நடனமாடி வீடியோ வெளியிட்ட ஈரான் பெண் கைது!

0
175

ஈரானிய பெண் ஒருவர் தான் நடனமாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

மதே ஹோஜப்ரி என்ற ஈரானிய பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் #dancing_isn’t_a_crime என்ற ஹாஷ்டாக்குடன் நடனமாடும் வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள்.

இவரை இன்ஸ்டாகிராமில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பின் தொடர்கிறார்கள். அவர் அண்மையில் தனது சமூக ஊடக கணக்கில் ஈரான் மற்றும் மேற்கத்திய இசைக்கு நடனமாடும் வீடியோவை பகிர்ந்திருந்தார்.

இவருக்கு ஆதரவாக ஏராளமான ஈரானிய பெண்கள் #dancing_isn’t_a_crime என்ற ஹாஷ்டாக்குடன் தாங்கள் நடனமாடும் வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள். வீடியோ வெளியிட்ட அந்த பெண் தற்போது கைது செய்யப்பட்டார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.