மணமேடையில் வைத்து தன்னை தூக்கிய நபரின் கன்னத்தில் அறைந்த மணப்பெண்! வைரல் வீடியோ

0
729

இந்தியாவில் நடைபெறும் திருமணங்களில் சுவாரசிய நிகழ்வுகளுக்கு ஒருபோதும் பஞ்சமிருக்காது.

சமீபத்தில் வட இந்திய மாநிலத்தில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் தன்னை தொட்டு தூக்கிய நபரை மணமேடையில் வைத்து மணமகள் அடித்துள்ளார்.

இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் மணமக்கள் இருவரும் மாலையை மாற்றிக்கொள்ள முயல்கின்றனர்.

அப்போது, இவர்களின் முறைப்படி மணமகள் மற்றும் மணமகனை உறவினர்கள் தூக்கிக்கொள்ள மணமக்கள் மாலைமாற்றிக்கொள்வார்கள்.

இதன்போது, மணமகனை அவரது உறவினர் தூக்கியுள்ளார். மணமகளை இளம்வயது நபர் ஒருவர் தூக்கியுள்ளார். மாலைமாற்றிய பின்னர், மணமகள் தன்னை தூக்கிய நபரை அனைவர் முன்னிலையில் வைத்து கன்னத்தில் அறைந்துள்ளார்.

தூக்கும்போது தவறு நடந்துள்ளதால் இப்படி கன்னத்தில் அறைந்துள்ளார் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.