இறக்கும் தறுவாயில் புகைப்படம்… மக்கள் மனதை உருக்கிய நியூயார்க் சோயி!

0
252

சோயி, தங்களைப் பார்த்துச் சொன்ன `ஐ லவ் யூ’ மற்றும் `நாட் டுடே’ என்ற இரண்டு வார்த்தைகளின் ஒலி அலைகளையும் தங்கள் கைகளில் டாட்டூவாகப் பதியவைத்திருக்கிறார்கள் அந்தப் பெற்றோர். இதில் `நாட் டுடே’ என்பது மரணத்தைப் பற்றி சோயி சொன்ன வார்த்தை.

வள் பெயர் சோயி. ஐந்து வயது தேவதை. தாயின் கரங்கள் அவளைத் தழுவியபடி இருக்க, தந்தையின் மடியில் படுத்தபடி தன் இறுதிப் பயணத்தை நோக்கி மெள்ள மெள்ள நகர்ந்துகொண்டிருக்கிறாள். பின்னணியில் `ஹாரி பாட்டர்’ படம் ஓடிக்கொண்டிருக்கிறது.

சோயி பெற்றோரின் கன்னத்துத் தசைகள் தாங்கமுடியாத துக்கத்தினால் துடித்துக்கொண்டே இருக்கின்றன. கல்லும் கரைந்து உடையும் இந்தக் காட்சியை, அருகே நின்றபடி நர்ஸ் ஒருவர் வழியும் தன் கண்ணீருடன் சேர்த்து படம் பிடித்துக்கொண்டிருக்கிறார்.

சோயி, நியூயார்க்கில் பிறந்தவள். இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒருநாள், நன்றாக விளையாடிக்கொண்டிருந்த குழந்தை, தடுக்கிக் கீழே விழுந்தாள். `அச்சச்சோ… குழந்தைக்கு எலும்பு உடைந்திருக்குமோ’ எனப் பதறிப்போய் தூக்கினார் அம்மா கேஸி.

அப்படி எதுவும் நடக்கவில்லை. குழந்தை நார்மலாகவே இருந்தாள். ஆனால், ஒரு வாரம் கழித்து ஒரு கையில் மட்டும் எந்த அசைவும் இல்லை. பயந்துபோய் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள்.

imageஅப்போதுதான், சோயிக்கு மிக ஆபத்தான மூளைப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அது சரிசெய்ய முடியாத புற்றுநோய், பிழைக்க ஒரு சதவிகிதம் மட்டுமே வாய்ப்பு, அதற்கும் எக்கச்சக்க செலவாகும் என்பது சோயி பெற்றோரின் தலையில் இடியாக இறங்கியது.

மகளின் மருத்துவச் செலவுக்காக `Zoey’s fight’ என்ற ஃபேஸ்புக் பக்கத்தை ஆரம்பித்தார்கள் சோயியின் அம்மா கேஸியும், அப்பா பென்னும். அதில், சோயி நிலையைப் பதிவிட்டு, உதவுமாறு கேட்டார்கள்.

கூடவே, தங்கள் மகளின் தினசரி நடவடிக்கைகளையும் பதிவிட ஆரம்பித்தார்கள். 6,000 பேர் இந்தப் பக்கத்தை ஃபாலோ செய்ய ஆரம்பித்தார்கள். சோயியைக் காப்பாற்ற மருத்துவர்களும் பொதுமக்களும் ஒன்று சேர்ந்தார்கள்.

பணம் குவிகிறது. சிகிச்சை ஆரம்பிக்கிறது. இதற்கிடையில், மகள் சோயி பற்றி அம்மா கேஸி சொல்வதைக் கொஞ்சம் கேளுங்கள்.

36538491_10100394880588430_7347582951938326528_n_10165

`அவளுக்குப் பாடல்கள் மிகவும் பிடிக்கும். ஒரு கிறிஸ்துமஸ் நள்ளிரவில் அவ்வளவு பெரிய சர்ச்சில் நாங்கள் எல்லாரும் மண்டியிட்டுப் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தோம். திடீரென்று எழுந்து நின்று அவளுடைய மழலைக் குரலில் `டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார்’ எனப் பாட ஆரம்பித்தாள்” என்கிறார்.

அப்பா பென், “மூளையில் புற்றுநோய் என்று தெரிவதற்கு முன்புவரை, தாத்தா பாட்டியின் பண்ணை வீடு, அங்கே மாடுகளுக்குத் தீவனம் வைப்பது என இருப்பாள் சோயி.

அவளுக்கு எங்களுடன் பயணம் செய்வது மிகவும் பிடிக்கும். `வளர்ந்த பிறகு மேக்கப் கேர்ள் ஆவேன்’ என அடிக்கடி சொல்வாள்” என்று நெகிழ்கிறார்.

தன் மகள் வாழ்வதற்காக நடத்திய போராட்டத்தைச் சொல்லும்போது உடைந்தே போகிறார். “இரண்டு வருடப் போராட்டம். ஐந்து தடவை கீமோதெரபி சிகிச்சை. குழந்தைகளால் மூன்று தடவைக்கு மேல் இந்தச் சிகிச்சையைத் தாங்கமுடியாது என்கின்ற நிலை.

ஆனால், அதை சோயி ஐந்து தடவை தாங்கினால் என்றால், வாழ்க்கையின் மீது அவளுக்கு இருந்த ஆசையே காரணம். ஆனால், எதுவுமே என் மகளைக் காப்பாற்றவில்லை.

அவளால் நடக்க முடியவில்லை; பேச்சு திக்க ஆரம்பித்தது; உணவை விழுங்க முடியவில்லை. எங்களைப் பார்த்துக்கொண்டிருந்தவளின் கண்கள் மெள்ள மெள்ள பார்வையையும் இழக்க ஆரம்பித்தன.

ஜூன் 27-ம் தேதி மூச்சுவிடவும் கஷ்டப்பட ஆரம்பித்தாள். இனிமேல் செய்வதற்கு எதுவுமில்லை என மருத்துவம் என் மகளை கைவிட்டு விட்டது” என்கிறார் பென்.

சோயி, தங்களைப் பார்த்துச் சொன்ன `ஐ லவ் யூ’ மற்றும் `நாட் டுடே’ என்ற இரண்டு வார்த்தைகளின் ஒலி அலைகளையும் தங்கள் கைகளில் டாட்டூவாகப் பதியவைத்திருக்கிறார்கள் அந்தப் பெற்றோர்.

இதில் `நாட் டுடே’ என்பது மரணத்தைப் பற்றி சோயி சொன்ன வார்த்தை. அந்தச் சின்னஞ்சிறு உயிர், மரணத்தை இன்றைக்கு வேண்டாம் எனத் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்திருக்கிறது.

கடைசியாக, நோயிடம் தோற்று, தாயின் கரங்கள் தன்னைத் தழுவியபடி இருக்க, தந்தையின் மடியில் படுத்தபடி தன் இறுதிப் பயணத்தை ஆரம்பிக்கிறாள்.

பின்னணியில் அவளுக்குப் பிடித்த, ஆனால் அவளால் பார்க்கவோ கேட்கவோ முடியாத `ஹாரி பாட்டர்’ படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தக் கண்ணீர்த் தருணத்தை, அவளுக்காக இரண்டு வருடங்களாகப் பண உதவி செய்துவந்த முகநூல் நண்பர்கள் பார்ப்பதற்காக, நர்ஸ் ஒருவர் படம் பிடித்துக்கொண்டிருக்கிறார்.

ce52c350-95cb-406e-87f1-c33dbc02441e_750x422_10316

Photos Courtesy: facebook.com/ZoeysFightDIPG

சோயியின் மரணச் செய்தி அறிந்து, அந்தப் பிஞ்சு முகத்தைப் பார்ப்பதற்காக உதவி செய்த அத்தனை பேரும் வருகிறார்கள். ஆனால், யாரும் கறுப்பு உடை அணியவே இல்லை. சோயிக்கு மரணமும் பிடிக்காது.

அதன் அடையாளமான கறுப்பு நிறமும் பிடிக்காது. துக்கம் கேட்க வந்த அனைவருமே வண்ண வண்ண உடைகளில் கண்ணீரை அடக்கியபடி, அந்தச் சின்ன தேவதையைத் தரிசித்துவிட்டு செல்கிறார்கள்.

தேவதைகள் மண்ணில் வாழ்வது கொஞ்ச நாள்களே என்றாலும், தங்களுடைய சின்னஞ்சிறு கால் தடங்களை மனிதர்களின் மனமெங்கும் அழுத்தமாகப் பதியவைத்து விடை பெறுகிறார்கள்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.