கொட்டும் மழையில் மகளுக்கு பிறந்த குழந்தையை தூக்கி வீசிய கொடூர தாய்: தூக்கிச் செல்லுங்கள் என கெஞ்சிய மக்கள்- (வீடியோ)

0
229

சீனாவில் தன்னுடை மகளுக்கு பிறந்த குழந்தையை தாய் தெருவில் வீசிவிட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் Taixing மாகாணத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் வயிற்று வலி காரணமாக தன்னுடைய அம்மாவுடன் அங்கிருக்கும் மருத்துவ்மனைக்கு சென்றுள்ளார்.

அப்போது திடீரென்று மருத்துவமனைக்கு வெளியே அந்த சிறுமிக்கு குழந்தை பிறந்ததால், அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

அதன் பின் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, உடனடியாக குழந்தையை எடுத்து வந்து கொட்டும் மழை எனு கூட பார்க்கமால் தெருவில் வீசியுள்ளார்.

625.0.560.350.160.300.053.800.668.160.90இதனால் குழந்தையின் உடலில் உராய்வு ஏற்பட்டுள்ளது. இதைக் கண்ட அங்கிருந்த மக்கள் உடனடியாக குடை ஒன்றை எடுத்து வந்து குழந்தையை பாதுகாப்பான இடத்தில் வைத்து விட்டு, அவரிடம் குழந்தையை எடுத்துச் செல்லும் படி கூறியுள்ளனர்.

ஆனால் அவர் எனக்கு இந்த குழந்தை வேண்டாம், நான் எடுத்துச் செல்லமாட்டேன் என்று அடம்பிடித்துள்ளார்.

அதன் பின் குழந்தையை அங்கிருந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

625.0.560.350.160.300.053.800.668.160.901இந்த சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், நிச்சயமாக அந்த பெண் தண்டிக்கப்படுவார் என்று கூறியுள்ளனர்.

மேலும் அந்த சிறுமிக்கு 15 வயது என்பதால் எப்படி கர்ப்பமானார் என்பது தெரியாதா? அல்லது தாய்க்கு பயந்து இப்படி மறைத்தாரா என்பது குறித்தும் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.