இட்லித் தட்டு, இச்சு தா, குளிக்க உதவி… பிக்பாஸில் புதிய கலாட்டாக்கள்! (பிக்பாஸ் சீசன் 2 : 16ம் நாள்-வீடியோ)

0
604

ஆங்கிலக் கலப்பு இல்லாமல் தமிழ் மொழியை உரையாடுதல், நீர் சிக்கனம் ஆகிய சமூகநலன் சார்ந்த இரண்டு சவால் போட்டிகள் இன்று பிக் பாஸ் வீட்டில் நடத்தப்பட்டன. சமூக அக்கறையோடு தங்களின் நிகழ்ச்சியின் உள்ளடக்கத்தை அமைக்கும் பிக்பாஸின் சேவை பாராட்டுக்குரியது….

இப்படியெல்லாம் எழுத வேண்டுமென்று ஆசைதான். ஆனால் அப்படியெதுவும் நடக்கவில்லை. பொதுநலனுக்காகவா.. இத்தனை செலவு செய்து நிகழ்ச்சியை நடத்துகிறார்கள்?

Yes! We could not converse in tamil exclusively, even for a minute. It is pathetic! தமிழும் சரியாக வராமல், ஆங்கிலத்தையும் தப்பும் தவறுமாக உபயோகித்துக் கொண்டு சில தலைமுறைகளை கடந்து விட்டோம்.

16-ம் நாளின் நிகழ்வுகள்.

யாஷிகா – மஹத் தடவல் முயற்சியில் கூட ஏற்படாத சர்ச்சை, பாலாஜி தன் பின்புறத்தை தானே தடவிக் கொண்ட போது ஏற்பட்டது ஒரு நகைமுரண். ஏற்கெனவே சொன்னபடி வாஸ்து சரியில்லாத கிச்சன் ஏரியாவில் இருந்துதான் நிறைய சண்டைகள் உற்பத்தியாகின்றன.

இன்றும் அப்படியொரு பஞ்சாயத்து. சமைக்கும் சமயத்தில் பாலாஜி இட்லித்தட்டை எடுத்து பின்புறத்தில் துடைத்தார் போலிருக்கிறது. (அல்லது சொறிந்து கொண்டரோ!)

இதை அருவருப்புடன் தூரத்தில் இருந்து கண்ட அனந்த், சென்றாயனை அனுப்பி தன் ஆட்சேபத்தை பாலாஜியிடம் நட்புமுறையில் சொல்லச் சொன்னார். பாலாஜி அதை மறுத்ததால் விஷயம் தலைவி வைஷ்ணவியிடம் சென்றது.

அவர் பாலாஜியிடம் நேராக சொல்லத் தயங்கி டேனியிடம் சென்று சொல்ல, அவரும் மிக இயல்பாக பாலாஜியிடம் அந்த விஷயத்தைச் சொல்ல,வருத்தமும் கோபமும் கலந்த குரலில் ‘நான் வேணா பாத்ரூம் க்ளீனிங்’ டீமிற்கு மாறிடறேன்’ என்றார், பாலாஜி.

(‘விஜய் டிவில கக்கூஸ் கழுவத்தான் லாயக்கு’ என்று தன்னை பாலாஜி வசைந்ததாக நித்யா ஒருமுறை சொல்லியிருக்கிறார்.

இப்போது அதே பணியை பாலாஜியே முன் வந்து கேட்பதைப் பார்க்கும்போது வாழ்க்கை எனும் நாடகத்தில் வரும் நகைச்சுவையான திருப்பங்களையும் முரண்களையும் உணர முடிகிறது. இதில் நமக்கும் கூட ஒருவகையான நீதியிருக்கிறது).

4_08213

மிக எளிய விஷயம்தான். ஒரு பிரச்னையை சம்பந்தப்பட்டவர்களிடம் சென்று நட்புத்தொனியில் நேராக பேசாமல் சுற்றி வளைத்துப் பேசுவதால் அது பெரிதாகத்தான் வளர்கிறது.

டேனி இதைக் கையாண்ட விதம் அபாரம். வீட்டில் இருக்கிறார்களா இல்லையா என்று சந்தேகப்படும்படி சந்தடியில்லாமல் இருப்பவர்கள் அனந்த் மற்றும் பொன்னம்பலம்.

‘தான் இருக்கிறேன்’ என்பதை அனந்த் இன்று நிரூபித்துவிட்டார். ‘இதுதான் விஷயம். சிறிய விஷயம்தான். இதை அறிந்து பாலாஜி கோபப்படுவார் என்றார் கோபப்படட்டும்.

இது சார்ந்த பக்குவம் வரவேண்டும்’ என்று அனந்த் சொல்வதும் சரிதான். (என்னவொன்று, இவர் ஹோட்டல்களுக்கு செல்லும் போது தப்பித் தவறி கூட கிச்சன் பக்கம் எட்டிப் பார்க்காமலிருப்பது நல்லது).

‘இதை நீ பதட்டமில்லாமல் நிதானமாக அணுகியிருக்க வேண்டும்’ என்று வைஷ்ணவிக்கும் உபதேசித்தார் அனந்த். மனிதர் இன்று உதிர்த்த தத்துவ முத்துக்கள் அனைத்தும் சிறப்பானது.

‘சின்ன விஷயத்தை பெரிசு பண்ணா.. இதை இன்னமும் பெரிசாக்க என்னால் முடியும்’ என்று சொன்னவர் ‘நீ உன் வேலையை ரொம்ப நல்லா பண்ண நெனக்காத. சொதப்பிடும். சுமாரா பண்ணு போதும். நல்லா வரும்” என்றெல்லாம் சொன்ன போது நமக்கு கண்ணீர் மல்கி புல்லரித்தது.

 

 

PART 1

PART 2

a

 

 

 

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.