிக்கையின் புதிய தகவலாக இப்புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

மீட்புப் பணி எப்படி நடந்தது என்பது குறித்த காணொளியையும் தாய்லாந்து கடற்படை வெளியிட்டுள்ளது.

_102485919_b240a537-55b3-4809-85bc-a4e8bc41f0fa தாய்லாந்து குகை: சிகிச்சை பெற்றுவரும் சிறுவர்களின் புகைப்படங்கள் வெளியீடு 102485919 b240a537 55b3 4809 85bc a4e8bc41f0fa

இருட்டான, குறுகிய, நீருக்கடி பாதையில் சிறுவர்கள் பயப்படாமல் இருக்க, மீட்பு பணிக்கு முன்பு சிறுவர்ளுக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டதாக மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் பிபிசியிடம் கூறினர்.

நீருக்கடியில் செல்லும்போது, இரண்டு முக்குளிப்பவர்களில் ஒரு முக்குளிப்பவருடன் சிறுவர்கள் கட்டப்பட்டனர்.

சிறுவர்களுக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டதை மறுத்துள்ள தாய்லாந்து பிரதமர், பதற்றத்தைக் குறைக்கும் மருத்து சிறிதளவு கொடுக்கப்பட்டதாகவும், இது வழக்கமாக ராணுவ வீரர்கள் கொடுக்கப்படுவதாகவும் கூறினார்.

சிறுவர்கள் வெளியே அழைத்து வரப்படும் போது, ஓரளவு நினைவுடன் மட்டுமே இருந்ததாகப் பல தகவல்கள் கூறுகின்றன.

மீட்கப்பட்ட 13 பேருக்கும் மருத்துவ மற்றும் உளவியல் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவர்கள் நன்கு குணமடைந்து வருகின்றனர்.

அனைத்துச் சிறுவர்களும் உடல் எடையை இழந்துள்ள நிலையில், ஒரு வாரம் மருத்துவமனையில் இருப்பார்கள். பிறகு வீட்டில் இரு வாரம் சிகிச்சை அளிக்கப்படும்.

முதற்கட்டமாக மீட்கப்பட்ட சிறுவர்கள் வழக்கமான உணவுகளைச் சாப்பிட்டு வருவதாகவும், இரண்டாவதாக மீட்கப்பட்ட சிறுவர்கள் இன்று முதல் வழக்கமான உணவுகளை சாப்பிட்டுவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகின்றனர்.

102480699_3d174859-28bd-4885-be37-4cc61017f0a6

தாய்லாந்தில் சுமார் 10 கி.மீ. நீளமுள்ள ஆழமான தாம் லுவாங் மலைக்குகைக்கு ஜூன் 23-ம் தேதி சாகசப் பயணம் மேற்கொண்ட 12 பேர் கொண்ட சிறுவர் கால்பந்து அணியும் அவர்களது பயிற்சியாளரும் குகையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் உள்ளேயே சிக்கிக் கொண்டனர்.

9 நாள் போராட்டத்துக்குப் பிறகு அவர்கள் இருக்கும் இடம் தெரிய வந்தது. பிறகு, மிகத் துல்லியமாகத் திட்டமிடப்பட்ட, மிக ஆபத்தான மீட்பு நடவடிக்கை மூலம் அவர்கள் அனைவரும் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டனர்.

மீட்புப் பணியில், தாய்லாந்து கடற்படையின் தேர்ச்சி பெற்ற முக்குளிக்கும் வீரர் சமன் குனன் குகையில் சிக்கிய சிறுவர்களுக்கு ஆக்சிஜன் உருளையை கொடுத்து விட்டுத் திரும்பி வரும் வழியில் அவருக்கு ஆக்சிஜன் தீர்ந்துபோனதால் ஜூலை 6-ம் தேதி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், குகையில் சிக்கிய 13 பேரும் பத்திரமாக மீட்கப்படுவது பற்றி அக்கறை காட்டிய இந்திய அரசுக்கும், இந்திய மக்களுக்ம்mகு நன்றி தெரிவித்து கொள்வதாக தாய்லாந்து அரசு கூறியுள்ளது.

தாய்லாந்து வெளியுறத்துறை அமைச்சர், இந்திய வெளியுறத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

4E1F14D400000578-5942113-image-m-17_15313160492954E1F149000000578-5942113-image-a-12_1531315697101

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.