இன்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற போவது யார்? (பிக்பாஸ் சீசன் 2 : 21-ம் நாள் -வீடியோ)

0
334

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் தற்போது 20 நாள்களைக் கடந்து நடைபெற்று வருகிறது.

வார இறுதி நாள்களில் கமல் போட்டியாளர்கள் முன்பு தோன்றுவார் என்பதால் நிகழ்ச்சியை பார்ப்பவர்களைப் போன்று போட்டியாளர்களும் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.

ஆனால் அந்த மகிழ்ச்சி எல்லாம் சனிக்கிழமை மட்டும் தான். ஞாயிறு அன்று கமல் கையில் எலிமினேஷன் பெயர் கொண்ட அட்டையுடன் தான் வருவார்.

இந்த வாரம் போட்டியாளர்களில் நாமினேட் செய்யப்பட்டவர்கள், நித்யா, அனந்த் வைத்தியநாதன், பாலாஜி, மும்தாஜ் மற்றும் பொன்னம்பலம். இவர்களில் மும்தாஜ் காப்பாற்றப்பட்டுவிட்டதாக நேற்றே அறிவித்து விட்டார் கமல்.

மீதம் இருப்பவர்களில் யார் வெளியேறுவார்கள் என்பது இன்று இரவு தெரிந்துவிடும். இதற்கிடையே சமூக வலைதளங்களில் இந்த வாரம் பொன்னம்பலம் தான் வெளியேற்றப்பட்டதாக தகவல் பேசப்படுகிறது.

விகடன் தளத்தில் நடத்தப்பட்ட சர்வேயில்…..

33% மக்கள் பாலாஜி தான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என வாக்களித்துள்ளனர். 26% வாக்குகள் பெற்று அனந்த் வைத்தியநாதன் வீட்டை விட்டு வெளியேறும் போட்டியில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

மூன்றாவது இடத்தில் மும்தாஜ் இருந்தாலும், அவர் அடுத்த வாரம் பிக் பாஸ் வீட்டில் தொடரத்தான் போகிறார்.

நித்யா மற்றும் பொன்னம்பலம் 13% வாக்குகளுடன் கடைசி இடத்தில் பாதுகாப்பாக இருப்பதாக வாசகர்களின் வாக்குகள் தெரிவிக்கின்றன. கமல் மக்களின் விருப்பப்படி என எலிமினேஷன் யார்?? என்பதை….

தொடரை வீடியோவில் பாருங்ககள்…

 

 

<!–

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.