ஹாலிவுட் ஸ்டைலில் ஷாக் சண்டை: சிறையில் குண்டு வீசி ஹெலிகாப்டரில் தப்பிய கொள்ளையன்!

0
215

சினிமாக்களில் பார்க்கிற ஆக்‌ஷன் காட்சிகள் சில வேளைகளில் நிஜத்திலும் நடந்துவிடுகிறது. ஆனால், இந்த ஆக்‌ஷன் காட்சி, ஹாலிவுட் படங்களில் இடம்பெறும் ஹைடெக் வகையை சேர்ந்தது.

பிரான்சை சேர்ந்த பிரபல கொள்ளையன், ரெடொயின் பெய்ட் (Redoine Faid). சினிமாக்களில் பார்த்திருக்கிற கோட், ஷூட் அணிந்த ஸ்டை லிஷான வில்லனை ஞாபகபடுத்துகிற உருவம் பெய்ட்டுக்கு.

பிரான்சின் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் இருந்த பெய்ட், 2010-ல் நடந்த வங்கி கொள்ளை தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார்.

அவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன், 25 வருட சிறை தண்டனை விதித்தது கோர்ட். இதையடுத்து பாரிஸின் தென்கிழக்கு புறநகர் பகுதியில் உள்ள சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்று காலை பெய்டை பார்க்க அவரது தம்பி வந்திருந்தார். பாரவையாளர்கள் அறையில் 11.15 மணியளவில் அவருடன் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது இரண்டு பேர் சிறையின் முன் வாயிலில் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். அதைக் கண்டதும் ஆயுதமில்லாத காவலர்கள் அலறியடித்து ஓடி அலாரத்தை அழுத்தினர்.

இதற்கிடையே சிறையின் உள்ளே இரண்டு கைதிகள் துணையுடன் வெளியே வந்தார் பெய்ட்.

114703_France1திடீரென்று புழுதிபறக்க வட்டமடித்தது ஹெலிகாப்டர் ஒன்று. அதில் இருந்து தொங்கிய கயிற்றைப் பிடித்துக்கொண்டு ஹீரோ போல ஜிவ்வென்று ஏறினார் பெய்ட். அவர் ஏறிய அடுத்த நொடியே பறந்தது ஹெலிகாப்டர். எல்லாம் சில நிமிடங்களில் நடந்து முடிந்துவிட்டது.

அலாரம் கேட்டு காவலர்கள் அனைவரும் ஒன்று கூடி வந்து பார்ப்பதற்குள் மாயமாகி இருந்தார் பெய்ட்.

பிறகு அந்த ஹெலிகாப்டரை பாரிஸின் புறநகர் பகுதியில் கண்டு பிடித்த போலீசார் அதைச் சுற்றி வளைத்தனர்.

அப்போதுதான் தெரிந்தது, அது கடத்தி வரப்பட்ட ஹெலிகாப்டர் என்று. பயிற்சி ஹெலிகாப்டரான அதன் ஓனர், தனது மாணவர்களுக்காக காத்திருக்கும்போதுதான், பெய்டின் ஆட்கள் உள்ளே ஏறி, துப்பாக்கி முனையில் ஹெலிகாப்டரை இயக்கச் சொல்லியிருக்கிறார்கள்.

 

111004_France2சிறையில் இருந்து இப்படி தப்புவது பெய்ட்டுக்கு புதிதில்லை. ஏற்கனவே 2013-ம் ஆண்டு , துப்பாக்கி முனையில் 4 சிறைகாவலர்களை பிணைக் கைதிகளாக பிடித்துக்கொண்டு, வெளியே தயாராக நின்ற காரில் தப்பியிருக்கிறார். அடுத்த ஆறு வாரத்துக்குப் பிறகு புறநகர் பகுதியில் சிக்கினார்.

பெய்ட் அநியாயத்துக்கு சினிமா பிரியர். 2009-ல் பாரிஸில் நடந்த திரைப்பட விழாவில் ’ஹீட்’ என்ற ஹாலிவுட் படத்தின் இயக்குனர் மைக்கேல் மானிடம், ‘நீங்க தான் என்னோட டெக்னிக்கல் அட்வைசர்.

வங்கியில எப்படி கொள்ளையடிக்கணும்னு அந்தப் படத்துல ரொம்ப தெளிவா காண்பிச்சிருந்தீங்க. படத்தை 12 முறை பார்த்தேன்’ என்று கூறியிருக்கிறார் பெய்ட். இவரது கிரைம் மூளைக்கு காரணமான இன்னொரு ஹாலிவுட் படம், ’சேக்ரிஃபைஸ்’

பிரான்ஸ் முழுவதும் பெய்ட்டுக்கு வலை விரித்திருக்கிறது போலீஸ்!

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.