கட்டிப் பிடிச்சு கட்டிப் பிடிச்சு தலைவியான வைஷ்ணவி! (பிக்பாஸ் சீசன் 2 : 15ம் நாள்!!-வீடியோ)

0
1012

இன்றைய தேதியில் தலைவர் ஆவதுதான் எளிய சமாச்சாரம்.  ஜனநாயகத்தில் அதற்கான குறுக்கு வழிகள் பல உள்ளன.

விசுவாசமான தொண்டர்களைத்தான் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது.  நேர்மையான கொள்கைகள் இருந்தால்தானே, தொண்டர்களும் இருப்பார்கள்? பிக்பாஸ் வீடும் இதற்கு விதிவிலக்கில்லை.

அடுத்த தலைவருக்கான தேர்தலை புதுமையான முறையில் நடத்தினார் பிக்பாஸ். அதிகம் கஷ்டமில்லை ஜென்டில்மேன்! மணியடித்ததும் எவர் ஓடிவந்து முதலில் கன்ஃபெஷன் ரூமில் உள்ள இருக்கையில் அமர்கிறார்களோ, அவரே தலைவர். ரொம்பவும் எளிதான வழிமுறை! ஆனால், அது வைஷ்ணவி வசம் செல்லும் என அப்போது யாரும் எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்கள்.

yashika_09426இதையே நம் பொதுத் தேர்தலுக்கும் பயன்படுத்தினால் எத்தனை விஷயங்கள் மிச்சமாகும்? இத்தனை கோடி செலவு செய்து, லட்சக்கணக்கான வாக்கு இயந்திரங்களை இம்சை செய்து, வேட்பாளர்கள் வெயிலில் அலைந்து வடை சுடும் பாட்டிகளின் காலில் பாவனையாக விழுந்து, மக்களுக்கு விடுமுறை கொடுத்து, வாக்களிக்க அவர்களை வேண்டி, அப்படியும் சிலபலர் டிவி ரிமோட்டுக்களை விட்டு பிரிய மனமில்லாமல்..

பிக்பாஸ் டீம் யோசிக்கும் இந்த எளிய விதியைப்  போலவே நம்முடைய ஜனநாயக நடைமுறைகளையும் அமைத்தால் தலைவருக்கான பாதைகள் இன்னமும் எளிமையாகும்.

‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்” என்கிற பாரதியின் கனவும் சாத்தியமாகக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. என்னவொன்று, ‘உசைன் போல்ட்’ போன்ற மின்னல் வேக ஓட்ட ஆசாமிகள் மட்டுமே தலைவராக அதிகம் வாய்ப்புண்டு.

அவர்கள் தொழில்முறை ஓட்டக்காரார்களாக இல்லையென்றாலும் கூட சில வருடங்களில் பெரும் பணத்தை சுரண்டிக் கொண்டு வெளிநாடுகளுக்கு ‘ஓடப்போகும்’ சாகசமும் எப்படியும் நடக்கத்தான் போகிறது.

ஆக.. பிக்பாஸ் வீட்டிலும் தலைவர் தேர்தல் என்கிற பெயரில் இப்படியொரு கேலிக்கூத்து நடந்தது. அதைப் பற்றி விளக்கமாக பார்ப்போம்.

aish_yashi_mahath_09474இந்த தேர்தல் கூத்துகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, ‘கெடக்கறதுக்கெல்லாம் கெடக்கட்டும், கிழவனை தூக்கி மனையில வையி’ என்கிற பழமொழியைப் போல், ஐஸ்வர்யா, ஷாரிக், மஹத், யாஷிகா கூட்டணியின் ‘லவ் மேட்டர்’ பஞ்சாயத்து தனியாக ஓடிக் கொண்டிருந்தது.

‘அது என்ன மேட்டர்.. என்று அறிந்து கொள்ள முயன்றால் அது காவிரி நீர் விவகாரத்தை விடவும் சிக்கலாக இருக்கும் போலிருக்கிறது. ஒன்றும் புரியவில்லை.

‘அவ இவனை லவ் பண்ணா.. இவன் இன்னொருத்தியை லவ் பண்ணான். பேபி பார்ம் ஆச்சு..” என்று தொலைக்காட்சி சீரியல்களைக் கிண்டலடித்து, ஒரு திரைப்படத்தில் விவேக் சொல்லும் நகைச்சுவை வசனம்தான் நினைவிற்கு வருகிறது.

‘இது லவ்ஸ் மேட்டாரத்தான் இருக்கும். இருங்கடா.. நானும் வரேன்’ என்கிற கவுண்டமணி கணக்காக குதித்தோடி கிளம்பி… ரொம்பவும் மெனக்கிட்டாலும் கூட ஒருமாதிரி ‘குன்சாகத்தான்’ புரிந்து கொள்ள முடிந்தது.

இந்த ஷாரிக் பயல் வந்ததில் இருந்தே ஐஸ்வர்யாவை தொடர்ந்து மோப்பம் பிடித்துக் கொண்டிருந்தான். பாவம், அந்தப் பெண்ணும் அப்பாவித்தனமாக, இவன் வழிவதை காதல் என்று நினைத்துக் கொண்டிருந்தது போல.

இப்போதுதான் தெரிய வந்திருக்கிறது, ஷாரிக்கிற்கு ‘A’ என்கிற பெயரில் துவங்கும் ஒரு காதலி இருக்கிறார் போலிருக்கிறது.

ஷாரிக், ஐஸ்வர்யாவிடம் வழிவதை தொலைக்காட்சியில் பார்த்து விட்டு… ‘மவனே.. டாய்.. நான் ஒருத்தி வெளியில் இருக்கறப்ப…’ என்று நினைவுப்படுத்தும் படியாக எம்பிராய்டரி போட்ட சட்டையை அவனுடைய காதலி ஷாரிக்கிற்கு அனுப்பியிருக்கிறார்.

பயபுள்ள அந்த ‘மிரட்டல் குறியீட்டைப்’ பார்த்ததும் ஃபீலிங்ஸ்ஸூம் குழப்பமும் கலந்த உணர்வில் தள்ளாடுகிறார்.

ஷாரிக்கிற்கு ஏற்கெனவே இருக்கும் ‘லவ்’ விஷயத்தை அறிந்த ஐஸ்வர்யா பயங்கர அப்செட் ஆகி தன் நெருங்கிய நண்பர்களான யாஷிகா, மஹத் ஆகியோரிடம் பேசாமல் இருக்க… அவர்கள் பதிலுக்கு கோபப்பட..ஒரே ‘கசமுசா’. வெளியில் ஒரு காதலி இருந்தும் ஷாரிக் தன்னை தற்காலிகமாக பழக முனைவதைப் போல மஹத் – யாஷிகா கூட்டணியும் போலியாக இருக்கும் போல என்று ஐஸ்வர்யா கருதுவதால் அவர்களின் மேல் கோபமாகவும் இருக்கிறார் என்று தோன்றுகிறது.

‘யாரைத்தான் நம்புவதோ பேதையின் நெஞ்சம்’ என்கிற மோடில் இருக்கிற ஐஸ்வர்யா, தனக்கு வந்த வெறுப்பில் ‘என்னை நாமினேட் பண்ணுங்க’ என்றொரு அதிரடி அறிவிப்பை பொதுவில் வெளியிட மற்றவர்கள் சமாதானப்படுத்தினார்கள்.

‘தானும் வெளியேறுகிறேன்’ என்றொரு விளையாட்டான அறிவிப்பை மஹத் தெரிவித்து மேலும் குட்டையைக் குழப்பியிருக்கிறார் போலிருக்கிறது.

‘நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா சுத்திட்டு இருந்தீங்க.. கண்ணு பட்டுடுச்சு’ என்பது யாஷிகா –ஐஸ்வர்யா பிரிவைப் பற்றிய ஜனனியின் விஞ்ஞானபூர்வ கருத்து. ஒருத்தரையொருத்தர் பிராண்டிக் கொண்டு … பேசி.. பேசி.. இறுதியில் ஒருமாதிரியாக தற்காலிக சமாதானத்திற்கு வந்திருக்கிறார்கள். சுபம்.

‘ஒன்றுமே புரியவில்லையே’ என்கிறீர்களா? பரவாயில்லை, விடுங்கள். You are not missing anything.

இது அப்படியொன்றும் உலகமகா பிரச்னையில்லை. எனக்கும்தான் புரியவில்லை. இத்தனை விவரமாக நான் எழுதிக் கொண்டிருக்கவில்லை?

முதல் சீஸனில் ஆரவ் – ஓவியா கூட்டணிக்கு நிகழ்ந்த சம்பவங்கள் ஏறத்தாழ ஐஸ்-ஷாரிக் கூட்டணிக்கு அப்படியே நடப்பதைப் பார்க்கும் போது அந்த சீஸனின் ‘ஸ்கிரிப்ட் ரைட்டர்’தான் இதிலும் பணிபுரிகிறாரோ என்கிற சந்தேகமும் ஒருபுறம் தோன்றாமல் இல்லை.

தொடர்ந்து தொடரை வீடியோ வில் பார்வையிடுங்கள்

SOURCE 3

PART 1

PART 2

 

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.