பிரியா வாரியருக்கு இவ்வளவு சம்பளமா?

0
199

சமீபத்தில் சமூக வலைதளங்களில் பிரபலமடைந்தவர் கண்ணழகி நடிகை பிரியா வாரியர். இவர் மலையாளத்தில் ‘ஒரு அடார் காதல்’ என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

இதுதான் இவரது முதல் படம். இந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் அதற்குமுன் பிரியா வாரியர் இந்தியா முழுவதும் பிரபலமாகி விட்டார்.

அதற்கு காரணம் அவர் நடித்து வரும் படத்தில் இடம்பெறும் ஒரு கண்ணசைவு பாடல் மூலம் பிரபலமாகிவிட்டார்.

இந்த நிலையில் பிரியா வாரியருக்கு விளம்பர படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகிறது. ஏற்கனவே ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளார்.

இப்போது இன்னொரு பெரிய நிறுவனம் அவரை அணுகி உள்ளது. இதில் நடிக்க அவருக்கு இந்திய மதிப்பில் ரூ.1 கோடி சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மலையாள முன்னணி நடிகைகள் இன்னும் ரூ.1 கோடி சம்பளத்தை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.