ரவுடிகளால் தாக்கப்பட்ட காவலர் ராஜவேலு தப்பித்து ஓடும் காட்சி – வீடியோ வெளியிட்ட போலீசார்

0
191

காவலர் ராஜவேலுவை ரவுடிகள் தாக்கியதில் கழுத்தில் வெட்டப்பட்டு அங்கிருந்து தப்பி ஓடிவரும் காட்சிகள் அடங்கிய வீடியோவை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

சென்னை ராயப்பேட்டை பி.எம்.தர்கா குடிசைப் பகுதியில் ஒரு கும்பல் தகராறில் ஈடுபடுவதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ரகசிய தகவல் வந்தது.

இதையடுத்து இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ராஜவேலு உடனடியாக அங்கு விரைந்து சென்றார்.

அப்போது அங்கு ஏற்பட்ட தகராறில் அந்த கும்பல் காவலர் ராஜவேலுவை அரிவாளால் சரமாரியாக வெட்டியது.

இதுதொடர்பாக போலீசர் 6 பேர மீது வழக்கு பதிவு செய்து 6 பேரை கைது செய்தனர். அவர்களை விசாரணைக்காக அழைத்துச் சென்றபோது ரவுடி ஆனந்தன் தப்பினார்.

இதற்கிடையே, தப்பிச்சென்ற ரவுடி ஆனந்தனை சென்னை கோட்டூர்புரத்தில் ரவுடி ஆனந்தன் என்பவரை போலீசார் நேற்று இரவு என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர்.

ரவுடிகளை பிடிக்க சென்ற காவலர் மீது தாக்குதல் நடத்தியதால் தான் ரவுடி ஆனந்தனை என்கவுன்டரில் சுட்டுக் கொன்றோம் என கூடுதல் ஆணையர் சாரங்கன் தெரிவித்தார்.

இந்நிலையில், காவலர் ராஜவேலுவை ரவுடிகள் தாக்கியதில் கழுத்தில் வெட்டப்பட்டு அங்கிருந்து தப்பி ஓடிவரும் காட்சிகள் அடங்கிய வீடியோவை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோவில் ரவுடிகளிடம் வெட்டுப்பட்டதும் அங்கிருந்து தப்பி வரும் காட்சிகள் பதிவாகியுள்ளது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.