16 வயது சிறுமி மணக்கோலத்தில் மீட்பு.. அவமானம் தாங்காத மணமகன் சிறுமியின் பட்டு சேலையிலேயே தூக்கிட்டு தற்கொலை..

0
833

மார்த்தாண்டம் அருகே 16 வயது சிறுமியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது, அதிகாரிகள் குறுக்கிட்டு மணப்பெண்ணை பிரித்துச் சென்றதால், அவமானம் அடைந்த புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பாறவிளையை சேர்ந்தவர் வினு (வயது 31), கட்டிட தொழிலாளி. இவருக்கும், தக்கலை அருகே கோழிப்போர்விளையை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் செய்ய இரு வீட்டாரும் பேசி முடிவு செய்தனர்.

அதன்படி, நேற்று முன்தினம் காலையில் இருவருக்கும் மண்டைக்காட்டில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் நடந்தது.

மாலையில், மார்த்தாண்டத்தில் உள்ள மணமகன் இல்லத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி அங்கு மேடையில் மணமக்கள் அமர்ந்திருந்தனர். உறவினர்களின் வருகையால் திருமண வீடு களைகட்டியிருந்தது.

201807040306289937_married-16-year-old-girl-youth-committed-suicide_SECVPF.gif

இந்தநிலையில், மணப்பெண்ணுக்கு 16 வயதே ஆவதாக மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி குமுதாவுக்கு தகவல் கிடைத்தது.

உடனே, அதிகாரி குமுதா மற்றும் சமூக நல அதிகாரி பியூலா, சைல்டு லைன் அமைப்பினர் திருமண வீட்டுக்கு விரைந்து சென்றனர்.

அங்கு மணப்பெண்ணிடம் விசாரணை நடத்திய போது அவருக்கு 16 வயதே ஆவது தெரிய வந்தது. உடனே திருமண வரவேற்பு நிகழ்ச்சியை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

இதனால் அங்கு திரண்டிருந்த உறவினர்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து, வினுவையும், சிறுமியையும் நாகர்கோவிலுக்கு அழைத்து சென்றனர். சிறுமியிடம் விசாரணை நடத்திய போது, அவர் தான் 10–ம் வகுப்பு வரை படித்து இருப்பதாகவும், தொடர்ந்து படிக்க விரும்புவதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அதற்கு நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர், அந்த சிறுமி நாகர்கோவிலில் உள்ள அரசு காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும், வினுவுக்கு அறிவுரை கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

காப்பகத்திலேயே தங்கி பள்ளி படிப்பை சிறுமி தொடர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதி தெரிவித்தனர். அத்துடன் மணமகன் வினுவுக்கும் அதிகாரிகள் அறிவுரை கூறினர்.

201807040306289937_1_93qfz4fv._L_styvpfஆனால் திருமணம் தடைபட்ட சம்பவம் வினுவுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது. சற்று நேரத்துக்கு முன்பு தாலி கட்டிய மனைவி தன்னுடன் இல்லையே என உறைந்து நின்றார்.

இதனால் அவர் வாடிய முகத்துடனே நீண்ட நேரம் இருந்தார். வீட்டுக்கு திரும்பி வந்தும் சோகத்துடனே வினு இருந்தார். பின்னர் நேற்று காலையில் நீண்ட நேரமாகியும் வினுவின் அறை திறக்கப்படவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, வினு மின்விசிறியில் தூக்கு போட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். சிறுமியின் பட்டு சேலையிலேயே வினு தூக்கு போட்டு கொண்டிருந்ததை கண்டு பெற்றோர் கதறி கதறி அழுதனர்.

இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் வினுவின் உடலை கைப்பற்றியதுடன், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையும் மேற்கொண்டனர்.

திருமண வீட்டுக்குள் நுழைந்த அதிகாரிகள் வரவேற்பு நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தியதால் அவமானம் தாங்காமலும் சிறுமி தனக்கு கிடைக்காத காரணத்தினாலும் புதுமாப்பிள்ளை வினு தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் முதல்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.