ஜெயலலிதா வங்கி கணக்கில் இருக்கும் பணம் எவ்வளவு?

0
184

தமிழக அரசியலில் இரும்பு பெண்மணியாக திகழ்ந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு, அப்பலோ சிகிச்சை குறித்த சர்ச்சைகளுக்கு இன்னமும் விடை தெரியாமல் இருக்கிறது.

இந்நிலையில் ஜெயலலிதா பெயரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இருக்கும் சேமிப்புக் கணக்கில் வெறும் 9000 ரூபாய் மட்டுமே உள்ளது என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்குத் தமிழ்நாட்டை மட்டும் அல்ல இந்தியாவையே திரும்பி பார்க்கவைத்த நிலையில் தற்போது சசிகலா தரப்பு வழக்கறிஞர் ஐஓபி வங்கியின் முன்னாள் மேலாளர் மகாலட்சுமியிடம் குறுக்கு விசாரணை செய்யும் போது, ஜெயலலிதா வங்கி கணக்கில் 9,000 ரூபாய் மட்டுமே உள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதேபோல் சிறையில் இருக்கும் ஜெயலலிதாவின் தோழி சசிகலா-வின் வங்கி கணக்கில் 3 லட்சம் ரூபாய் உள்ளதாக ஐஓபி வங்கியின் முன்னாள் மேலாளர் மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.

சசிகலா தரப்புத் தன்னிடம் ஜெயலலிதாவின் வங்கி கணக்கு குறித்து விசாரணை நடத்தியதாகவும் ஐஓபி வங்கியின் முன்னாள் மேலாளர்மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.

arumugasamy-1531208388ஜெயலலிதாவின் இறப்பு குறித்து பல்வேறு தரப்பில் இருந்து சந்தேகம் எழுந்த நிலையில் அதனை விசாரிக்க ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அந்த விசாரணையில் அதிகபடியான குழப்பங்கள் நிழவி வருகிறது. ஆனாலும் தற்போது தமிழகத்தில் மக்களுக்கு பிடிக்காத ஆட்சியே நடைபெற்று வருவதாக மக்கள் கருதுகின்றனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.