மஹிந்­த­விற்கு சீன அரசாங்கம் வழங்­கிய ரூ.112 கோடி எங்கே? : நட்பு நாடு­க­ளுடன் வலை விரிக்கும் தேசிய அர­சாங்கம்

0
182

இலங்­கையின் தேர்­தல்­களில் சீனாவின் அநா­வ­சி­ய­மான தலை­யீ­டுகள் குறித்து அர­சாங்கம் அதி­ருப்­தியை வெளி­யிட்­டுள்­ள­துடன் மஹிந்த ராஜ­ப­க்ஷ­விற்கு தேர்தல் நட­வ­டிக்­கை­களுக்­காக சீன நிறு­வனம் வழங்­கிய நிதி குறித்து பரந்­த­ளவில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­கவும் தீர்­மா­னித்­துள்­ளது.

தேசிய அர­சாங்­கத்­துடன் நெருக்­க­மான உற­வு­களைக் கொண்­டுள்ள நட்பு நாடு­களின் ஒத்­து­ழைப்­பு­களைப் பெற்று வெளி­நாடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள குறித்த நிதியை கண்­ட­றியும் நட­வ­டிக்­கை­க­ளையும் ஆரம்­பித்­துள்­ளது. மஹிந்த ராஜ­ப­க் ஷவின் தேர்தல் நட­வ­டிக்­கை­க­ளுக்கு சீன நிறு­வனம் வழங்­கிய 112 கோடி ரூபா

குறித்து அர­சாங்கம்

கவனம் செலுத்­தி­யுள்­ளது. இந்த நிதி ஐக்­கிய அரபு எமி­ரேட்டில் வைக்­கப்­பட்­டுள்­ள­தாக கிடைக்­கப்­பெற்ற தக­வலின் அடிப்­ப­டையில் அந்­நாட்டு அர­சாங்­கத்­திடம் இலங்கை வினா­வி­யுள்­ளது.

கடந்த பெப்­ர­வரி மாதம் 10 ஆம் திகதி குறித்த விடயம் தொடர்பில் விளக்கம் கோரிய கடிதம் ஐக்­கிய அரபு எமி­ரேட்­டிற்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­ய­வ­ரு­கி­றது.

வெளி­வி­வ­கார அமைச்சர் திலக் மாரப்­பன ஊடா­கவே இந்தக் கடிதம் அனுப்­பப்­பட்­டுள்­ளது. மஹிந்த ராஜ­ப­க்ஷ­விற்கு கிடைக்­கப்­பெற்ற இந்த நிதி ஐக்­கிய அரபு எமி­ரேட்டில் காணப்­ப­டு­வ­தாக கிடைக்­கப்­பெற்ற தக­வல்­களின் அடிப்­ப­டை­யி­லேயே இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

இலங்­கை­யுடன் மிக நெருங்­கிய உற­வு­களை கொண்­டி­ருந்த சீனா 2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலை மையப்­ப­டுத்தி நிதி வழங்­கி­யுள்­ளது. 7.6 மில்லியன் டொலர்­களை சீனா வழங்­கி­ய­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்தத் தொகையை ஒரே தட­வையில் வழங்­காது தேர்­த­லுக்கு இரு வாரங்­க­ளுக்கு முன்­ப­தாக 3.7 மில்­லியன் டொலர்கள் வழங்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் மேலும் 6 ஆயி­ரத்து 78 ஆயிரம் டொலர்­களை தேர்தல் பரப்­பு­ரைக்கு தேவை­யான பொருட்கள் அச்­சி­டு­வ­தற்­கா­கவும் உப­க­ர­ணங்­களை கொள்­வ­னவு செய்வ­தற்­கா­கவும் வழங்­கப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் 2 ஆயி­ரத்து 97 ஆயிரம் டொலர்கள் தேர்தல் பரப்­பு­ரை­களை மையப்­ப­டுத்தி ஆத­ர­வா­ளர்­க­ளுக்கு பரி­சுப்­பொ­ருட்­களை வழங்­கு­வ­தற்­காக வழங்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வாறு பல கட்­டங்­க­ளா­கவே சீனா நிதியை வழங்­கி­யுள்­ள­தாக தெரிய வரு­கி­றது.

இத­ன­டிப்­ப­டையில் சர்­வ­தேச தரப்பு ஒன்­றி­லி­ருந்து கிடைக்­கப்­பெற்ற மிகவும் நம்­பிக்­கை­யான தக­வலின் அடிப்­ப­டை­யி­லேயே நிதி பதுக்­கப்­பட்ட இடம் குறித்து விசா­ர­ணை­களை அர­சாங்கம் ஆரம்­பித்­துள்­ள­தாக அமைச்சர் லக்ஷ்மன் கிரி­யெல்ல தெரி­வித்­துள்ளார்.

அதே போன்று நாட்டின் தேர்­தல்­களில் அநா­வ­சி­ய­மாக தாக்கம் செலுத்தும் வகையில் செயற்­பட்டு மஹிந்த ராஜ­ப­க்ஷ­விற்கு நிதி வழங்கிச் செயற்­பட்ட குறித்த சீன நிறு­வ­னத்தின் முக்­கிய அதி­கா­ரிகள் சிலரை தேசிய அர­சாங்கம் திருப்பியனுப்பியுள்ளது.

இதே வேளை சீன நிறுவனம் மஹிந்த ராஜபக்வின் தேர்தல் நடவடிக்கைகளுக்காக நிதி வழங்கியமை குறித்து நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை கடந்த 25 ஆம் திகதி செய்தியை வெளியிட்டிருந்தது. இந்த செய்தியின் அடிப்படையாகக் கொண்டு பரந்தளவில் விசாரணைகளை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.