5-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: 99 வயது ஓய்வு பெற்ற ஆசிரியர் கைது

0
220

பூந்தமல்லி அருகே உள்ள சென்னீர்குப்பத்தை சேர்ந்தவர் பரசுராமன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்.

இவரது வீட்டில் ஒரு தம்பதியினர், 10 வயது மகளுடன் கடந்த 2 ஆண்டுகளாக வாடகைக்கு வசித்து வருகிறார்கள். சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார்.

சிறுமியை அழைத்து அடிக்கடி விளையாடி வந்தார். அவர் வயதானவர் என்பதால் சிறுமியின் பெற்றோர் அதனை தவறாக எடுக்கவில்லை.

இந்த நிலையில் இதனை சாதகமாக பயன்படுத்திய பரசுராமன் சம்பவத்தன்று சிறுமியை தனியாக அழைத்து சென்று சில்மி‌ஷத்தில் ஈடுபட்டார். இதில் சிறுமிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து அவரிடம் பெற்றோர் விசாரித்த போது சாக்லேட் கொடுப்பதாக பரசுராமன் அழைத்து சென்று சில்மி‌ஷத்தில் ஈடுபட்டது தெரிந்தது. இதனை கேட்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி சிறுமியின் பெற்றோர் ஆவடி மகளிர் போலீசில் புகார் செய்தனர். விசாரணையில் முதியவர் பரசுராமன், சிறுமியிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டது தெரிந்தது. இது தொடர்பான வீடியோ ஆதாரமும் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது.

இதையடுத்து பரசுராமனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.