யாழில் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு பொலிஸ் உத்தியோகத்தர் தற்கொலை

0
171

யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதியில் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (03) மதியம் 2.30 மணியளவில் மல்லாகம் பகுதியில் உள்ள உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

திருகோணமலைப் பகுதியைச் சேர்ந்த நசீர் எனும் 25 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காங்கேசன்துறைப் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இந்த பொலிஸ் உத்தியோகத்தர் கடந்த சில தினங்களாக வீட்டுக்காரர்களுடன் ஏதோ பிரச்சினைகளுடன் இருந்து வந்ததுடன், வீட்டுக்காரர்களுடன் தொலைபேசியில் கடுமையாக கதைத்ததாகவும் சக பொலிஸ் உத்தியோகத்தர்கள் அவதானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.