அபுதாபியில் இருந்து வரும்போது இந்தியர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ரூ. 13 கோடி பரிசு மழை

0
248

அபுதாபியில் இருந்து வரும்போது விமான நிலையத்தில் இந்தியர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 13 கோடி ரூபாய் பரிசாக கிடைத்துள்ளது.

துபாய்:ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் சூப்பர்வைசராக பணியாற்றிவந்த இந்தியர் டோஜோ மேத்யூ(30). கேரள மாநிலத்தை சேர்ந்தவரான இவரது மனைவிக்கு சமீபத்தில் டெல்லியில் நர்சு வேலை கிடைத்தது.

மனைவியை சந்திப்பதற்காக கடந்த மாதம் 24-ம் தேதி இந்தியா புறப்பட்ட டோஜோ மேத்யூ, அபுதாபி விமான நிலையத்தில் அந்நாட்டு அரசு நடத்தி வரும் மாதாந்திர ‘பிக் லாட்டரி’ பரிசு சீட்டை வாங்கினார்.

201807041648076777_1_lottery00._L_styvpfஇந்தியா வந்து சேர்ந்த பின்னர் ‘பிக் லாட்டரி’ இணையதளத்தை பார்வையிட்டபோது, நேற்று நடைபெற்ற குலுக்கலில் முதல் பரிசான 70 லட்சம் திர்ஹம்கள் (இந்திய மதிப்புக்கு சுமார் 13 கோடி ரூபாய்) தனக்கு கிடைத்துள்ளதை அறிந்து டோஜோ மேத்யூ, ஆனந்தத்தில் திக்குமுக்காடிப் போனார்.

இவரைத்தவிர, 5 இந்தியர்கள் உள்பட 9 அதிர்ஷ்டசாலிகளுக்கு ஆறுதல் பரிசாக தலா ஒரு லட்சம் திர்ஹம்கள் கிடைத்துள்ளது.

முன்னதாக, அபுதாபி லாட்டரி குலுக்கல் வரலாற்றில் முதன்முறையாக கடந்த ஜனவரி மாதம் கேரளாவை சேர்ந்தவர் 1.2 கோடி திர்ஹம்களை ஜாக்பாட் பரிசாக பெற்றார் என்பது நினைவிருக்கலாம்.

தற்போது கிடைத்துள்ள பரிசு தொகையின் மூலம் கேரளாவில் சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்னும் தனது நெடுங்கால கனவு பலித்துள்ளதாக டோஜோ மேத்யூ தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.