11 வயதில் 6 அடி உயரம் – உலக சாதனை படைத்த சிறுவன்!

0
221

சீனாவில் 11 வயது சிறுவன் ஒருவன் 6 அடி உயரம் வளர்ந்து இருப்பதால் உலகிலேயே உயரமான சிறுவன் என்னும் பெருமையை பெற்றுள்ளான்.

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தை சேர்ந்த ரேன் கேயூ என்ற 11 வயது சிறுவன் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வருகிறான். அந்த சிறுவனின் உயரம் 6 அடி ஆகும்.

இதுகுறித்து பேசிய அந்த சிறுவன், சிறு வயதிலிருந்தே மற்ற குழந்தைகளை விட நான் உயரமாக் இருந்தேன். உயரமாக் இருந்ததால் என்னால் பள்ளி நாற்காலியில் உட்கார முடியவில்லை. நான் உயரமாக இருப்பதால் என்னை விளையாட்டில் சேர்க்க தயங்குவார்கள். மேலும் பலர் என்னை அதிசயமாக பார்ப்பார்கள்.

இதனிடையே நான் 6 அடி உயரம் பெற்றிருப்பது கின்னஸ் சாதனை புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என அந்த சிறுவன் கூறியுள்ளான்

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.