பல்டியடித்தார் விஜயகலா!! புலிகள் தலை துாக்கமுடியாது!! ஊடகவியலாளர் முன் அழுதார்!!

0
561

நான் பதற்றத்தில் அவ்வாறு கூறிவிட்டேன். விடுதலைப் புலிகள் மீளவும் புத்துயிர் பெற முடியாது. போதைப்பொருளால் ஏற்படும் அச்சுறுத்தல்களை நிறுத்தவேண்டும் என்பதே எனது நோக்கம்”

இவ்வாறு மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இன்று பல்டி அடித்தார்.

பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசியில் உரையாடிய போதே அவர் இன்று இதனைத் தெரிவித்தார்.

பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போது, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு கைபேசியில் தொடர்புகொண்டு உரையாடினார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த நிகழ்வில் “விடுதலைப் புலிகளின் கை ஓங்கவேண்டும்” என்று தெரிவித்த கருத்துத் தொடர்பில் அவரிடம் ரஞ்சன் ராமநாயக்க கேள்வி எழுப்பினார்.

செய்தியாளர்களுக்கு விளங்கும் வகையில் அவுட் ஸ்பீக்கிரை ஓன் செய்து ரஞ்சன் ராமநாயக்க உரையாடினார்.

இதன்போதே மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

இதே வேளை விஜயகலா கொஞ்ச உணர்ச்சிவசப்பட்டவர் என்றும் பல விதமான உணர்ச்சிவசப்பட்ட நடவடிக்கைகளால் அவருக்கு பாரிய பிரச்சனைகள் உருவாகியது எனவும் விஜயகலாவுடன் நெருக்கமான சிலர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.